பணநாயகம்.. ஜனநாயக முறைப்படி நடந்தால் ஜெயித்து இருப்போம்..வாக்காளர்களுக்கு நன்றி-இபிஎஸ்
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஜனநாயக படுகொலையை திமுக அரங்கேற்றியிருக்கிறது என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு: ஜனநாயக படுகொலையை ஈரோடு கிழக்கு தொகுதியிலும் திமுக அரங்கேற்றியிருக்கிறது. திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறவைத்துள்ளனர். திமுகவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி என்று அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார். இந்த நிலையில், பணநாயகத்தின் மூலம் திமுக வெற்றி பெற வைத்துள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவரும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் இதயப்பூர்வமான நன்றியை அதிமுக சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது வழியில் தீய சக்திகளின் முகத்திரையை கிழிக்கின்ற வகையில் அதிமுக இந்த தேர்தலை சந்தித்தது. திமுக அரசு அமைந்த இந்த 22 மாத காலத்தில் விடியா திமுக அட்சி மக்கள் விரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை மக்கள் அனைவரும் அறிந்தே வைத்திருக்கிறார்கள்.
அதேவகையான ஜனநாயக படுகொலையை ஈரோடு கிழக்கு தொகுதியிலும் திமுக அரங்கேற்றியிருக்கிறது. திமுக ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி பணநாயகத்தின் மூலம் காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறவைத்துள்ளனர். திமுகவின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் அதிமுகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications