"அந்த ஆடு".. நைட் நேரத்தில் ஊரையே நடுநடுங்க வைத்த "சிறுத்தை".. அதுக்குன்னு இப்படியா..?
ஆட்டை வைத்து சிறுத்தையை பிடித்த சத்தியமங்கலம் வனத்துறையினர்
ஈரோடு: சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு பாராட்டு மேல் பாராட்டு கிடைத்து வருகிறது.. என்ன காரணம் தெரியுமா?
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசிக்கின்றன.
யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் சத்தியமங்கலம் வனப்பகுதி வழியாக தமிழகம் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வது வழக்கம்.

ஆடு, மாடுகள்
இந்நிலையில், இங்கு ஒரு சிறுத்தை புகுந்து விட்டது.. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தொட்டகாஜனூர், தாளவாடி,பாரதிபுரம் கிராமங்களில் 5 க்கும் மேற்பட்ட கால்நடைகளை, இந்த சிறுத்தை வேட்டையாடவும் துவங்கியது.. இதனால் பொதுமக்கள் நடுநடுங்கிவிட்டனர்.. பகல் முழுவதும் இந்த சிறுத்தை யார் கண்ணிலும் படுவதில்லை.. காரணம், இரவு நேரங்களில் ஆடு, மாடுகளை வேட்டையாடிவிட்டு பகலில் நேரங்களில் பயன்பாடின்றி கிடக்கும் கல்குவாரியில் பதுங்கி கொண்டுவிடுகிறது.. அதனால், இந்த சிறுத்தையை பிடிக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

இலை, தழைகள்
இதையடுத்து சிறுத்தை உலாவும் பகுதிகளில் எல்லாம் சிசிடிவி கேமராவை வனத்துறையினர் பொருத்தினர்.. அதன் நடமாட்டத்தையும் தீவிரமாக கண்காணித்தனர்... மேலும் சிறுத்தை எந்த வழியாக வருகிறதோ, அந்த வழிகளில் எல்லாம் கூண்டுகளை வைத்தனர்.. அதாவது, அந்த கூண்டின்மேல், செடி, இலை தழைகளை வைத்துவிட்டனர்.. வெளியில் இருந்து பார்ப்பதற்கு, வெறும் செடி, தழைகள் மட்டுமே தெரியும்.. கூண்டு தெரியாது.

3 வயது
இன்னொரு இடத்தில், இதேபோல, கூண்டு வைத்துவிட்டு, அந்த கூண்டுக்கு பக்கத்தில், ஒரு ஆட்டையும் கட்டி வைத்துவிட்டு, வனத்துறையினர் மறைந்திருந்து காத்திருந்தனர்... எதிர்பார்த்ததுபோலவே, சிறுத்தை அந்த பக்கம் வந்தது.. ஆட்டையும் பார்த்துவிட்டது.. அந்த ஆட்டை வேட்டையாட அருகில் வந்தபோது, சிறுத்தை கூண்டில் சிக்கி கொண்டது.. அந்த சிறுத்தைக்கு 3 வயதுதான் ஆகிறது.. இப்படி நாசூக்காக, கூண்டை வைத்து பிடித்து விட்ட ஆக்ரோஷத்தில் சிறுத்தை சீறிக் கொண்டே இருக்கிறதாம்.

பலி ஆடு
ஆக்ரோஷமாக சிறுத்தை காணப்படுவதால், அதன் அருகே செல்ல வனத்துறையினர் பயந்துவிட்டனர்.. பிறகு, பொதுமக்களும், கூண்டின் அருகே செல்லாதபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்... இபபோது சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தி, அதனை தெங்குமரஹாடா பகுதிக்கு கொண்டு செல்ல வனத்துறை ஏற்பாடு செய்து வருகின்றனர்... சிறுத்தை பிடிப்பட்டதால் தாளவாடி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்... இருந்தாலும் அந்த "பலிஆடு" என்ன ஆச்சு என்று தெரியவில்லை.












Click it and Unblock the Notifications