சேம் சைடு 'ட்விஸ்ட்’ வைத்த சொக்காய் தோட்டம்.. சொந்த ஏரியா பெட்டியே காலி.. மண்ணைக் கவ்விய தென்னரசு!
அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது சொந்த வார்டிலேயே குறைவான வாக்குகளைப் பெற்றார்.
ஈரோடு : இன்று காலை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். காலையில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, இன்னும் பல சுற்றுகள் எண்ண வேண்டி இருக்கிறது, விழுந்த வேகத்தில் எழுவோம் என்றார். ஆனால், அப்போது விழுந்ததுதான், அதிமுக வேட்பாளர் ஒரு ரவுண்டில் கூட எழுந்து நிற்க முடியவில்லை.
அதிமுக வேட்பாளர் தென்னரசு தனது சொந்த வார்டான சொக்காய் தோட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரை விட 271 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார்.
சுற்றுகள் போகப் போக, காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர் இடையேயான வாக்கு வித்தியாசமும் வெகுவாக அதிகரித்து வருகிறது.

66 ஆயிரம் வித்தியாசம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். தபால் வாக்குகளிலும் சரி, அதைத் தொடர்ந்து மின்னணு வாக்குகளில் ஒவ்வொரு சுற்றிலும் சரி கணிசமான வித்தியாசத்தோடு தொடர்ந்து வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். ஒவ்வொரு சுற்றிலும் குறைந்தது 4 ஆயிரம் வாக்குகள் அதிமுக வேட்பாளரை விட அதிகம் பெற்று வருகிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்படியாக வாக்கு எண்ணிக்கை முடிவில் 66 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

விழுந்த வேகத்தில் எழுவோம்
ஆரம்பத்தில் அதிமுக வேட்பாளர் பின்தங்கிய சூழலில், அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா, இன்னும் பல சுற்றுகள் எண்ண வேண்டி இருக்கிறது, விழுந்த வேகத்தில் எழுவோம் என்றார். அதிமுகவினர் பலரும், நேரம் போகப்போக நிலைமை மாறும், அதிமுகவுக்கு பலம் வாய்ந்த பகுதிகளில் இன்னும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவில்லை, அடுத்தடுத்து பாருங்க.. அதிமுக வலிமை வாய்ந்த பகுதிகளின் பெட்டிகளை எண்ணட்டும் எனக் கூறி வந்தனர்.

சொந்த வார்டிலேயே
ஆனால், தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனே முன்னிலை வகித்து வருகிறார். உச்சமாக, தனது சொந்த வார்டிலேயே மண்ணைக் கவ்வியுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. தென்னரசு தனது சொந்த வார்டான சொக்காய் தோட்டத்தில் 192 வாக்குகளைப் பெற்றார். சொக்காய் தோட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 463 வாக்குகளைப் பெற்றார். சொந்த வார்டிலேயே காங்கிரஸ் வேட்பாளரை விட 271 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார் கே.எஸ்.தென்னரசு.

செல்வாக்கான புள்ளி
கே.எஸ்.தென்னரசு 1988-ம் ஆண்டு ஈரோடு நகர அதிமுக செயலாளராக பணியாற்றினார். 1999-ஆம் ஆண்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும் இருந்தார். 2010ஆம் ஆண்டு முதல் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு ஈரோடு தொகுதியில் 2001-ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின்பு 2016-ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வகையில், வலுவான வேட்பாளர் எனக் கருதி அவரை களத்தில் இறக்கினார் எடப்பாடி பழனிசாமி.

சொந்த பலம்
ஈரோடு கருங்கல்பாளையம் சொக்காய் தோட்டம் பகுதியில் வசித்து வரும் கே.எஸ்.தென்னரசு 2 முறை எம்.எல்.ஏவாகப் பணியாற்றிய செல்வாக்கோடு இந்த முறை அதிமுக சார்பில் களமிறங்கினார். அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பட்டாளம் என கடந்த ஒரு மாத காலமாக தீவிரமாக ஈரோடு கிழக்கில் தேர்தல் பணியாற்றிய நிலையில், தற்போது மிகக்குறைவான வாக்குகளைப் பெற்று தோல்வியைச் சந்திக்கிறார் தென்னரசு.

அதிமுகவினர் அதிர்ச்சி
உச்சமாக, தனது சொந்த வார்டிலேயே குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளார் அதிமுக வேட்பாளர் தென்னரசு. தனது பலத்தை நிரூபிக்கும் திட்டத்தோடு, வேட்பாளரை களமிறக்கி, தேர்தல் களத்தில்'பல' வகைகளிலும் ஆளுங்கட்சியான திமுகவுக்கு டஃப் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைவதை அறிந்து ஷாக் ஆகியிருக்கிறார்.
-
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன? -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ராஜினாமா பண்ணிட்டா.. ஆட்டம் முடிஞ்சதுன்னு அர்த்தம் கிடையாது! எம்பி பதவியை உதறிய சித்தராமையா -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ராகுல் காந்தியை சந்திக்க டெல்லி போன.. சித்தராமையாவுக்கு டிவிஸ்ட்! தள்ளி போன மீட்டிங்!












Click it and Unblock the Notifications