பொழைக்கப் போன இடத்துல கைய கால வச்சுட்டு சும்மா இருக்கனும்! 17 இந்தியர்களை கொத்தாக தூக்கிய அமீரகம்!
துபாய்: இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா போர் காரணமாக மத்திய கிழக்கில் போர் பதற்றம் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், போர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறி 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் எமிரேட்ஸ் நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும், தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எனவும் எச்சரித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான மோதல் தீவிரமடைந்து வருகிறது. இந்த மோதலின் தாக்கம் வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதாக சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த சூழலில் உலகளவில் முக்கியமான எண்ணெய் வர்த்தக மையங்களில் ஒன்றாகக் கருதப்படும் புஜைரா போர்ட் துறைமுகத்தில் தாக்குதல் நடந்ததாக வெளியான தகவலும் சர்வதேச எண்ணெய் சந்தையில் கவலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அமீரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. அதேவேளை, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி பதற்றத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது.
ஈரான் இஸ்ரேல் போர்
இந்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் தாக்குதலை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் சில இராணுவ தளங்களையும் குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் வளைகுடா பகுதியில் உள்ளபஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு நிலைமையும் இந்த மோதலால் பதற்றமாக மாறியுள்ளது. இந்நிலையில் அமீரகத்தின் முக்கிய எண்ணெய் வர்த்தக மையமான புஜைரா துறைமுகத்தில் நடந்ததாகக் கூறப்படும் தாக்குதல் சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
போலி போர் வீடியோ
இதுமட்டுமல்லால் துபாய் விமான நிலையம் அருகே நடத்தப்பட்டுள்ள தாக்குதல் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், போர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறி 19 இந்தியர்கள் உட்பட மொத்தம் 35 பேரை கைது செய்ய ஐக்கிய அரபு அமீரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை அமீரகத்தின் அரசு செய்தி நிறுவனம் எமிரேட்ஸ் நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் , இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இணைந்து தாக்குதல் நடத்தி வரும் சூழலில், அந்த போரைச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான காணொலி காட்சிகள் உருவாக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
யுஏஇ நடவடிக்கை
இத்தகைய பதிவுகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை என்றும், சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்றும் அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அட்டா்னி ஜெனரல் ஹமாத் சைஃப் அல் ஷாம்ஸ் வெளியிட்ட அறிக்கையில், பொது அமைதி மற்றும் ஒழுங்கை குலைக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பியதாக பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அமீரகம் இந்தியர்கள் கைது
அதன்படி 17 இந்தியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 பேரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 2 இந்தியர்கள் உட்பட இன்னும் 10 பேரையும் கைது செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும் அமீரக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சிறைத் தண்டனை
குறிப்பாக பொய்யான தகவல்கள் அல்லது தவறான காணொலி காட்சிகளை வெளியிட்டு பொதுமக்களை தவறாக வழிநடத்தினால் குறைந்தது ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். அதோடு குறைந்தபட்சம் 1 லட்சம் திர்ஹம் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.25.20 லட்சம்) அபராதமும் விதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மொத்த இந்தியாவுக்கும் குட்நியூஸ்.. கச்சா எண்ணெய் விலை பெரும் சரிவு.. அப்போ பெட்ரோல், டீசல் விலை குறையுமா? -
போங்க தம்பி.. டிரம்ப்-க்கு மீண்டும் பல்பு கொடுத்த ஈரான்.. அடுத்தது என்ன நடக்கும்? -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications