ஈரோடு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஈரோட்டில் கொரோனா பரிசோதனை என விஷ மாத்திரை கொடுத்து மூவர் கொலை.. பக்கத்து ஊர்க்காரரே கொன்றது அம்பலம்

Google Oneindia Tamil News

ஈரோடு: ஈரோடு அருகே கொரோனா பரிசோதனை என கூறி மாத்திரை கொடுக்கப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக அது விஷமாத்திரை என்பதும், குடும்பத்தையே திட்டமிட்டு தீர்த்து கட்ட பக்கத்து ஊர்க்காரர் செய்த சதி என்பது அம்பலமாகியுள்ளது. இதில் 3 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவரது மனைவி மல்லிகா, மகள் தீபா, உறவினர் குப்பம்மாள் ஆகியோர் இருந்தனர்.

28-ம் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கம்.. விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?.. அரசின் முக்கிய அறிவிப்பு 28-ம் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கம்.. விரைவு பஸ்கள் இயக்கப்படுமா?.. அரசின் முக்கிய அறிவிப்பு

இந்த நிலையில் கொரோனா பரிசோதனை என்ற பெயரில் யாரோ ஒருவர் வந்து கருப்பண்ணன் வீட்டில் உள்ள 4 பேருக்கும் மாத்திரை கொடுத்தாராம்.

இருவர்

இருவர்

இதில் நேற்று மல்லிகா இறந்துவிட்டார். இன்று தீபா, குப்பம்மாள் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர். இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தினர். கொரோனா பரிசோதனை என கூறி வந்த இளைஞர் யார்? இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலையா என விசாரணை நடத்தி வந்தனர்.

பரிசோதனை

பரிசோதனை

இந்த நிலையில் மல்லிகா வீட்டின் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் யாரோ ஒரு மர்ம நபர் கருப்பண்ணனின் வீட்டிற்கு வந்தார். அங்கிருந்த 4 பேரிடமும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றார்.

பரிசோதனை

பரிசோதனை

பின்னர் அதற்கு முன்னர் ஒரு மாத்திரையை கொடுத்து இதை சாப்பிட்டால்தான் டெஸ்ட் ரிசல்ட் கிளியராக இருக்கும் என்றார். உடனே 4 பேரும் அதை சாப்பிட்டனர். பின்னர் அந்த இளைஞர் உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கிறது. எனவே கொரோனா பரிசோதனை வேண்டாம் என சொல்லிவிட்டார்.

இளைஞர்

இளைஞர்

பின்னர் எங்கள் வீட்டிற்கு வந்து அது போல் மாத்திரை கொடுத்தார். நான் வாங்க மறுத்துவிட்டேன், உடனே அந்த நபர் சென்றுவிட்டார் என போலீஸாரிடம் கூறியுள்ளனர். இந்த நிலையில் கிராமத்தில் சுற்றித் திரிந்த சபரி (25) என்ற இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர்.

ஊர்க்காரர்

ஊர்க்காரர்

அப்போது அவர் கூறுகையில் இந்த கிராமத்திற்கு பக்கத்து ஊர்க்காரர் கல்யாண சுந்தரம் என்னை அணுகி, கருப்பண்ணன் குடும்பத்திற்கு கொரோனா சோதனை செய்வது போல் வந்து மாத்திரை கொடுக்குமாறு கூறினார். அது விஷ மாத்திரை என எனக்கு தெரியாது. இதை செய்தால் பஞ்சாயத்தில் எனக்கு வேலை வாங்கி தருவதாக கல்யாண சுந்தரம் தெரிவித்தார். அதனால் இதை செய்தேன் என வாக்குமூலம் அளித்தார்.

இருவர் கைது

இருவர் கைது

இதையடுத்து கல்யாண சுந்தரத்தை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது விஷ மாத்திரை கொடுத்ததை ஒப்புக் கொண்டார். மேலும் தான் கருப்பண்ணனிடம் ரூ 6.5 லட்சம் கடன் வாங்கியதாகவும் அந்த கடனை திருப்பி கேட்டதால் ஆத்திரம் அடைந்து கொலை செய்ததாகவும் கல்யாண சுந்தரம் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கல்யாண சுந்தரத்தையும் சபரியையும் போலீஸார் கைது செய்தனர்.

English summary
3 were murdered using poisonous tablet by neighbour village in Erode. 2 were arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X