ஈரோடு தேர்தல்: "பாஜகவுடன் கூட்டணி" அதிமுக வாக்கு சதவிகிதம் கூட தான் செய்யும்.. தமிழ் மகன் உசேன்
பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவிற்கு வாக்கு சதவிகிதம் அதிகம் தான் ஆகும் என்று அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்றும், ஓபிஎஸ் பிரசாரம் செய்வது குறித்து எங்களுடைய தலைமைக்கழகம் முடிவு செய்யும் என்றும் பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவிற்கு வாக்கு சதவிகிதம் அதிகம் தான் ஆகும் என்றும் அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது.
காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.

தீவிர பிரசாரம்
இதேபோல் தேமுதிக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 77- பேர் ஈரோடு தேர்தல் களத்தில் உள்ளனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே எஞ்சியிருப்பதால் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக திமுகவின் மூத்த அமைச்சர்கள் உள்பட அக்கட்சி நிர்வாகிகள் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ் மகன் உசேன் பேட்டி
இதேபோல் பல்வேறு கட்சியினரும் ஈரோட்டில் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதிமுக சார்பிலும் முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இஸ்லாமிய சமுதாயத்தினர் மத்தியில் வாக்குகளை சேகரித்த அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் செய்தியாளர்களுக்க்கு பேட்டி அளித்தார். அப்போது தமிழ் மகன் உசேன் கூறியதாவது:-

அதிமுகவிற்கு வாக்கு சதவிகிதம் அதிகம்
பாஜகவுடன் கூட்டணியால் அதிமுகவிற்கு வாக்கு சதவிகிதம் அதிகம் தான் ஆகும். காரணம் என்னவென்றால் அவர்கள் ஒரு இயக்கம். நாங்கள் ஒரு இயக்கம். கொள்கை வேறு.. கோட்பாடு வேறு.. அரசியலில் தேர்தல் கால கட்டத்தில் கூட்டணி வைப்பது என்பது வேறு. எனவே கொள்கை அடிப்படையில் அதிமுக சமுதாயத்திற்கு அப்பாற்பட்டு ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்ற அடிப்படையில் செயல்படுகிறது.

ஓபிஎஸ் பிரசாரம் செய்வது குறித்து
எனவே ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். ஓபிஎஸ் பிரசாரம் செய்வது குறித்து எங்களுடைய தலைமைக்கழகம் முடிவு செய்யும். இவ்வாறு தமிழ்மகன் உசேன் கூறினார். கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி அடைய சிறுபான்மையினர் வாக்குகள் முக்கிய காரணமாக இருந்ததாக சொல்லப்பட்டது. இதை முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் கூட வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காததே அதிமுக தோல்விக்கு காரணம் என்று பேசியிருந்தார்.

சிறுபான்மையினர் வாக்குகள் சரியும்?
சிறுபான்மையினர் வாக்குகளை கவர பாஜகவுடன் கூட்டணியை முறிக்க அதிமுக தயாராகி வருகிறதோ என்ற பேச்சுக்கள் கூட அரசியல் வட்டாரத்தில் எழுந்த நிலையில், இந்த விவாதங்களுக்கு எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்தார். அதன்படி பாஜகவுடன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும் என்று வெளிப்படையாக எடப்பாடி கூறினார். இதனால் அதிமுகவிற்கு மீண்டும் சிறுபான்மையினர் வாக்குகள் சரியும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக ஈரோடு கிழக்கில் சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக இழக்கும் வாய்ப்புகளும் உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள்.

கொள்கை வேறு, கூட்டணி வேறு
இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரசியல் வல்லுனர்கள் பலரின் வாதமாக உள்ளது. அதோடு அதிமுக பாஜகவோடு நெருக்கமாக இருப்பதால் மைனாரிட்டிகள் வாக்குகள் திமுக கூட்டணிக்கே வரும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறும் நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பிரசாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பதால் அந்த கட்சி சொல்வதை நாங்கள் கேட்போம் என்று நீங்கள் நினைக்கவேண்டாம் கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தது நினைவிருக்கலாம்.
-
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
பாஜக பல்ஸ் குறையுது.. கமலாலய செங்கல்லை ஒவ்வொன்றாக உருவும் அண்ணாமலை! பாஜக பி-டீமா வி தி லீடர்ஸ்? -
22 எம்பிக்கள் உள்ள திமுக ஏன் பாஜகவை நோக்கி போகணும்? டெல்லி லாபிக்கு பிரபலம் கொடுத்த நச்சுப் பதிலடி -
திராவிட நடுக்கம்! அண்ணாமலையின் வலையில் விழும் திமுக, அதிமுக புள்ளிகள்.. களமிறங்கும் மாஜி IAS, IPS! -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
தமிழக பாஜகவை செதில் செதிலாக உடைத்த அண்ணாமலை ஆர்மி.. 2 நாட்களில் தரமான சம்பவம்.. பெரும் நிலநடுக்கம்! -
நீங்க கிளம்புங்க அண்ணாச்சி.. நயினாருக்கு டெல்லி தந்த ஷாக்! நாற்காலிக்கு சண்டை போடும் தாமரை சொந்தங்கள் -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்!












Click it and Unblock the Notifications