ஏன் இப்படி? மூத்த வீரரால் தேவையில்லாத ரிஸ்க் எடுக்கும் இந்திய அணி?.. மென்டர் தோனி என்ன செய்கிறார்

Subscribe to Oneindia Tamil

துபாய்: நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 உலகக் கோப்பை போட்டிக்காக தயாராகி வரும் இந்திய அணி தேவையில்லாத ஒரு ரிஸ்க் எடுக்கிறதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்திய அணியின் வலைப்பயிற்சி தொடர்பாக வெளியாகி உள்ள சில செய்திகள் இந்த கேள்விகளை எழுப்பி உள்ளன.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்த இந்தியா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்காக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. பாகிஸ்தானின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் இந்தியா படுதோல்வி அடைந்தது.

இதனால் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக பவுலிங் செய்ய வேண்டும் என்று இந்திய பவுலர்கள் தீவிரமாக வலைப்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணியில் கோலி, பண்ட் தவிர யாரும் பெரிதாக ஆடவில்லை. பவுலர்களும் சரியாக ஆடவில்லை. ஹர்திக் பாண்டியாவோ ஆல் ரவுண்டராக களமிறங்காமல் முழு பேட்ஸ்மேனாக களமிறங்கினார். இதனால் அவர் பவுலிங்கும் செய்யவில்லை. பேட்டிங்கிலும் வெறும் 8 பந்தில் 11 ரன்கள் எடுத்து காயத்தோடு அவுட்டாகி வெளியேறினார்.

காயம்

காயம்

இந்த நிலையில்தான் காயம் சரியாகி உள்ள பாண்டியா அடுத்த போட்டியிலும் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவருக்கு காயம் குணமாகி உள்ளதால் அடுத்த போட்டிக்காக பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இதனால் ஒருவேளை இந்திய அணி இவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிலும் இவர் தற்போது தீவிர பவுலிங் பயிற்சி செய்து வருகிறார்.

Recommended Video

    Quinton de Kock apologised on Racism Issue | Black Lives Matter | OneIndia Tamil
    பாண்டியா

    பாண்டியா

    நேற்று 20 நிமிடம் தொடர்ச்சியாக பவுலிங் செய்து பாண்டியா பயிற்சி எடுத்தார். இதனால் அவருக்கு இந்திய அணிக்குள் மீண்டும் வாய்ப்பு கொடுத்து பவுலிங் செய்ய வைக்கும் ரிஸ்க்கை எடுக்கிறார்களோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இவர் பவுலிங் செய்யும் பட்சத்தில் 5வது பவுலர் நீக்கப்பட்டு கூடுதல் பேட்ஸ்மேன் அணிக்குள் வருவார் என்பது ஒருவகையில் நல்ல விஷயம்தான்.

    பாண்டியா பவுலிங்

    பாண்டியா பவுலிங்

    அதாவது பாண்டியா பவுலிங் செய்யும் பட்சத்தில் வருண், ஜடேஜா, ஷமி (அல்லது புவனேஷ்வர் குமார்), பும்ரா ஆகிய நான்கு பவுலர்கள் மட்டுமே ஆட அதிக வாய்ப்பு உள்ளது. ஷமி அல்லது புவனேஷ்வர் குமாரில் ஒரு பவுலர் நீக்கப்பட்டு கூடுதல் பேட்ஸ்மேன் உள்ளே வர வாய்ப்பு உள்ளது. அதாவது புவனேஷ்வர் குமார் போன்ற புல் டைம் பவுலரை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக இஷான் கிஷான் போன்ற பேட்ஸ்மேனை உள்ளே கொண்டு வந்து.. பாண்டியாவை கூடுதல் பவுலராக இந்தியா பயன்படுத்துமோ என்று கேள்வி எழுந்துள்ளது.

    ரிஸ்க்

    ரிஸ்க்

    பேட்டிங் ரீதியாக பார்த்தால் அது நல்ல விஷயம்தான். ஆனால் பவுலிங் ரீதியாக இந்தியா ஏற்கனவே வீக்காக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா பவுலிங்கை நம்பி புல் டைம் பவுலரை நீக்கும் ரிஸ்க்கை இந்தியா எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவின் பவுலிங் அவ்வளவு வலிமையாக இல்லாத நிலையில் இந்த ரிஸ்க் தேவைதானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    தோனி

    தோனி

    இரண்டு வருடமாக பவுலிங் போடாத ஹர்திக் பாண்டியாவை 5வது பவுலராக நம்பி இறங்குவது மிகப்பெரிய ரிஸ்க்காக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பாண்டியாவை நீக்க மனமின்றி கோலி இப்படி செய்கிறாரா என்று கேள்வி நிலவி வருகிறது. இந்த முடிவுகளில் மென்டராக தோனி என்ன செய்வார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக தோனி கூடுதல் பவுலர்களுடன் செல்வதை விரும்புவார் என்பதால் புல் டைம் பவுலரை நீக்கும் முடிவை அவர் ஏற்றுக்கொள்வாரா என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+