ஈரோட்டில் கமலா கழுத்தில் 5 பவுன் தங்கம்.. விளக்கை போட்டு பார்த்தால் அதிர்ச்சி? 5 தனிப்படைகள் அமைப்பு
ஈரோடு: தங்க நகை கொள்ளை, தங்க நகை பட்டறையில் திருட்டு, நகைக்காக கொலை என அதிர்ச்சி சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து விட்டன.. இப்படிப்பட்ட சூழலில், ஈரோட்டில் கமலா வீட்டில் என்ன நடந்தது தெரியுமா? சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப் படைகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா அமைக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது. இதுதொடர்பான விசாரணையும் விரிவாக நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்டம் சூளை LVR காலணியை சேர்ந்தவர் கமலா.. இவருக்கு 65 வயதாகிறது.. இவரது கணவர் பெயர் மணிகண்டன்.. இந்த தம்பதிக்கு மகேந்திர சேனாதிபதி என்ற மகன் உள்ளார்.. இவர் பாண்டிச்சேரியில் உள்ள தனியார் வங்கியில் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார்.. எனவே, பாண்டிச்சேரியிலேயே தங்கியிருக்கிறார் மகேந்திரன்.

தனிமையில் வசித்து வந்த கமலா
விடுமுறை நாட்களில் மட்டும் ஈரோட்டுக்கு வந்து அம்மாவை பார்த்துவிட்டு செல்வாராம்.. மற்ற நாட்களில் புதுச்சேரியில் இருந்து தினமும் இரவு 8 முதல் 9 மணிக்குள் அம்மாவிடம் பேசுவது வழக்கமாம்.
கடந்த 2 வருடங்களுக்கு முன் மணிகண்டன் இறந்துவிட்டார்.. இதனால் கமலா மட்டும் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்... இந்நிலையில் நேற்றிரவு தன்னுடைய அம்மாவுக்கு போன் செய்துள்ளார் மகேந்திர சேனாதிபதி. ஆனால் போன் ரிங் நீண்டநேரமாக சென்றும், கமலா போனை எடுக்கவில்லை.. இதனால் பதறிப்போன மகேந்திரன், பக்கத்து வீட்டிலிருந்தவர்களிடம் விஷயத்தை சொல்லி, தன்னுடைய வீட்டுக்கு சென்று அம்மாவை பார்க்குமாறு தெரிவித்துள்ளார்
விளக்கு போட்டு பார்த்தனர்
உடனே அக்கம்பக்கத்தினரும் கமலாவின் வீட்டுக்கு சென்றனர்.. வீட்டில் விளக்குகள் எரியாமல் இருந்ததால், விளக்கை போட்டு பார்த்தனர். அப்போது அங்கே ரத்த வெள்ளத்தில் கமலா விழுந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.. வீட்டின் ஹாலிலேயே கழுத்து அறுக்கப்பட்டு சடலமாகி கிடந்தார் கமலா..
உடனே இதைப்பற்றி மகேந்திரனுக்கும் வீரப்ப சத்திரம் போலீசுக்கும் தகவல் தந்துள்ளனர்.. சிறிது நேரத்தில் விரைந்து வந்த போலீசார் கமலாவின் சடலத்தை மீட்டு போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
5 சவரன் தங்க நகை
பிறகு இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர்.. கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் பணியும் ஆரம்பமாகி உள்ளது.. அத்துடன், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது..
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிப்பதற்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா ஐந்து தனிப்படைகளை, டிஎஸ்பி முத்துகிருஷ்ணன் தலைமையில் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
கமலாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடிக்கவே இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்றெல்லாம் விசாரணை நடக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications