நீலகிரியை தொடர்ந்து.. ஈரோடு ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் பரபரப்பு.. பழுதான சிசிடிவி! ஆட்சியர் விளக்கம்
ஈரோடு: நீலகிரியை தொடர்ந்து ஈரோடு லோக்சபா தொகுதிக்கான வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறையில் உள்ள ஒரு சிசிடிவி கேமிரா நேற்று நள்ளிரவு செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஒருமணி நேரத்தில் வேறு கேமரா பொருத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளில் பத்திரமாக வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூம் எனப்படும் அறையில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

மூன்றடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேரமும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிசிடி கேமிரா மூலம் கண்காணிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் அருகே வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே சிசிடிவி மூலாமக ஸ்ட்ராங் ரூம் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். கட்சிகளின் முகவர்களும் இதை உறுதி செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. அங்குள்ள ஸ்ட்ராங் ரூமில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா நேற்று இரவு திடீரென பழுதானது. 220-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் உள்ள நிலையில், அவற்றில் ஒரு கேமரா பழுதானது.
நள்ளிரவு 12 மணியளவில் பழுதானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடனடியாக நள்ளிரவிலேயே சிசிடிவி கேமராவை சரி செய்யும் பணிகள் நடைபெற்றது. சுமார் 1 மணி நேரத்தில் இந்த பழுது சரி செய்யப்பட்டது. நள்ளிரவில் திடீரென கேமரா பழுதானது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் கன்கராம் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "ஒரு ஸ்ட்ராங் ரூமிற்கு 8 கேமராக்கள் என்ற வீதத்தில் 6 ஸ்ட்ராங் ரூமிற்கு 48 கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் மட்டுமின்றி வெளியே என அனைத்தையும் சேர்த்து 220 சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளது. ஒன்று பழுதானாலும் உடனடியாக மாற்றப்படும்.
நேற்று சுமார் இரவு 12 மணியளவில் ஸ்ட்ராங் ரூமிற்கு வெளியே இருந்த சிசிடிவி கேமிரா ஒன்று இயங்காமல் போனது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த சிசிடிவி கேமிரா வொர்க் ஆகாமல போனது. உடனடியாக சுமார் 1 மணி நேரத்தில் அதற்கு பதிலாக வேறு ஒரு சிசிடிவி கேமிரா பொருத்துப்பட்டுவிட்டது. வாக்குப்பதிவு எந்திரங்கள் முழு பாதுகாப்புடன் பத்திரமாக வைக்கப்படுள்ளது" என்று கூறினார்.
20 நிமிடங்கள் “கட்” ஆன நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி.. நடந்தது என்ன? ஆஹா.. அங்கேயே இப்படியா?
முன்னதாக நேற்று முன்தினம் நீலகிரியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்கள் திடீரென செயலிழந்தது. ஸ்ட்ராங் ரூமில் உள்ள கேமிராக்கள் சுமார் 20 நிமிடங்கள் அரசியல் கட்சிகளின் முகவர்கள் அமர்ந்து கண்காணிக்கும் அறையில், சிசிடிவி கேமிரா பதிவுகளை காணக்கூடிய திரையில் எந்தக் காட்சியும் ஒளிபரப்பாகாமல் இருந்ததால் அரசியல் கட்சி முகவர்களிடையே பெரும் பரபரப்பு உண்டானது.
20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் வழக்கம் போல் செயல்பட தொடங்கியது. இந்த நிலையில், அதீத வெப்பம் காரணமாகவே, சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவாகும் பெட்டி சூடாகி, செயலிழந்திருக்கக்கூடும் என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா கூறுகையில், "வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக தான் உள்ளது.
இதில் ஏதும் சந்தேகம் கொள்ள தேவையில்லை. அப்படி, சந்தேகம் இருந்தால் கட்சியினரை அழைத்து சென்று காட்ட தயாராக உள்ளோம். அதிக வெப்பத்தால் தான் ஷார்ட் சர்க்யூட் ஏற்பட்டு சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்துள்ளன. சிசிடிவி கேமிராக்கள் செயலிழந்ததில் எந்தவித முறைகேடும் நடக்க வாய்ப்பில்லை" என்று விளக்கம் அளித்து இருந்தார்.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications