அட.. ச்சீ.. ஆன்லைனில் ஆர்டர் செய்தது வாட்ச்.. வந்ததோ காண்டம்.. அதுவும்..! அதிர்ச்சியில் இளைஞர்!
எர்ணாகுளம்: கேரளாவில் ஆன்லைன் நிறுவனத்தில் வாட்ச் ஆர்டர் செய்தபோது காண்டம் வந்ததால் அதனை ஆர்டர் செய்த நபர் மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய நவீன உலகில் எல்லாமே நமது விரல் நுனியில் உள்ளது. முன்பெல்லாம் தீபாவளி, கிறிஸ்துமஸ், ரமலான் போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் மக்கள் குடும்பத்துடன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவார்கள்.
இதற்காக தனியாக ஒரு நாளையே ஒதுக்குவார்கள். அந்த காலமெல்லாம் மலையேறி போய் விட்டது. இப்போது நாம் விரும்பிய பொருளை இருக்கும் இடத்திலேயே பெற்றுக் கொள்ளும் வசதி வந்து விட்டது.

ஆன்லைன் நிறுவனங்கள்
எங்கு இருந்து என்ன பொருள் ஆர்டர் செய்தாலும், அந்த பொருள் நம்மை தேடி வந்து விடுகின்றன. இதற்காக எக்கச்சக்க ஆன்லைன் நிறுவனங்கள் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இப்படி பொருட்களை ஆர்டர் செய்யும்போது ஏகப்பட்ட தவறுகள் நிகழ்ந்து வருகின்றன. சில சமயம் பார்சலில் பொருட்களே இருக்காது. சில நேரம் நாம் ஆர்டர் செய்த பொருளுக்கு பதிலாக வேறு பொருள் வரும்.

வாட்ச் ஆர்டர் செய்தார்
இந்த நிலையில் கேரளாவில் ஆன்லைனில் வாட்ச் ஆர்டர் செய்த நபருக்கு காண்டம் பார்சலில் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் எர்ணாகுளம் தட்டாங்குளத்தை சேர்ந்தவர் அனில்குமார்(32). இவர் ஆன்லைனில் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்தார். அந்த வாட்ச்சின் விலையான ரூ.2,400-ஐ முன்கூட்டியே செலுத்தினார். 15-ம் தேதி அவரது கைக்கு வாட்ச் வந்து சேரும் என ஆன்லைன் நிறுவனம் கூறி இருந்தது.

அதுவும் இந்த கொடுமை
நேற்று முன்தினம் அந்த ஆன்லைன் நிறுவனத்தில் இருந்து ஒரு பார்சல் வந்தது. நமது புதிய வாட்ச் எப்படி இருக்கிறது? என்பதை அறிவதற்காக அனில்குமார் அந்த பார்சலை ஆர்வமுடன் பிரித்தார். அப்போது அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் பார்சலில் இருந்த சிறிய அட்டை பெட்டியில் 2 ஆணுறைகள்(காண்டம்) இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

எப்படி வந்தது?
தண்ணீர் நிரப்பப்பட்ட நிலையில் ஒரு காண்டமும், மற்றொரு சாதாராண காண்டமும் இருந்து கண்டு அதிர்ச்சியில் உறைந்தே போனார். ''நான் வாட்ச்தானே ஆர்டர் செய்தேன். எப்படி இது வந்தது?'' என்று அவர் பார்சலை கொண்டு வந்த நபரிடம் கேட்டார். அதற்கு அந்த நபர் '' இதில் எப்படி காண்டம் வந்தது என்று எனக்கு தெரியாது. பார்சலை கொண்டு சேர்ப்பது மட்டும்தான் எனது வேலை'' என்று கூறினார்.

அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல்
இதனை தொடர்ந்து அனில்குமார் தான் வாட்ச் ஆர்டர் செய்த ஆன்லைன் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் உரிய பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அவர் இதுபற்றி ஆலுவா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications