அமீரக சிறைகளில் தவித்து வந்த 900 இந்தியர்கள் விடுதலை.. அதிபர் ஷேக் முகமது அதிரடி உத்தரவு
துபாய்: இந்தியா- அமீரகம் இடையேயான உறவு தொடர்ந்து மேம்பட்டு வரும் நிலையில், அதன் ஒரு பகுதியாக 900க்கும் மேற்பட்ட இந்தியக் கைதிகள் அங்குள்ள சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட உள்ளனர். இது தொடர்பான பட்டியலை அமீரக அரசு இந்தியத் தூதரகத்திடம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.!
ஒவ்வொரு ஆண்டும் வேலைக்காகப் பல லட்சம் பேர் அமீரகம் செல்கிறார்கள். குறிப்பாக தென்னிந்தியாவில் இருந்து அதிகப்படியானோர் அமீரகம் செல்கிறார்கள். பெரும்பாலும் அங்குள்ள இந்தியர்கள் எந்தவொரு சிக்கலில் மாட்டுவதில்லை. ஆனால், சில நேரங்களில் சிறிய விதிமீறல்களுக்காக அவர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் நடக்கிறது. அப்படிப் பல ஆயிரம் இந்தியர்கள் அங்குக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

900 இந்தியர்கள் விடுதலை
இதற்கிடையே இந்தியாவுக்கும் ஐக்கிய அமீரகத்திற்கும் இடையே உள்ள ஆழமான உறவை வெளிப்படுத்தும் வகையில், அமீரக சிறைகளில் அடைக்கப்பட்டு இருந்த 900க்கும் மேற்பட்ட இந்தியக் கைதிகளின் பட்டியலை அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் அமீரகம் அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. அமீரக அதிபர் மேதகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மனிதாபிமான அடிப்படையில் பொது மன்னிப்பை வழங்கியிருந்த நிலையில், அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ளவர்களைச் சிறையில் இருந்து விடுவிக்க அமீரகம் முடிவு செய்துள்ளது.
அமீரக அதிபர்
அமீரகத்தின் 54வது ஈத் அல் இத்திஹாத் (தேசிய தினம்) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஒற்றுமை மற்றும் மன்னிப்பை இந்த நாள் பிரதிபலிக்கும் நிலையில், அதையொட்டியே கைதிகளை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.. சுமார் 3,000 கைதிகளை விடுவிக்கும் இந்தத் திட்டத்தில் கணிசமான அளவுக்கு இந்தியர்களும் விடுவிக்கப்பட உள்ளனர். இது அமீரகத்திற்கும் இந்தியாவுக்கும் இடையேயான வளர்ந்து வரும் உறவை உலகிற்குக் காட்டுவதாகவே உள்ளது..
இந்த பொது மன்னிப்பில் கவனிக்க வைக்கும் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது பொது மன்னிப்பின் ஒரு பகுதியாகக் கைதிகள் விடுதலை மட்டுமின்றி, அவர்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களும் ரத்து செய்யப்படுகிறது. அதாவது இவர்களுக்கு முதலில் தண்டனை அறிவிக்கப்பட்டபோது, சிறைத் தண்டனையோடு அபராதமும் விதிக்கப்பட்டு இருந்தது. அந்த அபராதங்களை ஏற்படாத அமீரக அதிபர் அறிவித்துள்ளார்.
யாரெல்லாம் விடுதலை
அனுமதிக்கப்பட்ட காலத்தை விட அதிகக் காலம் தங்கியிருத்தல், சிறிய தகராறுகள், கடன்கள் உள்ளிட்ட காரணங்களாலேயே இந்தியர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டு இருந்த நிலையில், அமீரகத்தின் இந்த நடவடிக்கை மூலம் இந்தியக் குடும்பங்களுக்குப் பெரிய சுமை நீக்கியுள்ளன.. இந்த உத்தரவு மூலம் விடுதலையாகும் நபர்கள் மீண்டும் வழக்கமான பணிக்குத் திரும்ப அனுமதிக்கிறது.
ஈத் அல் இத்திஹாத் (தேசிய தினம்) ஒட்டி கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். அபுதாபி , துபாய், ஷார்ஜா, அஜ்மான், உம் அல்-குவைன், ரஃஸ் அல்-கைமா மற்றும் புஜைரா ஆகிய ஏழு அமீரக நகரங்கள் இணைந்தே ஐக்கிய அமீரகம் என அழைக்கப்படுகிறது. இந்த ஏழு அமீரக நாடுகளும் 1971-ல் இணைந்து அமீரகம் என்ற நாடு பிறந்தது. இதை நினைவூட்டும் வகையிலேயே அங்கு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்படுகிறது.
லிஸ்ட் ரெடி
ஒற்றுமை மற்றும் கருணையைக் கொண்டாடும் நாளான இந்தத் தேசிய நாளில் தான் கைதிகளை விடுவிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்போது யாரெல்லாம் விடுவிக்கப்படுவார்கள் என்ற லிஸ்ட் தயாரிக்கப்பட்டு, அவர்களை விடுவிக்கும் செயல்முறை கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கிறது. மிக விரைவிலேயே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது..












Click it and Unblock the Notifications