சதி.. இப்படி இருந்தா எப்படி ஆடுவீங்க? அடுத்தடுத்து தோல்வி அடைந்த இந்தியா.. நெருக்கடியில் ஐசிசி!

Subscribe to Oneindia Tamil

துபாய்: உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் அடுத்தடுத்து தோல்வி அடைந்துள்ளது. இந்திய அணியின் தோல்விக்கு பனிப்பொழிவு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக வரிசையாக இந்தியா வீழ்ந்துள்ளது. இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கு வீரர்களின் மோசமான பார்ம் காரணம் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகளை கூட எளிதாக வீழ்த்தியது.

இந்திய பேட்ஸ்மேன்கள், பவுலர்கள் எல்லோருமே சிறப்பாக ஆடினார்கள். ஆனால் லீக் ஆட்டங்களில் இப்போது இந்திய வீரர்கள் மோசமாக சொதப்பி உள்ளனர்.

இந்தியா

இந்தியா

இந்திய அணியின் தோல்விக்கு இரண்டு போட்டியிலும் பிட்ச்தான் முக்கிய காரணம். இரண்டு போட்டியிலும் இந்திய அணி டாஸ் தோல்வி அடைந்தது. இரண்டிலும் இந்திய அணிதான் முதலில் பேட்டிங் செய்தது. இதுதான் இந்திய அணிக்கு எதிராக திரும்பி உள்ளது. முதலில் பேட்டிங் இறங்கும் அணிக்கு பந்து ஸ்விங் ஆவதால் பேட்டிங் செய்வது கஷ்டமாக இருக்கிறது. பந்து எப்படி செல்கிறது என்று தெரியாமல் வீரர்கள் திணறி வருகிறார்கள்.

பிட்ச்

பிட்ச்

இந்திய அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் இந்த தொடரில் இரண்டு போட்டியிலும் சொதப்ப பந்து ஸ்விங் ஆனதுதான் காரணம். இதனால் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் பனிப்பொழிவு காரணமாக பந்து ஈரமாகி ஸ்விங் செய்ய கஷ்டமாகும். பிட்ச் டிரை பிட்ச் என்பதால் பனி வந்ததும் ஆட்டமே மாறுகிறது. அதேபோல் பவுலர்கள் யார்க்கர், ஸ்பின் பவுலிங் செய்வது கடினமாக இருக்கும். இதனால் இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது எளிதாக இருக்கும்.

 பனிப்பொழிவு

பனிப்பொழிவு

இரண்டாவது இன்னிங்சில் எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் எளிதாக எடுக்க முடியும். அதேபோல் எளிதாக ஷாட் அடித்தால் சிக்ஸ் செல்லும். இதுதான் இரண்டு போட்டியிலும் இந்திய அணிக்கு எதிராக திரும்பியது. இந்திய அணியின் தோல்விக்கு இரண்டு போட்டியிலும் இதுதான் காரணமாக அமைந்தது. வீரர்கள் எவ்வளவு திறமையாக இருந்தாலும் டாஸ் தோல்வி அடைந்தால் மேட்ச் முடிந்தது என்ற நிலைதான் ஏற்பட்டுள்ளது.

Recommended Video

    IND vs NZ: 5 interesting stat facts | T20 World Cup 2021 | OneIndia Tamil
    பாகிஸ்தான்

    பாகிஸ்தான்

    பாகிஸ்தானுக்கு எதிராகவும், நியூசிலாந்துக்கு எதிராகவும் ஒருவேளை இந்தியா டாஸ் வென்று இருந்தால் ஆட்டமே வேறு மாதிரி இருந்திருக்கும். இந்திய அணிக்கு எதிராக பிட்ச்தான் சதி செய்துள்ளது. எவ்வளவுதான் திறமையாக இருந்தாலும் டாஸ் தோல்வி அடைந்தால் ஆட்டம் க்ளோஸ் என்ற நிலை பல அணிகளுக்கு எதிராக சென்றுள்ளது. ஆஸ்திரேலியா இங்கிலாந்துக்கு எதிராக தோற்கவும் இதுவே காரணம்.

    டாஸ்

    டாஸ்

    டாஸ் வெல்லும் அணிக்கு மட்டும் இருக்கும் இந்த சாதகமான சூழ்நிலை, ஆட்டத்தின் சமநிலையை குலைக்கிறது. இது பிட்ச் செய்யும் சதி.. இதற்கு ஏற்றபடி உடனே ஐசிசி விதிகளை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. டாஸ் வென்றால் ஆட்டம் முடிந்தது என்ற நிலை கிரிக்கெட்டின் சுவாரசியத்தை காலி செய்கிறது என்று பலர் ஐசிசிக்கு இது தொடர்பாக கோரிக்கைகளை விடுக்க தொடங்கி உள்ளனர்.

    சதி

    சதி

    இப்படி இருந்தால் எப்படி ஆடுவது? ... ஒன்று விதிகளை மாற்ற வேண்டும் அல்லது பிட்சை அதற்கு ஏற்றபடி தயார் செய்ய வேண்டும். அல்லது ஆடும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த உலகக் கோப்பை டி 20 தொடர் வங்கதேசத்தில் நடந்த போதும் பனிப்பொழிவு பல ஆட்டங்களை பாதித்தது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+