ரமலான் மாதம் பிறந்தது... லாக்டவுனை தளர்த்தியது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
துபாய்: ரமலான் மாதம் பிறந்துள்ளதைத் தொடர்ந்து 24 மணி நேர லாக்டவுனை 8 மணி நேரமாக குறைத்துள்ளது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.
Recommended Video
புதிய அறிவிப்பின்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் லாக்டவுன் அமலில் இருக்கும். பகல் நேரத்தில் லாக்டவுன் தளர்த்தப்படும். சில முக்கிய கடைகள் மட்டும் 24 மணி நேரமும் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவைரஸ் பரவல் காரணமாக கடந்த 3 வாரங்களாக எமிரேட்ஸில் லாக்டவுன் அமலில் உள்ளது. 24 மணி நேர லாக்டவுன் அங்கு அமலில உள்ளது. மக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், தற்போது ரமலான் மாதம் பிறந்துள்ளதைத் தொடர்ந்து லாக்டவுன் தளர்த்தப்பட்டுள்ளது.
துபாய் மற்றும் அபுதாபியில் ஷாப்பிங் மால்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேசமயம், போதிய சமூக இடைவெளியை அனைத்து இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் கடைகளுக்கு வருவோர் அதிகபட்சம் 3 மணி நேரம் மட்டுமே இருக்க முடியும். அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
ரெஸ்டாரெண்டுகளில் வழக்கத்தை விட 30 சதவீதம் குறைவான இருக்கைகள்தான் இருக்க வேண்டும். டேபிள்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி இருக்க வேண்டும். வீடுகளில் இப்தார் போன்றவற்றை நடத்துவோர் அதிகபட்சம் 10 பேர் வரை மட்டுமே கூட அனுமதிக்கப்படுகிறது.

கை குலுக்குவது, கட்டி அணைத்து வாழ்த்து தெரிவிப்பது போன்றவை முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. மேலும் மசூதிகளில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் துபாயில் மெட்ரோ சேவை தொடங்கப்படவுள்ளது. லாக்டவுன் தளர்வானது ரமலான் மாதம் முழுவதும் அமலில் இருக்கும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கொரோனாவைரஸுக்கு இதுவரை 56 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்தம் 8756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவலுக்கு மத்தியில் புனித ரமலான் மாதம் அமைதியாக பிறந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications