கோலி படைக்கு மேலும் ஒரு சோதனை.. கெத்தாக களமிறங்கும் நியூசி.யின் அதிரடி சூரர்.. என்ன நடக்க போகுதோ!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை தொடரில் இன்று இரவு மிக முக்கியமான போட்டி நடைபெற உள்ளது. இந்தியாவும்-நியூஸிலாந்தும் வாழ்வா? சாவா? போட்டியில் பலப்பரிட்சை நடத்துகின்றன.
இந்த தொடரில் இரு அணிகளுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. இரு அணிகளுமே பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்து வந்துள்ளன. பாகிஸ்தானுடன் இந்தியா படுதோல்வி அடைந்து இருந்தாலும், நியூசிலாந்து போராடி கடைசியில்தான் மேட்சை கை விட்ட

நியுசிலாந்து அணியின் பிளெயிங் லெவன்
இந்த முக்கியமான போட்டியில் இந்தியாவில் இந்த வீரரை சேர்க்க வேண்டும்? அவரை நீக்க வேண்டும்? என்ற கருத்துக்கள், விவாதங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. மறுபக்கம் இந்தியாவுடன் மோதும் நியூசிலாந்தும் எளிதில் விட்டுக்கொடுக்கும் அணி கிடையாது. நியுசிலாந்து அணியின் பிளெயிங் லெவனை பார்த்தால் கொஞ்சம் பயங்கரமாகவே இருக்கிறது.

டிரெண்ட் பவுல்ட் வேகம்
முதலில் பவுலர்கள் வரிசையில் சென்றால் டிரெண்ட் பவுல்ட். உலகின் சிறந்த பவுலர்களில் ஒருவர். இந்திய டாப் ஆர்டரை ஆட்டம் காண வைத்த பாகிஸ்தானின் ஷாகின் அப்ரிடிபோல் டிரெண்ட் பவுல்ட்டும் சிறப்பாக இன்ஸ்சுவிங் போட கூடியவர் என்பதால் இந்திய தொடக்க வீர்ரகளுக்கு சற்று சிரமம்தான். மேலும், பவுலர் இஷ் சோதியும் இந்தியாவுக்கு 12 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகள் எடுத்து கவனிக்க வைக்கிறார்.

கேன் வில்லியம்சன் என்னும் தூண்
நியூசிலாந்து அணியின் தூணாக விளங்கும் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு கடந்த 3 போட்டிகளில் 91 ரன்கள், 51 ரன்கள் குவித்துள்ளார். இன்றும் இவர் மிரட்டவாய்ப்புள்ளது. நியுசிலாந்து அதிரடி வீரர் கான்வே இந்த வருடம் டி 20 போட்டிகளில் 326 ரன்கள் குவித்து 54.33 என்ற ஆவரேஜ் வைத்துள்ளார். இது தவிர ஆல்ரவுண்டர்கள் ஜேமிசன், மிட்சல், ஜேம்ஸ் நீசம் என்று தரம் வாய்ந்த வீரர்கள் உள்ளனர்.

அதிரடியில் மிரட்டும் மார்ட்டின் கப்தில்
இது தவிர டாப் ஆர்டரில் அதிரடியில் மிரட்டும் மார்ட்டின் கப்தில் இன்று விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கண்டிப்பாக இந்தியாவுக்கு பாதகம்தான். நிறைய அனுபவமுள்ள மார்ட்டின் கப்தில் வாணவேடிக்கை காட்ட கூடியவர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹாரிஸ் ரவுஃப் பந்தில் காயம் அடைந்த அவர் காயத்தில் இருந்து மீண்டு விட்டார். இந்தியாவுக்கு எதிராக விளையாட மார்ட்டின் கப்தில் தயாராக இருப்பதாக அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் கூறியுளளார். ஆக மொத்தம் இன்றைய போட்டி இந்தியாவுக்கு எளிதாக இருக்காது என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications