ஈரோட்டுக்கு குதிரையுடன் ஆசையாக ஓடிவந்த சைஜா.. பக்கெட் தண்ணீரை குடித்த 6 குதிரைகள்! திகைத்த அந்தியூர்
ஈரோடு: தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஆடி மாத கோயில் திருவிழாக்கள் களை கட்டி வருகின்றன.. அந்தவகையில், ஈரோடு மாவட்டம், அந்தியூர் குருநாதசுவாமி கோவில் தேர்த்திருவிழாவும் விரைவில் நடக்க உள்ளது.. வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை இந்த திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.. இப்படிப்பட்ட சூழலில், எதிர்பாராத சம்பவம் ஒன்று ஈரோடு அந்தியூர் கால்நடை சந்தையில் ஏற்பட்டுள்ளது. என்ன நடந்தது தெரியுமா?
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற குருநாத சுவாமி கோயில் ஆடிப்பெரும் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும்.

இந்த விழாவில், தேர்த்திருவிழாவை பிரம்மாண்டமாக அலங்காரம் செய்வார்கள்.. பின்னர் அலங்கரிக்கப்பட்ட காமாட்சியம்மன், பெருமாள் சாமி, குருநாதசாமி ஆகிய உற்சவர் சிலைகள் தேரில் கொண்டு வந்து வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
டான்ஸ் ஆடும் குதிரைகள்
பிறகு ஓங்கோல் இன மாடுகள் மற்றும் நாட்டிய குதிரை நடனமாடி முன்னே செல்ல, குருநாதசாமி, பெருமாள் சாமி தேரை பக்தர்கள் தங்கள் தோள் மீது சுமந்துக்கெண்டு வனக் கோயிலுக்கு செல்வார்கள்...
இந்த திருவிழாவை ஒட்டி மிகவும் பிரசித்திபெற்ற தென்னிந்தியாவின் புகழ்பெற்ற குதிரைச்சந்தையும் நடைபெறும்.. இது மிகவும் பழமையான திருவிழாவாகும்.. அதாவது, மன்னர்கள் காலத்தில் இருந்தே இந்த விழா நடந்து வருகிறது. இந்த அந்தியூர் கால்நடை சந்தை பிரபலமாவதற்கு காரணமே, இசைக்கு ஏற்ப நடமாடும் குதிரை உலக புகழ் பெற்றதால்தான்.
காலா குதிரை ஸ்பெஷல்
இதற்காக இந்தியா முழுவதிலுமிருந்து காட்டியவார், மார்வார், போனி, நாட்டு ரக குதிரைகள் என ரகரகமான 1000-க்கும் மேற்பட்ட குதிரைகள் கொண்டுவரப்படும்.. இந்த குதிரைகள் ஒவ்வொன்றும் 50 ஆயிரம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை இருக்குமாம். மைசூரு மன்னர்களான திப்பு சுல்தான், ஹைதர் அலி போர் படைக்கு குதிரைகளை வாங்குவதற்காக இங்கு வந்து சென்றிருக்கிறார்களாம்.
கடந்த வருடமும் இதேபோல குருநாதசாமி கோவில் ஆடிப்பெருந்தேர் திருவிழா நடைபெற்றபோதும், 2000-க்கும் அதிகமான குதிரைகள் வருகை தந்தன.. கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கில் நாட்டு ரக குதிரைகள் வந்திறங்கின.. உயர்ரக குதிரைகளான மார்வார், கத்தியவார், நொக்ரா, இங்கிலீஷ் பிட் மற்றும் நாட்டுக் குதிரைகளும் விற்பனைக்கு வந்திருந்தது.. மாநில அளவிலான குதிரைச்சந்தை மட்டும் 4 நாட்களுக்கு அந்தியூரில் நடந்தது..
அம்பானி கேட்ட காலா
ரூ.25 ஆயிரம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை குதிரைகள் விற்பனைக்கு வந்த நிலையில், அனைவரையும் காலா என்ற குதிரை கவர்ந்திழுத்தது.. நாமக்கல்லை சேர்ந்த வரதராஜன் என்பவர் இந்த காலா குதிரையை வளர்த்து வருகிறார்.. இந்த குதிரையை அம்பானி தரப்பில் ஒரு கோடி ரூபாய்க்கு விலைக்கு கேட்டார்களாம்.. ஆனால், கருப்பு நிற காலா குதிரையை, செல்லமாக வளர்த்துவிட்டதால் அதனை விற்க மனமில்லை என்று வரதராஜன் சொல்லிவிட்டார்.
அம்பானியே கேட்டும் குதிரையை தர மாட்டேன் என்று வரதராஜன் சொன்னதாக அன்று செய்திகள் வெளியிருந்ததாக பரபரப்பாக பேசப்பட்டது நினைவிருக்கலாம்.
பக்கெட்டில் தண்ணீர்
இந்நிலையில், தற்போது இந்த வருடத்துக்கான திருவிழா நடைபெற உள்ளது.. குருநாதசுவாமி கோவில் வரும் 13-ந்தேதி தொடங்கி 16-ந்தேதி வரை நடைபெற உள்ளது.இதற்காக அந்தியூர் பகுதியில் கோவில், கடைகள், கேளிக்கை அரங்குகள், குதிரை மற்றும் மாட்டு சந்தைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கால்நடை சந்தைக்கும், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விலங்குகள் கொண்டு வரப்பட்டு வருகின்றன.. அந்தவகையில்,
கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த சைஜா என்பவர் 24 குதிரைகளை சந்தைக்கு கொண்டு வந்தார். குதிரையின் பாதுகாவலராக பைரஸ் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்..
யூரியா தண்ணீர்
நேற்றிரவு குதிரைக்கு அருகில் உள்ள தோட்டத்திலிருந்து, பக்கெட்டில் தண்ணீர் கொண்டு வைத்தார். ஆனால், அந்த பக்கெட்டில் ஏற்கனவே யூரியா இருந்துள்ளதை பைரஸ் கவனிக்கவில்லை.. குதிரைகளும், பக்கெட்டிலிருந்த தண்ணீரை குடித்துவிட்டன.. இதில், 6 குதிரைகள் யூரியா தண்ணீரை குடித்து, வரிசையாக மயங்கி கீழே விழுந்து இறந்துவிட்டன..
மற்ற குதிரைகளுக்கு, வேறு பக்கெட்டுகளில் தண்ணீர் வைத்ததால், அவைகள் உயிர் தப்பின.. இன்னும் திருவிழா துவங்காத நிலையில், விற்பனைக்கு வந்த குதிரைகளில் 6 குதிரைகள் இறந்துள்ளது பெருத்த சோகத்தை ஈரோட்டில் ஏற்படுத்தி உள்ளது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications