ஆசை ஆசையா அந்தியூருக்கு ஓடிவந்த அம்பானி? இதுதான் அந்த "காலா"வா? வாயை பிளக்க வைத்த ஈரோட்டு சந்தை
ஈரோடு: அந்தியூர் குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ள நிலையில், அம்பானி குறித்த தகவல் ஒன்று இணையத்தில் பரபரப்பாக வட்டமடித்து கொண்டிருக்கிறது. அது என்ன?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாத சுவாமி கோயில் ஆடிப்பெரும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக நடைபெறும்.. இந்த விழாவில், தேர்த்திருவிழாவை பிரம்மாண்டமாக அலங்கரிப்பார்கள்.. பிறகு, அலங்கரிக்கப்பட்ட காமாட்சியம்மன், பெருமாள் சாமி, குருநாதசாமி ஆகிய உற்சவர் சிலைகள் தேரில் கொண்டு வந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

பிறகு, ஓங்கோல் இன மாடுகள் மற்றும் நாட்டிய குதிரை நடனமாடி முன்னே செல்ல, குருநாதசாமி, பெருமாள் சாமி தேரை பக்தர்கள் தங்கள் தோள் மீது சுமந்துக்கெண்டு வனக் கோயிலுக்கு செல்வார்கள்.
திருவிழா: அதேபோல, இந்த கோயில் திருவிழாவை ஒட்டி மிகவும் பிரசித்திபெற்ற தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரைச்சந்தையும் நடைபெறும்.. இது ஒரு பழமையான திருவிழாவாகும்.. அதாவது, மன்னர்கள் காலத்தில் இருந்தே இந்த விழா நடந்து வருகிறது.
இதற்காக இந்தியா முழுவதிலுமிருந்து காட்டியவார், மார்வார், போனி, நாட்டு ரக குதிரைகள் என ரகரகமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட குதிரைகள் கொண்டுவரப்படும்.. இந்த குதிரைகள் ஒவ்வொன்றும் ஐம்பது ஆயிரம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை இருக்குமாம். மைசூரு மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி போர் படைக்காக இங்கு வந்து குதிரைகளை வாங்க சென்றிருக்கிறார்களாம்.
ஆடிப்பெருந்தேர்: அப்படித்தான் இந்த முறையும், குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா நடந்துள்ளது.. முன்னதாக, இரண்டாயிரம் மேற்பட்ட குதிரைகள் வருகை தந்துள்ளன... கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கான நாட்டு ரக குதிரைகள் வந்திறங்கின.. மாநில அளவிலான குதிரைச்சந்தை மட்டும் 4 நாட்களுக்கு நடக்கிறது.
இதில் உயர்ரக குதிரைகளான மார்வார், கத்தியவார், நொக்ரா, இங்கிலீஷ் பிட் மற்றும் நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தது.. இந்த முறை திருவிழாவுக்கு, ரூ.25 ஆயிரம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை குதிரைகள் விற்பனைக்கு வந்திருக்கின்றன..
கண்காட்சி: இதில் அனைவரையும் கவர்ந்தது, காலா என்ற குதிரைதான்.. இது கத்திவார் ரகக்குதிரையாகும்.. குநாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த காலா குதிரையை கண்காட்சிக்கு கொண்டு வந்திருந்தார்.. இந்த குதிரையை அம்பானி தரப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு விலைக்கு கேட்டார்களாம்.. ஆனால், இந்த கருப்பு நிற குதிரையை, ரொம்ப செல்லமாக வளர்த்துவிட்டதால் அதனை விற்க மனமில்லை என்று குதிரையின் ஓனர் வீரா வரதராஜன் சொல்லிவிட்டாராம்.
அதுமட்டுமல்ல, இந்த காலா குதிரை நிறைய சாகசம் செய்யுமாம்.. தேசிய அளவிலும், தமிழ்நாடு அளவிலும் பல பரிசு கோப்பைகளை வென்றிருப்பதாக பூரித்து சொல்கிறார் வீரா வரதராஜன்.
பரபரப்பு: விலங்குகளின் மீது தனிப்பிரியம் வைத்திருப்பவர் அம்பானி.. விலங்குகளின் நலனிலும் தீவிர அக்கறை செலுத்துபவர்.. குஜராத்தின் ஜாம்நகரில் 3,000 ஏக்கர் பரப்பளவில் விலங்குகள் காப்பகம் ஒன்று பிரத்யேகமாக நடத்தப்பட்டும் வருகிறது.. இப்போது அந்தியூர் காலா குதிரைக்கு ஆசைப்பட்டு, அதை 1 கோடி ரூபாய்க்கு கேட்டதாக சொல்லப்படுகிறது.
ஆனால் அம்பானி தரப்பில் இப்படி பேசியதாக தகவல் வெளியாகியிருக்கிறதே தவிர, யார் என்னவென்று உறுதிப்படுத்தப்படவில்லை.. அம்பானியே கேட்டாலும், குதிரையை தரமுடியாது என்று மறுத்துள்ளதாக சொல்லப்படுவதுதான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications