ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: சீமான் மீது பாய்ந்தது மேலும் ஒரு வழக்கு! பறக்கும் படை புகாரில் ஆக்ஷன்!
ஈரோடு: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதி பெற்ற நேரத்தை விட கூடுதலாக பிரச்சார கூட்டம் நடத்தியதாக சீமான் மீது அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவால் கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திமுக சார்பில் வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ளன.
திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் உதயசூரியன் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி மைக் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் உட்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்கு இன்னும் 6 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், திமுக, நாதக வேட்பாளர்கள் மட்டுமல்லாது சுயேட்சை வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கி பல்வேறு பகுதிகளிலும் வாக்காளர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நெரிக்கல் மேடு பகுதியில் நடைபெற்ற பரப்புரை பொதுக்கூட்டத்தில் நேற்று (ஜன 28) சீமான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இந்த கூட்டம் முடிவடைய தாமதமாகியுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலையொட்டி அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நேரம் பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி நவீன் அளித்த புகாரில் கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கெனவே, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தேர்தல் விதிகளை மீறியதாக சீமான் மீது கடந்த 25 ஆம் தேதி 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாகவும் சீமான் மீது புகார் எழுந்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications