திருப்பி அடிக்காமல் அமைதி காக்கும் துபாய்.. ஈரான் அவ்வளவு அடித்தும் பதிலடி தராமல் இருப்பது ஏன்!
துபாய்: இஸ்ரேல்- ஈரான் இடையே மத்திய கிழக்கில் போர் தொடரும் நிலையில், சம்பந்தமே இல்லாமல் இதில் துபாய் சிக்கியுள்ளது. அமீரக நகரங்களைக் குறிவைத்து ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தாலும் கூட அதற்கு எந்தவொரு பதிலடியும் கொடுக்காமல் துபாய் அமைதியாகவே இருந்து வருகிறது. துபாய் இதுபோல அமைதி காக்க என்ன காரணம்.. இதன் பின்னணி குறித்து நாம் பார்க்கலாம்!
இன்று காலை துபாய் சர்வதேச விமான நிலையம் மீது மீண்டும் ஈரான் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த எண்ணெய் சேமிப்பு டேங்கரை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. இதனால் அங்கிருந்த எரிபொருள் டேங்கர் தீப்பிடித்து. துபாய் விமான நிலையம் முழுக்கவே இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து துபாய் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன. மேலும், அங்கிருந்த பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

மத்திய கிழக்கு மோதல்
மத்திய கிழக்கில் இந்த மோதல் தொடங்கியது முதலே ஈரான் மத்திய கிழக்கில் இருக்கும் மற்ற நாடுகளையும் குறிவைத்துத் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. தங்களுக்கு மற்ற நாடுகள் குறி இல்லை என்றாலும் அங்குள்ள அமெரிக்கப் படைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடத்துவதாக ஈரான் கூறுகிறது. இருப்பினும், துபாய் போன்ற அமெரிக்கப் படைகள் இல்லாத இடங்களிலும் ஈரான் தாக்குதலை நடத்தியவே வருகிறது.
ஈரான் அனுப்பும் பெரும்பாலான டிரோன்கள் இடைமறிக்கப்பட்டாலும் கூட சில டிரோன்கள் அமீரகத்தைத் தாக்கவே செய்கிறது.. துபாய் விமான நிலையம் உட்பட அமீரகத்தின் முக்கிய கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஈரானின் தாக்குதல்களால் துபாய் விமான நிலையம் பாதிக்கப்பட்டுள்ளது. துபாயில் இருந்து செல்லும் கச்சா எண்ணெய் முடங்கியுள்ளது. துபாய் சுற்றுலாவும் கூட பாதிக்கப்பட்டுள்ளது.
அமைதி காக்கும் துபாய்
இவ்வளவு நடந்த பிறகும் கூட துபாய் பதிலடி கொடுக்காமல் தற்காத்து மட்டுமே வருகிறது. அதாவது ஈரான் மீது நேரடி தாக்குதல்களை அமீரகம் ஆரம்பிக்கவில்லை. அமீரகம் இந்தளவுக்கு ஏன் அமைதி காக்கிறது என்ற கேள்வி பலருக்கும் வரலாம். ஈரான் உடனான பொருளாதார உறவுக்கு அமீரகம் முக்கியத்துவம் கொடுப்பதே இதற்குப் பிரதான காரணமாகும். ஈரானுடன் ஆண்டுக்குப் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள எண்ணெய் அல்லாத வர்த்தக உறவுகளை அமீரகம் கொண்டு இருக்கிறது. இது ஈரானுக்கு லாபகரமாகவே இருக்கிறது.
தனது தலைவனை இழந்த சோகத்தில் ஈரான் ஏவுகணைகளை ஏவி வரும் சூழலில், இந்த நேரத்தில் பதிலடி கொடுத்தால் லாபகரமான இந்த உறவுகள் துண்டிக்கப்பட்டு, எண்ணெய் சாராத பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும். இதை உணர்ந்தே அமீரகம் அமைதி காத்து வருகிறது.
காரணங்கள்
மேலும், கச்சா எண்ணெய் மார்கெட்டை பொறுத்தவரை ஸ்திரத்தன்மை ரொம்பவே முக்கியம். OPEC+ உறுப்பு நாடுகளில் முக்கிய நாடாக அமீரகம் இருக்கிறது. இந்த நேரத்தில் ஈரான் மீது அமீரகம் எதாவது தாக்குதலை நடத்தினால் அது கச்சா எண்ணெய் விலையைத் தாறுமாறாக உயர்த்திவிடும். இது அதன் பிரதான பிஸ்னஸை பாதிக்கும். மேலும், அதன் சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தையும் பாதிக்கும் என அஞ்சுகிறது. ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், அமீரகம் பதிலடி கொடுத்தால் நிலைமை மோசமாகும்!
இதன் காரணமாகவே இந்த மோதலில் தனது சொத்துகள் மீது தாக்குதல் நடந்தாலும் அமீரகம் அமைதி காக்கிறது. இந்த ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கா போரிலும் நடுநிலை முடிவை எடுத்துள்ளது. மோதலில் சிக்காமல், அனைத்து தரப்புடனும் செல்வாக்கைத் தக்கவைக்க அமீரகம் விரும்புகிறது. பதிலடி கொடுத்தால், அது ஈரானை தூண்டிவிட்டு நிலைமையை மோசமாக்கும்.
ரொம்ப முக்கியம்
எல்லாவற்றையும் விட அமீரகம், அதிலும் குறிப்பாகத் துபாய், தன்னை சர்வதேச நகரமாகக் காட்டிக் கொள்கிறது. உலகின் பெரும் பணக்காரர்கள், அதிகப் பணம் செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகளைத் தன்னை நோக்கி ஈர்க்கிறது. இது தொடர நடுநிலையும் அமைதியும் முக்கியம். இந்த போர் சலசலப்பில் அமீரகம் நடுநிலையாக இருந்தால் போர் முடிந்தவுடன் சீக்கிரமே அமீரகம் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். ஆனால், ஈரானைத் தாக்கினால்.. போர் முடிந்த பிறகும் கூட ஈரான்- அமீரகம் மோதல் இருந்து கொண்டே இருக்கும்.
எப்போது வேண்டும் என்றாலும் ஈரான் தாக்கும் என்ற இமேஜ் உருவாகும். இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் அமீரகம் பக்கமே வர மாட்டார்கள். இதன் காரணமாகவே அமீரகம் பதிலடி கொடுக்காமல் அமைதி காட்டுகிறது.
-
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
கண்ணிவெடிகள் நிறைந்த ஹார்முஸ்.. திடீரென இறங்கிய அமெரிக்க போர்க்கப்பல்கள்.. ஈரானுக்கு திடீர் பதற்றம் -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அமெரிக்கா vs ஈரான்.. இஸ்லாமாபாத்தில் நடக்கும் 'மைண்ட் கேம்'. மிரட்டிய ட்ரம்ப்! பேச்சுவார்த்தை தோல்வி -
போரால் முடியாததை பேச்சுவார்த்தையில் கேட்குது அமெரிக்கா.. எப்படி சம்மதிக்க முடியும்.. ஈரான் விளக்கம் -
ஈரான் போர்.. இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொண்ட சீனா.. டிரம்ப் வைத்த செக்! -
ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங் -
5 மணி நேரம் ரூம் ரூமாக ஓடிய அதிகாரிகள்.. அமெரிக்க தலைவர்களின் ரூமிற்கே வர மறுத்த ஈரான்! பரபர தகவல் -
அமைதிப் புறா பறக்கவில்லை! அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்து என்ன! 4 ஆப்ஷன்கள் -
மொத்தமாக சொதப்பிய டிரம்ப்.. இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தோல்விக்கு இந்த 5 விஷயம்தான் காரணம்! -
கிளைமாக்ஸ் இல்லாத இஸ்லாமாபாத் ‘த்ரில்லர்’: ரிட்டர்ன் ஆன ஜே.டி. வேன்ஸ்.. ஈரான் போர் முடியாது? -
ஈரான் -அமெரிக்கா பேச்சுவார்த்தை! டெல்லிக்குக் கிடைக்காத பவர் பிளே! பாகிஸ்தான் தட்டி சென்றது எப்படி












Click it and Unblock the Notifications