ஆணவம்?.. தேவையின்றி பேசி வாங்கி கட்டிக்கொண்ட ரோஹித் சர்மா.. ஐபிஎல்லில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

துபாய்: ஐபிஎல் 2021 தொடரின் ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கு கொல்கத்தா செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

Recommended Video

    அவசரப்பட்டு பேசி ரசிகர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட Rohit Sharma

    நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நேற்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அதிரடியாக ஆடி 171 ரன்களை எடுத்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் மிக மோசமான பேட்டிங் காரணமாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

    நேற்று மொத்தமாக வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்து ராஜஸ்தான் சுருண்டது. இதனால் ஏற்கனவே நல்ல ரன் ரேட்டில் இருந்த கொல்கத்தா இப்போது மேலும் ரன் ரேட்டை உயர்த்தி புள்ளிகள் பட்டியலில் 4ம் இடம் பிடித்துள்ளது.

    மும்பை முடியாது

    மும்பை முடியாது

    இதனால் மும்பை அணி ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கு செல்வது கிட்டத்தட்ட இயலாத காரியம் ஆகிவிட்டது. ஏனென்றால் இன்று ஹைதராபாத் அணியை மும்பை எதிர்கொள்கிறது. இன்று நடக்கும் போட்டியில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய வேண்டும். அதோடு 176 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும். ஒருவேளை டாஸில் தோல்வி அடைந்து மும்பை அணி ஒருவேளை சேசிங் செய்தால் அந்த நொடியே மும்பை அணி ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கு தகுதி பெறாமல் வெளியேறிவிடும்.

    சிக்கல்

    சிக்கல்

    இதனால் மும்பை அணி ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கு செல்வது கணித முறைப்படி இயலாத காரியம் ஆகிவிட்டது. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்மை இந்த முறை ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கு கூட தகுதி பெற முடியவில்லை. மும்பை அணியின் மிடில் ஆர்டர் சொதப்பிய காரணத்தால் அந்த அணியால் பல போட்டிகளில் சரியாக ஆட முடியவில்லை. இதுவே அந்த அணியின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது.

    கொல்கத்தா

    கொல்கத்தா

    கடந்த போட்டிகளில் வரிசையாக மும்பை வென்றது. அதோடு மும்பைக்கு வழிவிடும் வகையில் பெங்களூர், கொல்கத்தா, பஞ்சாப் அணிகளும் தோல்வி அடைந்தது. இதனால் எல்லாம் சேர்ந்து வருகிறது. மும்பை ரன் ரேட் அடிப்படையில் ப்ளே ஆப் சுற்று ஆட்டங்களுக்கு சென்றுவிடும் என்று கருதப்பட்டது. ரசிகர்களும் நம்பிக்கையாக இருந்தனர். ஆனால் எதிர்பார்க்காத திருப்பமாக கொல்கத்தா அணி நேற்று வென்று மும்பையை வெளியேற்றி உள்ளது.

    ரோஹித் சர்மா பேச்சு

    ரோஹித் சர்மா பேச்சு

    ப்ளே ஆப் ஆட்டங்களுக்கு மும்பை செல்வது குறித்து ரோஹித் சர்மா கூட பேசி இருந்தார். "மும்பைக்கு ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் எங்களுக்கு முன் கொல்கத்தா ஆடுகிறது. அதனால் எங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும்" என்று ரோஹித் சர்மா கிண்டலாக குறிப்பிட்டு இருந்தார். அதாவது கொல்கத்தா அணியை கொஞ்சம் இளக்காரமாக பேசும் வகையில் அவரின் கமெண்ட் அமைந்து இருந்ததாக கூறப்படுகிறது. கொல்கத்தா அணியின் ஆட்ட முடிவை வைத்து நாங்கள் மறுநாள் ஆடுவோம் என்று பொருள்படும் வகையில் ரோஹித் சர்மா குறிப்பிட்டு இருந்தார்.

    கொல்கத்தா ஆட்ட முடிவு

    கொல்கத்தா ஆட்ட முடிவு

    ஆனால் நேற்று கொல்கத்தா மாபெரும் ரன் ரேட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் ரோஹித் சர்மாவின் திட்டம் சொதப்பியது. கொல்கத்தாவை ரோஹித் சர்மா கிண்டல் செய்யும் வகையில் ஆணவமாக பேசினார். தற்போது அதுவே அவருக்கு எதிராக திரும்பிவிட்டது. ஒரே நல்ல விஷயம் என்னவென்றால் எங்களுக்கு முன் கொல்கத்தா ஆடுகிறது என்று கூறினார். ஆனால் இப்போது அதுவே மும்பை அணிக்கு எதிராக திரும்பிவிட்டது என்று நெட்டிசன்கள் பலர் ரோஹித் சர்மாவை கிண்டல் செய்து வருகிறார்கள். கொல்கத்தாவை ரன் ரேட் அடிப்படையில் மும்பை வீழ்த்தவே முடியாது. இதனால் மும்பை வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

    ட்விஸ்ட்

    ட்விஸ்ட்

    கொல்கத்தா அணி ப்ளே ஆப் வந்து இருப்பது மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. கொல்கத்தா அணி இந்த சீசன் முழுக்கவே கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் வீரர்களை மெருகேற்றி உள்ளது. வெங்கடேஷ் ஐயர் வருகையால் தற்போது அணியின் ஓப்பனிங் சிறப்பாக உள்ளது. அதேபோல் இன்னொரு பக்கம் லோகி பெர்குசன் திரும்பி வந்த காரணத்தால் அணியின் பவுலிங்கும் புதிய உச்சம் தொட்டு உள்ளது.

    போட்டி

    போட்டி

    இதனால் கொல்கத்தா அணி இந்த சீசனில் கண்டிப்பாக மிகவும் கடினமான அணியாக மாறியுள்ளது. வருண் சக்ரவர்த்தி, மாவு ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்து வருகிறார்கள். தினேஷ் கார்த்திக் பேட்டிங்கும் நல்ல பார்மில்தான் இருக்கிறது. ராணாவும், இயான் மோர்கனும் பார்மிற்கு திரும்பினால் கொல்கத்தா அணி மிகவும் வலிமையான அணியாக உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+