ஈரோட்டுக்கு குறி.. தாமரை + இலை கணக்கு சாதகம்.. ‘கிரவுண்ட் வொர்க்’.. ஆட்டத்தை தொடங்கிய பாஜக!
ஈரோடு : 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கியுள்ள பாஜக, பல வகைகளிலும் தங்களுக்கு சாதகமான ஈரோடு எம்.பி தொகுதியை குறிவைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி ஏற்கனவே பாஜக வசம் இருக்கும் நிலையில், ஈரோடு எம்.பி தொகுதியைக் கைப்பற்றுவதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அப்பகுதியில் பாஜக பலம் மற்றும் அதிமுக வாக்கு வங்கியை வைத்து, நிச்சயம் கை கொடுக்கும் என வந்த ரிப்போர்ட் அடிப்படையில், பணிகளைத் தொடங்கிவிட்டது பாஜக.
இதற்காக சமீபத்தில் ஈரோடு வந்த பாஜக அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில், ஈரோட்டில் கட்சியை வளர்க்க பல வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

கங்கணம் கட்டிய பாஜக
பா.ஜ.க தமிழகத்தில் இந்த முறை கணிசமான எம்.பி சீட்களை வென்றே தீர வேண்டும் எனக் கங்கணம் கட்டியுள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவை வளர்த்தெடுப்பதற்காக பாஜக மேலிட தலைவர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் பா.ஜ.கவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் கிடைத்த பின்னர் அண்ணாமலை பாஜக தலைவராக பொறுப்பேற்றார். அதன்பிறகு அக்கட்சியின் செயல்பாடுகளில் வேகம் கூடியுள்ளது. ஆளுங்கட்சியான திமுகவின் நடவடிக்கைகளை எதிர்த்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறது பாஜக.

டார்கெட் 25
2024 நாடாளுமன்றத் தேர்தலைக் குறி வைத்துத்தான் பாஜகவினரின் அரசியல் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, எம்.பி தேர்தலில் பெரும் வெற்றி பெறுவதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார். 2024 தேர்தலில் 25 தொகுதிகள் லட்சியம் எனும் குறிக்கோளோடு செயல்பட்டு வருகின்றனர் பாஜகவினர். அதன்படி, குறிப்பிட்ட சில தொகுதிகளை குறிவைத்து பா.ஜ.கவினர் ஏற்கனவே வேலையைத் தொடங்கியுள்ளனர்.

ரிப்போர்ட்
இதுவரை பாஜக வெற்றி பெற்றிருக்கும் தொகுதிகள், வெற்றிக்கு நெருக்கமாக வந்து தோல்வியடைந்த தொகுதிகள், பாஜக வலுவான கட்டமைப்பைக் கொண்ட தொகுதிகள், வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெறும் எம்.பி தொகுதிகள் என பாஜகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை அடையாளம் கண்டுள்ளனர். அதன்படி, பாஜகவுக்கு சாதகமாக உள்ள தொகுதிகளில் தேர்தல் பணிகளை தீவிரமாகத் தொடங்கிவிட்டது பாஜக.

ஈரோடு குறி
2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நான்கு தொகுதிகளில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியும் ஒன்று. ஈரோடு மக்களவைத் தொகுதியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், தாராபுரம், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஆகிய 6சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன.

பாஜக + அதிமுக கணக்கு
மொடக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே பலத்தை நிரூபித்துள்ளது பாஜக. தாராபுரத்தில் எல்.முருகன் போட்டியிட்டு குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். ஏற்கனவே, கொங்கு மண்டல பகுதி அதிமுகவின் வாக்கு வங்கி நிறைந்தது. இதனால், அதிமுக கூட்டணியில் ஈரோடு தொகுதியில் போட்டியிடும்போது எளிதாக வெற்றி பெறலாம் எனக் கணக்கு போட்டுள்ளது பாஜக.

நிர்வாகிகளுக்கு வலைவீச்சு
இதற்காக, ஈரோடு எம்.பி தொகுதியில் உள்ள திமுக, அதிமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியினரை பாஜகவுக்கு இழுப்பதற்கான திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளதாம். மேலும், அப்பகுதியில் செல்வாக்கு மிக்க தொழிலதிபர்களை பாஜகவில் சேர்த்து, கட்சியை வளர்ப்பதற்கு திட்டம் வகுக்கப்பட்டு வேலைகள் தொடங்கிவிட்டனவாம். விரைவில், பல புள்ளிகள் பாஜக கரை வேட்டி கட்டப் போகிறார்கள் என்கிறார்கள் ஈரோடு பாஜகவினர்.

மேலிட பிரமுகர்
சமீபத்தில், பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி ஈரோட்டில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மொடக்குறிச்சி எம்.எல்.ஏ சரஸ்வதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பாஜகவின் அதிரடி 'வியூகம்' தொடர்பான பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டுள்ளன.

கரைவேட்டிகள் ஷாக்
முக்கியமாக, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுத்து வரும் நிர்வாகிகளுக்கு பதவி, பரிசு என போனஸ் வழங்கப்படும் என்றும் கண் காட்டப்பட்டுள்ளதாம். இச்செய்தி, திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் லோக்கல் கரைவேட்டிகளுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இதுபற்றி மேலிடத்தின் காதிலும் போட்டுள்ளனராம்.
-
"கடிதத்தை வெளியிட்டதிலேயே குட்டு அம்பலமாகிவிட்டது".. நிர்மலா சீதாராமனை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின் -
ஒடிசாவில் அசிங்கப்படுத்திவிட்டு.. தமிழ்நாட்டில் வாழை இலை விருந்து கேட்குதா? பாஜகவிற்கு கேள்வி! -
ஜெயித்தே ஆகணும்.. இளம் வாக்காளர்களை விடாதீர்கள்.. பாஜக பூத் கமிட்டிக்கு பிரதமர் மோடி போட்ட உத்தரவு -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
“கட்சியால் புறக்கணிக்கப்பட்டவர்”.. கரூர் ரோபோக்கள் என விமர்சித்த அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி -
சுந்தர் சி வேண்டாம்னு ஏன் சொன்னாருனு எனக்கு அப்போ புரியலை, இப்போ புரியுது! அண்ணாமலை கலகல! -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
முத்துராமலிங்கத் தேவரின் மறு உருவம் அண்ணாமலையா.. செல்லூர் ராஜு பேச்சால் கொந்தளித்த மாணிக்கம் தாகூர்!












Click it and Unblock the Notifications