ஐபிஎல் பைனல்: சிஎஸ்கே களமிறக்கும் 11 வீரர்கள் யார் தெரியுமா? முக்கிய பிளேயருக்கு வாய்ப்பு இல்லை
துபாய்: சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு நடைபெற உள்ள போட்டிக்கான 11 பேர் கொண்ட சென்னை அணியை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நீடிக்கிறது.
Recommended Video
சுரேஷ் ரெய்னா அல்லது ராபின் உத்தப்பா ஆகிய இருவரில் யாரை டீமில் சேர்ப்பது என்பது கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளம்மிங்கிற்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
ஏன் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.. இதோ விவரம்.

ஐபிஎல் பைனல்
இந்தியன் பிரீமியர் லீக் 2021 இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமையான இன்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், இரு அணிகளும் தங்களின் சிறந்த 11 வீரர்களை களமிறக்க கங்கணம் கட்டியுள்ளன. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அவர்களின் மிக வெற்றிகரமான மற்றும் அனுபவம் வாய்ந்த வீரரை இறுதிப் போட்டிக்கான குழுவிலிருந்து வெளியேற்ற வேண்டிய நிலையில் உள்ளது. அந்த வீரர் வேறு யாருமல்ல, சுரேஷ் ரெய்னா. ஆம்.. சென்னை சூப்பர் கிங்ஸை மூன்று முறை ஐபிஎல் சாம்பியனாகியதில் முக்கிய பங்கு வகித்த அதே சுரேஷ் ரெய்னாதான்.

ரெய்னா நல்ல பார்மில் இல்லை
இந்த சீசனில் சுரேஷ் ரெய்னா நல்ல பார்மில் இல்லை என்று சொல்லலாம். ஐபிஎல் 2021ல் ரெய்னா 12 போட்டிகளில் 160 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதாவது ஒரு போட்டிக்கு அவரது சராசரி ரன் 17.77 மட்டுமே. கடந்த மூன்று போட்டிகளில் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு பதிலாக விளையாடும் லெவன் அணியில் ராபின் உத்தப்பா களம் கண்டார்.

ராபின் உத்தப்பா
ராபின் உத்தப்பா பார்முக்கு திரும்பி விட்டார். குவாலிபையர்-1 ரவுண்டில் ராபின் உத்தப்பா டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 44 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். உத்தப்பாவின் இந்த இன்னிங்ஸின் உதவியோடு, சென்னை 173 ரன்கள் இலக்கை எட்டிப் பிடித்து, 9வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் ரெய்னா சாதனை
சுரேஷ் ரெய்னா இந்த சீசனில் சரியாக ஆடாமல் இருந்திருக்கலாம். ஆனால், ஐபிஎல் இறுதிப் போட்டிகள் என்றால் அவர்தான் கிங். வேறு மாதிரி மாறிவிடுவார். அவரது சாதனை ஆச்சரியமாக இருக்கிறது. ரெய்னா 8 ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் 249 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 35.57 ரன்களாகும். 2 அரை சதங்கள் விளாசியுள்ளார். ஆனால் கடந்த சில போட்டிகளில் ஆடாமல் நேரடியாக அவரை பைனலுக்கு அழைத்து வர வாய்ப்பு இல்லை என்கிறது சிஎஸ்கே வட்டாரங்கள். எனவே ரெய்னாவிற்கு பதில் உத்தப்பா களம் காண்பார்.

சிஎஸ்கே அணி
ஐபிஎல் 2021 இறுதிப் போட்டிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ்சுக்காக விளையாடும் 11 பேர் கொண்ட அணியின் உத்தேச பட்டியல் இதுதான்: ஃபாஃப் டு பிளெசிஸ், ருத்துராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், ஜோஷ் ஹேசில்வுட், தீபக் சாஹர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications