அம்புட்டு அவசரம்.. அதான் காலேஜ் பஸ்ஸையே எடுத்துட்டு போயி.. சோனமுத்தா இதெல்லாம் ரொம்ப ஓவரு?
ஈரோடு: தனியார் கல்லூரி டிரைவராக வேலை பார்த்து வந்த நிர்மல்குமார் செய்த காரியத்தால் அவர் வேலை செய்த கல்லூரி மட்டுமல்ல, அவர்களின் அப்பா, அம்மாவே பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இப்போது சிறையில் கம்பி எண்ணி வருகிறார். அப்படி என்ன செய்தார் என்பதை இப்போது பார்ப்போம்.
ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி சுல்தான் ரோட்டை சேர்ந்த நிர்மல் குமார் என்பவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியின் பஸ் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

பக்ரீத் பண்டியான நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் அந்த கல்லூரி பஸ்சை நிர்மல்குமார் மற்றும் இவரது சகோதரர் நிதிஷ் ஆகிய இருவரும் எடுத்து சென்றனர். இதையடுத்து அவர்கள் மது குடித்து விட்டு வந்திருக்கிறார்கள்.
அப்போது நிர்மல்குமார் முழுயைமாக மது போதையில் இருந்ததால் அவரால் வாகனத்தை ஓட்ட முடியவில்லை. இதையடுத்து அவருடைய சகோதரர் நிதிஷ் பஸ்சை ஓட்டி வந்தார். தொடர்ந்து புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாலம் அருகே கல்லூரி பஸ் வந்து கொண்டு இருந்தது.
அப்போது நிலை தடுமாறி எதிர்பாராத விதமாக பஸ் ரோட்டை விட்டு கீழே இறங்கி பள்ளத்துக்குள் இழுத்துச் சென்று சிறிது தூரம் சென்று நின்றது.
அப்போது கல்லூரி பஸ்சில் யாரும் இல்லாததால் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. இதில் கல்லூரி பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது.
இதையடுத்து அவர்கள் பஸ்சை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு சென்றனர். பஸ்ஸை எடுத்து சென்ற விஷயம் தெரிந்து அம்மா கேட்டதால், வீட்டில் நிர்மல் குமார் தனது அம்மாவுடன் தகராறு செய்தார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து நிர்மல்குமார் அவருடைய தாய் மற்றும் தந்தை இருவரையும் தகாத வார்த்தை பேசி தாக்கி உள்ளார். அசிங்கமான வார்த்தைகள் பேசி அவர் தாய்-தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் புளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் மகன் மீதே புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி நிர்மல்குமாரை கைது செய்தார்கள். இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மது குடிக்க கல்லூரி பஸ்சை ஓட்டி சென்ற டிரைவர் விபத்தில் சிக்கியதுடன் தற்போது சிறையில் கம்பி எண்ணி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications