வரிசையாக சரணடையும் டீம் இந்தியா.. அத்தனைக்கும் காரணம் ஐபிஎல் தொடர்.. வறுக்கும் நெட்டிசன்கள்!
துபாய்: பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக உலக கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அடுத்தடுத்து இந்தியா தோல்வியை தழுவிய நிலையில் ஐபிஎல் விளையாட்டுதான் இந்த பின்னடைவுக்கு காரணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
Recommended Video
ஐபிஎல் தொடரை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமூகவலைத்தளங்களில் பலராலும் முன்வைக்கப்பட்டு வருகிறது . ட்விட்டர் சமூக தளத்தில் ஐபிஎல்லை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நேற்று இரவு அகில இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆக இருந்தது.
ஏதோ மேம்போக்காக குற்றம் சுமத்த வேண்டும் என்பதற்காக இது போன்ற கோரிக்கைகளை விடுக்கவில்லை. உண்மையில் நன்கு உற்றுப்பார்த்தால் ஐபிஎல் தொடர் இந்திய அணி வீரர்களை வெகுவாக பாதித்துள்ளது .இந்த தொடர் தோல்விக்கு காரணமாக மாறியுள்ளது புரியும் என்கிறார்கள் பலரும்.

டேவிட் மில்லர், வார்னரை பாருங்கள்
உதாரணத்துக்கு, தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லரை எடுத்துக்கொள்ளலாம். ஐபிஎல் தொடரில் சரியாக ஆடவில்லை. ஆனால் இலங்கைக்கு எதிரான போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றி பெறுவதற்கு அவரது கடைசி நேர அதிரடி ஷாட்டுக்கள் உதவின. ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஹைதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விரட்டப்பட்டார். சரியாக ஆடவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால் இலங்கைக்கு எதிராக அவர் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பழைய பன்னீர்செல்வமாக அவர் மாறிவிட்டார் என்பதைக் காட்டின.

பிற அணி வீரர்கள்
நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூட ஹைதராபாத் அணிக்காக அவ்வளவு நன்றாக ஆடவில்லை. டெஸ்ட் மேட்ச் போலத்தான் ஆடினார். ஆனால் நேற்று இந்திய அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆடிய ஷாட்டுகள் அவரது டிரேட் மார்க் ஆட்டம் என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியும். ஆக மொத்தம் ஐபிஎல் தொடரில் சுமாராக ஆடினாலும் தங்கள் நாட்டுக்காக ஆடும் போது, அந்த சீருடையை உடலில் அணியும் போது அவர்களுக்கு ஒரு புத்துணர்ச்சி வருகிறது. தங்கள் நாட்டுக்காக ஆடுகிறோம் என்ற பெருமை உணர்வு வருகிறது. ஆனால் இந்திய அணி இதற்கு நேர் எதிர்மாறாக ஆடிக் கொண்டிருக்கிறது.

4 கேப்டன்கள் இந்திய அணியில்
ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ரவீந்திர ஜடேஜா என, யார், யார் ஐபிஎல் தொடரில் பெரும் புகழ் பெற்றார்களோ அவர்கள் அத்தனை பேரும் எதிரிகளிடம் சரணடைந்த படி இருக்கிறார்கள். ஒருவேளை ஐபிஎல் தொடர் வழக்கம்போல கோடைகாலத்தில் முடிந்திருந்தால் இந்த அளவுக்கு பிரச்சனை வந்திருக்காது. சமீபத்தில்தான் ஐக்கிய அரபு எமிரேட்சில் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாதி நிறைவடைந்தது. இந்திய அணியின் முன்னணி வீரர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு ஐபிஎல் அணிகளுக்கு கேப்டனாக பதவி வகித்தனர். விராட் கோலி பெங்களூருக்கு, ராகுல் பஞ்சாப்புக்கு, ரோஹித் சர்மா மும்பைக்கு, ரிஷப் பண்ட் டெல்லிக்கு என ஐபிஎல் அணியின் கேப்டன்களாக இருந்தவர்கள். ஆனால் இப்போது ஒரே அணி அதாவது இந்திய அணிக்காக விளையாடும் போது அவர்களுக்கு ஒருங்கிணைந்து செயல்படும் ஆற்றல் போய்விட்டது. அனைவரும் தனித்தனியாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தோனி மென்டராக உள்ளார். அவர் 5வது கேப்டன் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஒருங்கிணைப்பு இல்லை
எந்த வீரர்களுக்கு நடுவேயும் ஒருங்கிணைப்பு இல்லை என்பது அவர்கள் ஆட்டத்தை வைத்துப் பார்க்கும்போது தெளிவாகத் தெரிகிறது. இவர்கள் முன்பு இந்திய அணிக்காக ஆடியதையும், இந்த ஐபிஎல் தொடருக்கு பிறகு எப்படி ஆடுகிறார்கள் என்பதையும் ஒப்பீடு செய்து பார்த்தால் ஒவ்வொரு அணி வீரர்களும் தற்போது தனித்தனி தீவுகளாக தெரிகிறார்கள் என்பது மட்டும் நிச்சயம். இது தான் ரசிகர்களை கடும் கோபம் அடைய வைத்துள்ளது. ஐபிஎல் தொடர் சமீபத்தில்தான் நிறைவடைந்தது என்பதால் மனதளவில் ஒரு மிகப்பெரிய தொடரை முடித்து விட்டோம் என்ற நிலைக்கு இந்திய அணி வீரர்கள் வந்துவிட்டனர். அதிலும் நான்கு பேர் ஐபிஎல் அணியின் கேப்டனாக இருந்தவர்கள் என்பதால் அவர்கள் மனநிலை சுத்தமாக அப்படி மாறி விட்டது. உலக கோப்பை என்பதுதான் முக்கியம் என்ற மனநிலைக்கு அவர்கள் வரவில்லை போலும், என்றெல்லாம் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஐபிஎல் தொடரில் பிஸ்தா
சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஆடும் போது பயில்வான் போல காட்சி அளித்தனர் . உலக கோப்பை தொடரில் எலும்பும் தோலுமாக காட்சியளிக்கிறார்கள் என்று கிண்டல் செய்கிறது இந்த ட்விட்டர் பதிவு.

சதம் எங்கே
பெட்ரோல் விலை, டீசல் விலை, உலக பசி குறியீட்டு எண் ஆகியவற்றில், பிரதமர் மோடி சதம் அடித்து விட்டார். ஆனால் 2021ம் ஆண்டு விராட் கோலி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்று கிண்டல் செய்கிறது இந்த ட்விட்டர் பதிவு.

ஆப்கானிஸ்தான் பரவாயில்லை
இந்திய கிரிக்கெட் அணியை விட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக இருக்கிறது. எனவே, இந்திய அணி தனது மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு ஐபிஎல் தொடருக்கு தயாராக வேண்டும் என்று கிண்டல் செய்கிறது இந்த மீம்ஸ்.
-
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications