ட்ரெஸ்ஸிங் ரூமில் குழப்பம்.. கோலி - தோனி - ரவி இடையில் நடந்தது என்ன? முன்னாள் வீரர் உடைத்த பின்னணி!
துபாய்: இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் நிறைய குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்திய அணியின் தொடர் தோல்விக்கு இந்த குழப்பமும் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Recommended Video
2021 டி 20 உலகக் கோப்பை தொடர் இந்திய அணிக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக மோசமாக தோல்வி அடைந்த இந்திய அணி செமி பைனல் செல்வது கொஞ்சம் சிக்கலாகி உள்ளது.
இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வென்ற நிலையில் அடுத்த இரண்டு போட்டிகளில் 60+ ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

காரணம்
இந்திய அணியின் தொடர் தோல்விகளுக்கு நிறைய காரணங்கள் சொல்லப்படுகின்றன. முக்கிய இந்திய பேட்ஸ்மேன்களின் பார்ம் மிக மோசமாக சரிந்தது அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பவுலிங்கிலும் இந்திய வீரர்கள் ஆப்கான் போட்டியை தவிர மற்ற போட்டிகளில் சரியாக ஆடவில்லை. மொத்தமாக முக்கிய வீரர்கள் எல்லோரும் பார்ம் இழந்தது, டாஸ் தோல்வி அடைந்து ட்யூ காரணமாக டிபன்ட் செய்ய முடியாமல் தோல்வி அடைந்தது என்று அணியின் தோல்விக்கு பல காரணங்கள் உள்ளன.

தோல்வி
இந்த நிலையில்தான் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் பல்வேறு குழப்பங்கள் நிலவுவதாக முன்னாள் வீரர் மனீந்தர் சிங் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள கருத்தில், இந்திய வீரர்கள் ஒரு வித அச்சத்தோடு ஆடி வருகிறார்கள். ஏதாவது செய்து வெற்றிபெற வேண்டும் என்று முயன்று அடுத்தடுத்து தவறுகளை செய்து வருகிறார்கள். இந்திய அணியின் பிளானிங்கில் எதோ தவறு இருக்கிறது.

பிளானிங்
ஓப்பனிங் இறங்கி நன்றாக ஆடும் ரோஹித் நியூசிலாந்துக்கு எதிராக ஓப்பனிங் இறங்கவில்லை. அதேபோல் 3வது இடத்தில நன்றாக ஆடும் கோலி 4வது இடத்தில் இறங்கினார். இப்படி இந்திய அணி எடுத்த முடிவுகளில் நிறைய தவறுகள் உள்ளது. நிறைய குழப்பங்கள் வெளிப்படையாக தெரிய தொடங்கி உள்ளது. தோனியின் ஆலோசனை, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, இரண்டு சீனியர் வீரர்கள் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டது என்று நினைக்கிறேன்.

முடிவு
ட்ரெஸ்ஸிங் ரூமில் நிறைய பேர் கருத்து சொல்லி, முடிவுகளை எடுப்பதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது என்று நினைக்கிறேன். நிறைய குக் சேர்ந்து உணவை வீணாக்குவது போல இவர்கள் செய்கிறார்களோ என்று தோன்றுகிறது. ட்ரெஸ்ஸிங் ரூமில் குழப்பம் ஏற்பட்டது வெளிப்படையாக தெரிகிறது. கோலி - தோனி - ரவி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி ஒரு முடிவிற்கு வர வேண்டும்.

தேவை இல்லை
அணியில் ஏற்கனவே பயிற்சியாளர் இருக்கிறார். அப்படி இருக்கும் போது தோனி ஏன்? பயிற்சியாளர்தான் ஆலோசகர். இப்படி இருக்கும்போது கூடுதலாக ஆலோசனை வழங்க ஒருவரை கொண்டு வந்துதான் தவறாக சென்றுவிட்டது, என்று முன்னாள் வீரர் மனீந்தர் சிங் தெரிவித்துள்ளார். தோனிக்கு பயிற்சியாளருக்கு இணையான அதிகாரம் வழங்கப்படும் என்று கூறப்பட்ட போதே இது போன்ற குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக விவாதங்கள் எழுந்தன. முன்னாள் வீரர் மனீந்தர் சிங்கும் இப்போது இப்படி தெரிவித்து இருப்பது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications