Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்த தடவை நாங்களே பாத்துக்குறோம்..ஈரோடு கிழக்கில் உதிக்க உதயசூரியன் தயார் ! கம்பு சுத்தும் காங்கிரஸ்

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவை தொடர்ந்து
ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் அந்தத் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் நிர்வாகிகளும், திமுக நிர்வாகிகளும் போட்டி போட்டு வருகின்றனர். ஏற்கனவே இருமுறை காங்கிரஸுக்கு வாய்ப்பு அளித்த நிலையில் இந்த முறை திமுகவே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவெரா கடந்தாண்டு காலமானார். இதையடுத்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

chennai dmk erode east

இந்த நிலையில் திடீர் உடல்நல கோளாறு காரணமாக இளங்கோவன், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன்:

இருந்த போதும் நோயின் தீவிரம் மற்றும் வயது முதிர்வு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல்நிலை தொடர்ந்து மோசமான நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த 14ஆம் தேதி உயிரிழந்தார். அவரின் மறைவை தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த தகவல் தேர்தல் ஆணையத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சட்டப்பேரவை தொகுதி காலியாக அறிவிக்கப்பட்ட ஆறு மாதத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதி.

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்:

எனவே ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் டெல்லி சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்பிற்கும் நிலையில், அந்த தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடுத்து தேர்தலுக்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்ய தொடங்கவுள்ளது. மேலும் திமுக இந்த தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குமா? அல்லது அந்த கட்சியே போட்டியிடுமா என்பதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவே போட்டி:

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுகவே போட்டியிடும் என கூறுகின்றனர். ஏற்கனவே கூட்டணியில் காங்கிரசுக்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அங்கு போட்டியிட்ட திருமகன் ஈவேரா, இவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் உயிரிழந்த நிலையில் திமுகவே களம் இறங்கி வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் செலவும் அதிகமாக செய்ய நேரிட்டது. இந்த நிலையில் தற்போதைய ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவே போட்டியிட வேண்டும் என ஈரோடு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

வேட்பாளர் யார்?:

தற்போது அந்த கட்சியில் இடைத்தேர்தலில் போட்டியிட முன்னாள் எம்எல்ஏவான சந்திரகுமார், மாவட்ட துணை செயலாளரான செந்தில்குமார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். சமுதாய வாக்கு உள்ளிட்ட பல விவகாரங்கள் இந்த தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால் சந்திரகுமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அவரது மகனின் திருமணத்தில் கூட முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

களமிறங்கும் காங்கிரஸ்?:

இந்நிலையில் காங்கிரஸ் தரப்பில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் இரண்டாவது மகனான சஞ்சய் சம்பத், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி, மாஜி மாவட்ட தலைவர் ரவி ஆகியோர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+