"துண்டு" சேருதோ.. அதிமுக தடாலடி.. "தனிஆர்வத்தன" பாஜக.. "நேசக்கரம்" நீட்டுகிறதா திமுக.. பரபர 2 விஷயம்
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட தமிழக கட்சிகள் ஆர்வம் காட்டி வருகிறார்களாம்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து புதுபுது தகவல்கள் தினமும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில், இப்போது 2 தகவல்கள் வட்டமடித்து வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா திடீர் மரணம் அடைந்ததால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. மேலும், அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..
வழக்கமாக, ஒரு தொகுதி காலியானால் 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தவேண்டும் என்பது விதி.. எனவே, வருகிற மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது.

ஸ்டார் தொகுதி
ஆனால், அதற்குள் இப்போதே அந்த தொகுதியை தமிழக அரசியல் கட்சிகள் குறி வைத்துள்ளன.. அந்தவகையில், திமுக குறித்தும், அதிமுக குறித்தும் 2 செய்திகள் கசிந்துள்ளன.. அதிமுகவை பொறுத்தவரை, கடந்த முறை கூட்டணியில் தமாகா யுவராஜா இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.. ஆனால், இந்த முறை கூட்டணிக்கு விட்டுத்தராமல், அதிமுகவே இங்கு போட்டியிட வாய்ப்பு அதிகம் என்கிறார்கள்.. அப்படி போட்டியிட்டால் ஒரு சிக்கலும் உள்ளது.. எப்படியாவது இரட்டை இலையை வெற்றிபெற வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவிடுவார் எடப்பாடி பழனிசாமி.. இப்போதைக்கு கட்சிக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள் நிலவுகிறது.. கோர்ட் தீர்ப்பும் வராத நிலையில், இந்த இடைத்தேர்தல் சாத்தியமா என்ற கேள்வியும் அதிமுகவுக்குள்ளேயே இருக்கிறது..

பஞ்ச் பஞ்ச்
ஒருவேளை சின்னம் பெறுவதில் சிக்கல் இருந்தால் இந்த முறையும், தமாகாவுக்கே, சமயோஜிதமாக தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. ஆனால், பாஜக, அதிமுகவின் இந்த குழப்பத்தை சாதகமாக பயன்படுத்தி கொள்ள பார்க்கிறதாம்.. கூட்டணியை தவிர்த்துவிட்டு, தனித்து களமிறங்க தயாராவதாகவும் சொல்கிறார்கள்.. சமீபத்தில் திண்டுக்கல்லில் நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேசியிருக்கிறார்.. அப்போது இதை பற்றி கருத்து கேட்டார்களாம்..

சறுக்கல்கள்
அதற்கு அண்ணாமலை, "நாம் போட்டியிட்டால் நிச்சயம் ஜெயிக்கமுடியும்... திமுக அரசுக்கு எதிராக மக்கள் கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.. இது நமக்குதான் பிளஸ்" என்றாராம் நிர்வாகிகளிடம்".. அண்ணாமலையின் இந்த வார்த்தைகள் தமிழக பாஜகவுக்கு தெம்பை தந்துள்ள நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் மேலும் ஒரு சறுக்கல் வரலாம் என்கிறார்கள்.. அதேபோல, திமுகவை பொறுத்தவரை, ஆட்சிக்கு வந்த ஒன்றரை வருடங்களில் நடக்க போகும் முதல் இடைத்தேர்தல் என்பதால், திமுக இதில் முக்கியத்துவம் தந்து பார்க்கிறது.. ஆங்காங்கே திமுக அரசு மீது அதிருப்திகளும் புகார்களும் கிளம்பி உள்ளதால், இந்த தொகுதியில் வெற்றி பெற்று, நன்மதிப்பை மக்களிடம் பெற்றுவிட வேண்டும் என்று முனைப்பும் ஏற்பட்டுள்ளது.

ஸ்ட்டிராங் முடிவு
திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது என்றாலும், இந்த முறை தனித்து எந்த முடிவையும் திமுக எடுக்க வாய்ப்பிலையாம்.. மீண்டும் இந்த தொகுதியை காங்கிரஸுக்கே திமுக விட்டுக்கொடுக்கும் என்கிறார்கள்.. திருமகனின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன், வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்றும் செய்திகள் கசிகின்றன. ஈவிகேஎஸ் வேட்பாளராக முடிவானால், நிச்சயம் அவருக்கு வெற்றி கிடைக்கும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். சுருக்கமாக சொல்லப்போனால், கூட்டணியான தமாகாவுக்கு அதிமுக விட்டுக்கொடுக்கும், கூட்டணியான காங்கிரசுக்கு திமுக விட்டுக்கொடுக்கும்.. ஆனால், பாஜகதான் தனித்து கெத்து காட்ட ரெடியாகி வருகிறதாம்..!!
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications