"அவரை அனுப்பிடுங்க".. மூத்த வீரரை திரும்பி போக சொன்ன பிசிசிஐ.. தடுத்து நிறுத்திய தோனி.. செம பின்னணி
துபாய்: இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தில் இருந்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2019 உலகக் கோப்பை 50 ஓவர் தொடரில் இந்திய அணி எதிர்கொண்ட மிக முக்கிய பிரச்சனை மிடில் ஆர்டர். 4வது இடத்தில் இறங்குவதற்கு நல்ல பேட்ஸ்மேன் இல்லாமல் இந்திய அணி வீரர்கள் கடுமையாக சிரம்பட்டுக் கொண்டு இருந்தனர். இந்த நிலையில் 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி எதிர்கொண்டு இருக்கும் பிரச்சனை 5வது பவுலிங் ஆப்ஷன்.
நல்ல பாஸ்ட் பவுலிங் ஆல் ரவுண்டர் இல்லாமல் இந்திய அணி கடுமையாக திணறிக்கொண்டு இருக்கிறது. எப்போதும் ஜடேஜா உட்ப 4 பவுலர்கள் + ஒரு ஆல் ரவுண்டர் என்றுதான் இந்தியா வீரர்களை தேர்வு செய்யும். ஆனால் ஹர்திக் பாண்டியா பவுலிங் போடாத காரணத்தால் அவரை முழு நேர பேட்ஸ்மேனாக இந்தியா களமிறக்கி உள்ளது.

மோசம்
இதனால் இந்திய அணியில் பேட்டிங்கில் ஒரு ஆள் குறைவாக உள்ளது. ஹர்திக் பாண்டியா பவுலிங் போடாத காரணத்தால் கூடுதலாக ஒரு பவுலரை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பேட்டிங் - பவுலிங் ஆல் ரவுண்டர் ஒருவர் களமிறங்கினால் அணிக்குள் இன்னும் சமநிலை ஏற்படும். இதனால் அடுத்த போட்டியில் பாண்டியா பவுலிங் போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இரண்டு ஓவர்கள்
குறைந்தபட்சம் இரண்டு ஓவர்களை ஹர்திக் பாண்டியா வீசினாலும் கூட அது இந்திய அணிக்கு பயனளிக்க கூடியதாக இருக்கும். இதற்காகவே ஹர்திக் பாண்டியா இரண்டு நாட்களாக பவுலிங் பயிற்சி எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை பிசிசிஐ தேர்வுக்குழு உறுப்பினர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தில் இருந்ததாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video

என்ன நடந்தது
2021 ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதி ஆட்டத்திற்கு முன்தான் உலகக் கோப்பை டி 20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன்பின் நடந்த இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா சரியாக பேட்டிங் செய்யவில்லை. பவுலிங்கும் போடவில்லை. இவரின் ஆட்டம் மிக மோசமாக இருந்தது. இதனால் இவரை உலகக் கோப்பை டி 20 அணியில் இருந்து நீக்கும் திட்டத்தில் பிசிசிஐ இருந்ததாக கூறப்படுகிறது.

வீட்டிற்கு அனுப்பலாம்
துபாயில் இருந்து இவரை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பும் திட்டத்தில் பிசிசிஐ இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான மீட்டிங்கும் நடந்துள்ளது. இவருக்கு பதிலாக வெங்கடேஷ் ஐயர் போன்ற வீரர்களை உள்ளே கொண்டு வரும் திட்டத்தில் பிசிசிஐ இருந்துள்ளதாம். ஆனால் அப்போது அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டு இருந்த தோனிதான் இதை தடுத்து நிறுத்தினார் என்று கூறப்படுகிறது.

பிசிசிஐ தகவல்
பிசிசிஐ வட்டாரங்கள் வெளியிட்ட தகவலின்படி, தோனிதான் ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாக இருந்தார். பாண்டியா இருக்கட்டும். அவர் ஆட்டத்தை பினிஷ் செய்ய கூடியவர். கூடுதலாக வேண்டுமானால் ஷரத்துல் தாக்கூரை உள்ளே கொண்டு வரலாம் என்று தோனி கூறி உள்ளார். ஹர்திக் பாண்டியாவின் ஹிட்டிங் திறன் காரணமாக தோனி அவருக்கு ஆதரவாக நின்றார் என்று கூறப்படுகிறது.

மாற்றம்
இதன் பின்பே இந்திய அணியை மாற்றும் போது ஹர்திக் பாண்டியாவை நீக்காமல் அணிக்குள் ஷரத்துல் தாக்கூர் கொண்டு வரப்பட்டார். இதற்காக அக்சர் பட்டேல் நீக்கப்பட்டார். அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை நீக்காமல் தடுத்து நிறுத்தியது தோனிதான் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications
