தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை.. மொத்தமாக அள்ளி செல்லலாம்.. துபாய் தரும் பெரிய ஆஃபர்
துபாய்: ஈரான் மீது அமெரிக்கா இஸ்ரேல் நாடுகள் போரை தொடங்கி உள்ளதால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி மந்தமாகி உள்ளது. இந்நிலையில் தான் தேங்கியிருக்கும் தங்கத்தை தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் போரை தொடங்கி உள்ளன. இதற்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் உள்ள அரபு நாடுகளை குறிவைத்து தாக்கி வருகிறது. அதில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று. அதன்படி துபாய் ஏர்போர்ட் உள்பட பல இடங்களை ஈரான் தாக்கி உள்ளது.

தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இன்று கூட ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தலாம். இதனால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். வெளியே வர வேண்டாம் என்று துபாய் மக்களுக்கு செல்போன்களில் அலர்ட் மெசேஜ் அனுப்பி வைக்கப்பட்டது.
துபாயில் தாக்குதல்
மேலும் இந்த போரின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக உலகிலேயே பிஸியான ஏர்போர்ட்டான துபாய் ஏர்போர்ட்டில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கத்தாரில் இருந்து பிற நாடுகளுக்கு வர்த்தகம் என்பது ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தான் நடக்கும். தற்போது அதனையும் ஈரான் மூடியுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தம் முடங்கி உள்ளது.
5–7 சதவீதம் வரை குறைவு
குறிப்பாக துபாயும் விதிவிலக்கல்ல. தங்கம் விற்பனைக்கு துபாய் பெயர் பெற்றது. குறிப்பாக, 'தங்க நகரம்' என அழைக்கப்படும் துபாயில் தங்கம் குவிந்து கிடக்கிறது. பொதுவாகவே இந்தியாவை ஒப்பிடும்போது துபாயில் தங்கம் விலை குறைவு.
துபாயில் தங்கம் மீதான வரிகள் குறைவாக உள்ளன. இதனால் அங்கு தங்கம் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மும்பை, புனே, கொல்கத்தா போன்ற நகரங்களை விட 5-7% வரை துபாயில் தங்கம் விலை குறைவாக இருக்கும்.
தள்ளுபடி விலையில் விற்பனை
ஆனால் தற்போது போர் காரணமாக தங்கத்தை ஏற்றுமதி செய்ய முடியாமல் வர்த்தகர்கள் தவித்து வருகின்றனர். விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளதால் வர்த்தகர்கள் தங்களின் தங்கத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதன்படி தற்போது துபாயில் தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. துபாயில் உள்ள தங்க வியாபாரிகள் தங்கள் இருப்புகளை விரைவில் விற்க தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர். அதன்படி தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 30 அமெரிக்க டாலர் வரை தள்ளுபடி வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் விலை உயர வாய்ப்பு
அதேவேளையில் நம் நாடு தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. பிரிட்டன், சுவிட்சர்லாந்து, ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு வரும் தங்கம் துபாய் வழியாக தான் வருகிறது. இந்த போர் சூழல் காரணமாக துபாயில் இருந்து தங்கம் ஏற்றுமதி தொடர்ந்து பாதிக்கப்பட்டால் நம் நாட்டில் போதிய அளவு தங்கம் கிடைக்காத நிலையை உருவாக்கும். இது தங்கம் மற்றும் ரத்தினம் சார்ந்த தொழில்களை பாதிக்க கூடும்.
அதோடு தங்கம் இறக்குமதியில் தொடர்ந்து பாதிப்பு இருக்கும் பட்சத்தில் நம் நாட்டில் விலை கிடுகிடுவென உயரலாம் என்கின்றனர் நிபுணர்கள். நம் நாட்டில் அடுத்தடுத்து திருமண சீசன் மற்றும் பண்டிகைகள் நெருங்கி வருகிறது. இப்படியான சூழலில் பலரும் தங்கம் வாங்குவார்கள். இந்த சமயத்தில் போர் வந்திருப்பது தங்கம் விலையை நம் நாட்டில் உச்சத்துக்கு கொண்டு செல்லலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
-
கோடம்பாக்கத்தில் காதல் பிரச்சனை.. ரொக்க பரிசு... இறுதியாக இரண்டு பேர் போன இடம் புழல் சிறை -
தங்கம் இப்போ வாங்கலாமா? 2 மாத சரிவில் தத்தளிக்கும் கோல்டு ரேட்.. மக்கள் என்ன செய்ய வேண்டும்? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications