துபாய் Oracle அலுவலகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!
துபாய்: மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றத்திற்கு மத்தியில், அமெரிக்காவின் முன்னணி டேட்டா சென்ட், கிளவுட், டேட்டாபேஸ் சேவை அளிக்கும் ஆரக்கிள் நிறுவனத்தின் துபாய் அலுவலகம் மீது ஈரான் நடத்திய டிரோன் தாக்குதலால் சேதமடைந்ததுள்ளது. இது துபாயில் இருக்கும் டெக் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் நாட்டின் IRGC படை ஏற்கனவே அமெரிக்க டெக் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டும் என எச்சரித்த நிலையில், 2 நாட்களுக்கு முன்பு பஹ்ரைனில் இருக்கும் அமேசான் டேட்டா சென்டரின் மீது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது ஆரக்கிள் நிறுவனத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது.

அமெரிக்காவின் 48 மணிநேர போர் நிறுத்த கோரிக்கையை ஈரான் நிராகரித்த உடன் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. துபாய் இன்டர்நெட் சிட்டியில் அமைந்துள்ள ஆராக்கிள் அலுவலக கட்டிடத்தின் வெளிப்புறத்தில் ஈரான் டிரோன் மோதி சேதம் அடைந்துள்ளது. ஈரான் ஏவிய டிரோனை UAE பாதுகாப்பு அமைப்புகள் வானிலேயே தடுத்த நிலையில் டிரோன்களின் சிதிலங்கள் ஆரக்கிள் அலுவலகத்தின மீது விழுந்ததாக துபாய் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை நடைபெற்றதாகவும், இது "சிறிய அளவிலான சம்பவம்" என Dubai Media Office விளக்கியுள்ளது.
சிறிய சேதம்
துபாய் அரசின் மீடியா ஆபீஸ் வெளியிட்டுள்ள தரவுகள் படி வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் டிரோன் தாக்குதலை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தின. இதன் பின்னர் டிரோனி சிதிலங்கள் Oracle கட்டிடத்தின் வெளிப்புறத்தில் விழுந்ததால், இரண்டு கட்டிடங்களில் சிறிய சேதம் ஏற்பட்டது.
ஆனால் எந்த உயிரிழப்பும் இல்லை, தீ விபத்தும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் துபாய் விரைவு நடவடிக்கையால் கட்டிடம் சேதம் தவிர வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெளிவுப்படுத்தியுள்ளது.
ஈரான் எச்சரிக்கை
ஈரான் புரட்சிக் காவல் படை (IRGC), அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலடியாக, மத்திய கிழக்கில் செயல்படும் 18 அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை சட்டபூர்வ இலக்குகள் என்று அறிவித்துள்ளது. இதில் அமெரிக்காவின் என்விடியா, ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகுள், ஆராக்கிள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் அலுவலகங்களும் இதில் எச்சரிக்கையில் அடங்கும்.
மார்ச் 31 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் மூலம் அமெரிக்க டெக் துறைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. போர் பதற்றம் தொடரும் நிலையில், இந்த எச்சரிக்கை UAE, சவுதி அரேபியாவில் பணியாற்றும் உலகளாவிய டெக் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.
அமேசான் தாக்குதல்
இது முதல் சம்பவம் அல்ல. இதற்கு முன்பு, Amazon Web Services நிறுவனத்தின் டேட்டா சென்டர்கள் மீது ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பஹ்ரைனில் டிரோன் தாக்குதலால் சேதமடைந்து. ஈரான் அடுத்தடுத்து டேட்டா சென்டர் நிறுவனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த வார தொடக்கத்தில், Oracle டேட்டா சென்டர் மீது நேரடி தாக்குதல் நடந்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன. ஆனால் அதை உடனடியாக UAE அதிகாரிகள் மறுத்தனர். ஆனால் தற்போது, ஆராக்கிள் அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட சேதம் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தாக்குதல் முயற்சி நடந்தது தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications