விவாகரத்து வதந்தி.. சானியா மிர்சாவும் நானும் இதற்காகத்தான் ஒன்றாக இல்லை.. மனம் திறந்த சோயிப் மாலிக்
துபாய்: சானியா மிர்சா - சோயிப் மாலிக் நட்சத்திர ஜோடிக்க்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக விவாகரத்து செய்ய இருப்பதாகவும் வதந்திகள் பரவி வரும் நிலையில், முதல் முறையாக சோயிப் மாலிக் தனது மவுனத்தை கலைத்துள்ளார்.
இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. கடந்த பிப்ரவரி மாதம் டென்னிஸ் போட்டிகளில் இருந்து சானியா மிர்சா ஓய்வு பெற்றுள்ளார்.

ஐதராபாத்தை சேர்ந்த சானியா மிர்சா, கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சோயிப் மாலிக்கை மணந்து கொண்டார். எல்லை தாண்டிய இந்த காதல் ஜோடிகள் திருமணம் முடிந்த பிறகும் பரஸ்பரம் தங்கள் நாட்டுக்காக தொடர்ந்து சர்வதேச தொடர்களில் பங்கேற்றனர்.
துபாயில் வசித்து வரும் இந்த நட்சத்திர ஜோடிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக வதந்திகள் சமீப காலமாக பரவி வருகின்றன. இதற்கு ஏற்றார் போல் சானியா மிர்சாவும் தனது இன்ஸ்டாகிராமில் சில பதிவுகளை வெளியிட்டு வந்தார். குறிப்பாக "உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன... அல்லாவைக் நாடி.." என்று கடந்த ஆண்டு சானியா மிர்சா பதிவிட்டது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
அதேபோல தொடர்ந்து பல பதிவுகளை சானியா மிர்சா பதிவிட்டு வந்தார். அதேபோல், தனது மகன் உடனான இருக்கும் படங்களை மட்டுமே சானியா மிர்சா பதிவிட்டது வதந்திகளுக்கு வலு சேர்ப்பதாக இருந்தது. இந்த நிலையில், ரம்ஜான் பண்டிகையின் போதும் இருவரும் தனித்தனியாகவே இருந்தது விவாகரத்து பற்றிய வதந்தி மீண்டும் பரவ காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் தான், சோயிப் மாலிக் முதல் முறையாக விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு மவுனம் கலைத்துள்ளார். இது குறித்து சோயிப் மாலிக் கூறியதாவது;- ரம்ஜான் பண்டிகையை சானியா மிர்சாவுடன் தான் செலவிட வேண்டும் என்று நான் விரும்பினேன். ஆனால் சில பணிகள் இருப்பதால் அது முடியவில்லை.
சானியா மிர்சா ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அதன் காரணமாகவே நாங்கள் ஒன்றாக ரம்ஜான் கொண்டாட முடியவில்லை. ஆனால் நெருக்கமானவர்களை அதிகம் மிஸ் செய்யும் நாள் ரம்ஜான் பண்டிகை' என்று கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களாகவே விவாகரத்து பற்றிய வதந்திகளுக்கு எந்த ஒரு கருத்தையும் சானியா மிர்சாவோ.. சோயிப் மாலிக்கோ கருத்து எதுவும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வந்த நிலையில் தங்களுக்குள் பிளவு எதுவும் இல்லை என்று சோயிப் மாலிக் கூறியிருப்பது அவர்களது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications
