பெங்களூர் டூ ஈரோடு.. ஆசை ஆசையாய் 2.5 லட்சத்திற்கு குழந்தையை வாங்கிய பெண்கள்.. இறுதியில் ட்விஸ்ட்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரத்தில் 2 பெண்கள் சேர்ந்து 9 மாத பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வந்து வளர்ப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. போலீசார் சென்று விசாரித்த போது, பெங்களூரில் இருந்து ரூ.2.5 லட்சத்துக்கு 9 மாத குழந்தையை விலைக்கு வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து 2 பெண்களை பவானி போலீசார் கைது செய்தனர். அவர்கள் குழந்தையை கடத்தி விற்க முயன்றார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
குழந்தைகளை கடத்தி விற்பது இன்றைக்கு ஆங்காங்கே நடக்கிறது. அப்படி ஒரு சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானியில் நடந்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி பழனிபுரம் 4-வது வீதியில் 2 பெண்கள் சேர்ந்து 9 மாத பெண் குழந்தையை விலைக்கு வாங்கி வந்து வளர்ப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்தது. அவர் அளித்த தகவலின் பேரில் பவானி டிஎஸ்பி ரத்தினகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா ஆகியோர் நேரில் சென்று விசாரித்த போது, பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது.

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ஈரோடு மாவட்டம்பவானி பழனிபுரத்தை சேர்ந்த சகாயராஜ் என்பவருடைய மனைவி செல்வி (வயது 37). பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஆனந்தராஜ் என்பவருடைய மனைவி ஜானகி (47). செல்வியும், ஜானகியும் அந்த பகுதியில் உள்ள துணிப்பை தைக்கும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்கள். செல்விக்கு ஒரு மகன் உள்ளார். மகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார்.
இந்தநிலையில் செல்வியை அவருடைய கணவர் விவாகரத்து செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் செல்வி தனியாக வசித்து வந்துள்ளார். ஜானகிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். கணவர் ஆனந்தராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். மகனும், மகளும் திருமணம் ஆகி தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இதனால் ஜானகியும் தனியாக தங்கியுள்ளார். தனியாக வசித்து வந்ததால் செல்வியும், ஜானகியும் சேர்ந்து ஒரு குழந்தையை விலைக்கு வாங்கி வளர்க்க முடிவு செய்திருக்கிறார்களாம். இதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெற்றோரிடம் குழந்தையை விலைக்கு கேட்டுள்ளனர். அதற்கு அவர்கள் சம்மதித்ததாக தெரிகிறது.
இதைத்தொடர்ந்து கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு செல்வியும், ஜானகியும் காரில் பெங்களூர் சென்றுள்ளனர். பின்னர் 9 மாத பெண் குழந்தையை ரூ.2.5 லட்சத்துக்கு விலை கொடுத்து வாங்கி வந்துள்ளனர். ஆனால் பெங்களூருவில் எந்த பகுதிக்கு டிரைவர் அழைத்து சென்றார்?, அவர் யார்?, அவருடைய செல்போன் எண் என்ன என்பது? குறித்து அவர்கள் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து குழந்தையை விலைக்கு வாங்கியதாக செல்வியையும், ஜானகியையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து குழந்தையை மீட்டு ஈரோடு சோலாரில் உள்ள குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். எனினும் செல்வியும், ஜானகியும் குழந்தையை கடத்தி வந்து விற்க முயன்றார்களா அல்லது உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications