உயர்ந்த கட்டிடம் "புர்ஜ் கலிபா.." டெய்லி அதை சுற்றி நிற்கும் செப்டிக் டேங்க் லாரிகள்! என்ன பிரச்சினை
துபாய்: உலகமே வியந்து பார்க்கும் இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மிகப் பெரிய பிரச்சினை ஒன்று இருக்கிறது தெரியுமா. அந்த கட்டிடத்திற்கு வெளியே செப்டிக் டேங்க் வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது ஏன் தெரியுமா. வாங்கப் பார்க்கலாம்.
கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய வளர்ச்சியைக் கண்ட நாடுகளில் முக்கியமானவை மத்திய கிழக்கு நாடுகள். கச்சா எண்ணெய் கண்டுபிடிக்கப்படும் வரை மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த நாடுகள் அதன் பின்னர் மின்னல் வேகத்தில் வளர தொடங்கியது.

இப்போது உலகின் மிகவும் பவர்புல் நாடுகளில் மத்திய கிழக்கு நாடுகளும் உள்ளன. விண்ணை முட்டும் கட்டிடங்கள், பளபளக்கும் சாலைகளால் மத்திய கிழக்கு நாடுகள் முற்றிலுமாக மாறிவிட்டன.
மத்திய கிழக்கு நாடுகள்: காலநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாம் மெல்லக் கச்சா எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, அதற்குப் பதிலாக மின்சார வாகனங்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம். இதனால் மத்திய கிழக்கு நாடுகளும் வரும் காலத்தைக் கருத்தில் கொண்டு கச்சா எண்ணெய் மட்டும் நம்பி இருக்காமல் பொருளாதாரத்தை மாற்றி வருகின்றன. உலகெங்கும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க அவர்கள் பலவற்றைச் செய்து வருகின்றனர்.
அதற்காகத் தான் துபாயில் அவர்கள் பல புதிய கட்டுமானங்களை ஏற்படுத்தி வருகின்றனர். அப்படி வந்ததில் ஒன்றுதான் புர்ஜ் கலிபா. 2010ஆம் ஆண்டு திறக்கப்பட்ட புர்ஜ் கலிபா கட்டிடம் தான் இப்போதும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமாக இருக்கிறது. 2004ஆம் ஆண்டில் கட்டுமானம் தொடங்கப்பட்ட நிலையில், இதை முற்றிலுமாக கட்டி முடிக்கவே அவர்களுக்கு 6 ஆண்டுகள் ஆகியுள்ளன.

புர்ஜ் கலிபா: உலகின் டாப் ஹோட்டல்கள், சொகுசு விடுதிகளைக் கொண்ட இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு உலகெங்கும் இருந்து மக்கள் வருகின்றனர். சுற்றுலாப் பயணிகள் நிச்சயம் செல்லும் இடங்களில் இதுவும் இருந்தே வருகிறது. உலகமே வியந்து பார்க்கும் இந்த புர்ஜ் கலிபா கட்டிடத்தில் மிகப் பெரிய பிரச்சினை ஒன்று இருக்கிறது தெரியுமா. அந்த கட்டிடத்திற்கு வெளியே செப்டிக் டேங்க் வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது ஏன் தெரியுமா. வாங்கப் பார்க்கலாம்.
உலகின் மிகப் பெரிய கட்டிடமான இந்த புர்ஜ் கலிபா 830 மீட்டர் உயரம் கொண்டது. நாம் நம்ம ஊரில் இப்போது பார்க்கும் கட்டிடங்களை விட இது பல மடங்கு உயரமானது. இதில் அதிகபட்சமாக 35 ஆயிரம் பேர் வரை தங்க முடியும். இப்படிப் பல சிறப்புகளைக் கொண்டிருந்தாலும், அங்கே கழிவு நீர் அமைப்பு என ஒன்று முறையாக இல்லை. புர்ஜ் கலிபா சந்தேகத்திற்கு இடமின்றி வியக்கத்தக்க ஒரு கட்டிடம் என்ற போதிலும் அது நகரின் கழிவு நீர் அமைப்புடன் இணைக்கப்படவில்லை. அப்போ உள்ளே இருப்பவர்கள் டாய்லெட் போனால், என்ன ஆகும்.

செப்டிக் டேங்க் வாகனங்கள்: அதை அப்புறப்படுத்த ஒரு மிக மோசமான வழியை வைத்துள்ளார்கள். அதாவது தினசரி அங்கே புர்ஜ் கலிபா கட்டிடத்திற்கு முன்பு பல நூறு செப்டிக் டேங்க் வாகனங்கள் நிற்கும் எனப் பார்த்தோமே.. அது இதற்குத்தான். ஒவ்வொரு நாளும் அங்கே சேரும் கழிவுகளை இப்படி செப்டிக் டேங்க் மூலமே அவர்கள் அப்புறப்படுத்தி வருகிறார்கள். இதற்காக அதிக எண்ணிக்கையில் செப்டிக் டேங்க் வாகனங்கள் ஒவ்வொரு நாளும் புர்ஜ் கலிபா கட்டிடத்தை நோக்கிப் படையெடுக்கிறது.
வாகனங்கள் மூலம் ஒவ்வொரு நாளும் அந்த கழிவுகள் நகரத்திற்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. பல ஆயிரம் கோடி செலவழித்து கட்டிடம் கட்டியவர்கள் கழிவுகளை அகற்றக் கூட ஒரு அமைப்பைக் கட்டியிருக்க மாட்டார்களா என்று நீங்கள் யோசிக்கலாம். புர்ஜ் கலிபா கட்டப்பட்டு வந்த போது, 2008இல் துபாய் மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியது. இதனால் புர்ஜ் கலிபா கட்டுமானத்திலும் செலவைக் குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டது.

என்ன காரணம்: என்ன செய்யலாம் என யோசித்தவர்கள். அதை நகரின் முக்கிய கழிவுநீர் அமைப்பில் இணைக்க வேண்டாம் என முடிவெடுத்தனர். அதற்கு செய்யும் செலவை அவர்கள் தேவையற்ற செலவாகவே பார்த்தார்கள். இதன் மூலம் சில நூறு கோடிகளை மிச்சப்படுத்த அவர்கள் முடிவு செய்தார்கள். இதை விடத் தினசரி கழிவுகளை லாரிகள் மூலம் வெளியேற்றுவது குறைந்த செலவையே ஏற்படுத்தும் என்று நம்பினார்கள். இதன் காரணமாகவே செப்டிக் டேங்க் வாகனங்கள் அணி வகுத்து நிற்கிறது.
இருப்பினும், 35,000 பேர் வசிக்கக்கூடிய இந்த கட்டிடம் ஒரு நாளைக்கு 15 டன் கழிவுநீரை உற்பத்தி செய்யும் என்பதால் இதுவே இவர்களுக்குப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது. இதனால் கழிவுநீர் அமைப்பை மீண்டும் மேம்படுத்த முடிவு செய்துள்ளனர். இருப்பினும், அதன் கட்டுமானம் நிறைவடையவே 2025 வரை ஆகும். அதுவரை இரு செப்டிக் டேங்க் வாகனங்கள் தான்.
-
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா? -
கட்டவிழ்த்து விடப்பட்ட 4 கோடி பேரல் கச்சா எண்ணெய்.. ஆனாலும் ரேட் கொஞ்சம் கூட குறையலையே ஏன் தெரியுமா? -
இறங்கி வரும் ஈரான்.. ஒரு வழியாக முடிவுக்கு வரும் போர்? திடீரென வந்த 3 முக்கியமான கண்டிஷன்கள் -
ஈரான் போரில் சொதப்பும் டிரம்ப்.. மொத்தமாக கோட்டைவிட்ட அமெரிக்கா.. 7 முக்கிய காரணங்கள் -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல்












Click it and Unblock the Notifications