துபாயில் தாயை இழந்து தவித்த கைக்குழந்தை... தமிழகத்தில் உள்ள தந்தையிடம் அனுப்பி வைத்த அமீரக திமுக..!
துபாய்: துபாயில் கொரோனா தொற்றுக்கு தாயை பறிகொடுத்த 10 மாத கைக்குழந்தையை ஐக்கிய அரபு அமீரக திமுகவினர் தமிழகத்தில் உள்ள அதன் தந்தையிடம் பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த வேலவன் என்பவர் தனது மனைவி பாரதியை கடந்த மார்ச் மாதம் துபாய்க்கு அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு சென்ற பாரதி தமிழகத்தை சேர்ந்த பெண்களுடன் தங்கி தனக்கு வேலை தேடி வந்துள்ளார். இதனிடையே துபாய்க்கு செல்லும் போது தனது 10 மாத கைக்குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் சென்றிருக்கிறார் பாரதி. இந்நிலையில் வேலை தேடி சென்றவருக்கு கடந்த மே மாதம் கொரோனா தொற்று உறுதியானது.

இதையடுத்து மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பாரதி, மே 29-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து பாரதியின் குழந்தையை தமிழகத்தை சேர்ந்த ஜெரினா என்பவர் துபாயில் பராமரித்து வந்துள்ளார். இந்த தகவல் ஐக்கிய அரபு அமீரக திமுக அமைப்பாளர் எஸ்.எஸ்.மீரானுக்கு கிடைத்ததை அடுத்து, உடனடியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார். அதன் பேரில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் உள்ள பாரதியின் கணவர் வேலவனிடம் குழந்தையை ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்றன. 15 நாட்களாக தமிழக அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை காரணமாக இன்று 10 மாத கைக்குழந்தை துபாயிலிருந்து திருச்சிக்கு அழைத்து வரப்பட்டு அதன் தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருச்சியை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் தஸ்லீம் என்பவர், திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கிய குழந்தையை பெற்று அதன் தந்தை வேலவனிடம் முறையாக ஒப்படைத்தார். மேலும், துபாயில் தகனம் செய்யப்பட்ட பாரதியின் அஸ்தியும் அவரது கணவர் வேலவனிடம் ஒப்படைக்கப்பட்டது. கண்ணீர்மல்க தனது குழந்தையை பெற்றுக் கொண்ட கள்ளக்குறிச்சியை சேர்ந்த வேலவன், தன்னுடையை குழந்தையை தன்னிடம் கொண்டு வந்து சேர்த்த தமிழக அரசுக்கும், அமீரக திமுக அமைப்பாளர் மீரானுக்கும் என்றும் தாம் கடமைப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே கொரோனாவுக்கு தாயை பறிகொடுத்த இந்த குழந்தைக்கு தமிழக அரசின் சமூகநலத்துறை சார்பில் மூன்று லட்ச ரூபாய் வழங்கப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் ஐக்கிய அரபு அமீரக திமுக அமைப்பாளர் மீரானிடம் உறுதியளித்துள்ளார்.
-
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications