"முதல்வரே..! திராவிடம் தலை குனியும் ஆட்சி தான் திராவிட மாடலா!" டிடிவி தினகரன் சரமாரி கேள்வி
ஈரோடு: ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திமுக அரசைக் கடுமையாகச் சாடி பேசினார்.
Recommended Video
ஈரோட்டில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஈரோடு சென்றிருந்தார்.
அக்கட்சியின் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் திமுக அரசை மிக கடுமையாகச் சாடி பேசினார்.

டிடிவி தினகரன்
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "2021 சட்டமன்ற தேர்தலின் போது அதிமுகவை வீழ்த்தி ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கத்திற்காக பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை திமுக அளித்து. இப்போது ஆட்சிக்கு வந்து ஒரு ஆண்டு ஆகியும் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை ஒன்று கூட நிறைவேற்றாமல் பொய்யான ஆட்சி நடத்தி வருகிறது. தங்களுக்கான நலத் திட்டங்கள் நிறைவேறும் என்கிற எண்ணத்தில் திமுகவை நம்பி வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கும் அரசாக இந்த திமுக அரசு இருக்கிறது.

ரூ 1000 திட்டம்
திமுக அளித்த வாக்குறுதிகளில் ஒன்றான பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் திட்டத்தை வழங்காமல் ஏமாற்றி வருகின்றனர். திமுகவின் இத்தகைய செயல்பாடு வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுக பலத்த வீழ்ச்சியை ஏற்படுத்தும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாக வீண் தம்பட்டம் அடித்து வருகிறார் .

திராவிட மாடல்
உண்மையில் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி என்பது திராவிடம் தலை குனியும் ஆட்சியாக நடந்து வருவது வேதனைக்குரிய ஒன்றாக உள்ளது. தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி அமைக்கிறதோ அப்போதெல்லாம் ரவுடிகள் பலர் சுதந்திரமாக உலா வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக திமுகவின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுக்கும் ஆட்சியாக உள்ளது.

ஆன்லைன் சூதாட்டம்
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்ய வேண்டும்.. எல்கேஜி யுகேஜி வகுப்புகளை அங்கன்வாடி மையங்களில் நடத்துவது தொடர்பான பெற்றோர்களின் கருத்துப்படி சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுகின்ற திமுக அரசு மக்களுக்கு நல்லது செய்கிற அரசாகச் செயல்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.
-
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
ஒதுங்கும் துரைமுருகன்.. திமுகவின் புதிய பொதுச்செயலாளராகிறாரா ஆ.ராசா? உதயநிதி ஸ்டாலினும் ஆதரவாம்! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
சிங்கப்பெண் திட்டத்தை.. தொடங்கி வைக்க நாள் நட்சத்திரம் பார்க்க வேண்டுமா? சீறும் டிடிவி தினகரன் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது












Click it and Unblock the Notifications