"இவங்க" எல்லாம் சரியில்லை.. வேலையே பார்க்கலை.. அமைச்சர்கள் பற்றி ஸ்டாலினுக்கு போன ரிப்போர்ட்! ஆக்சன்
ஈரோடு கிழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கியது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் சரியாக வேலை பார்க்காத சில அமைச்சர்கள் பற்றிய ரிப்போர்ட் முதல்வர் ஸ்டாலினுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. நாளை இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன்தான் போட்டியிட்டு உள்ளார்.
அதிமுக கூட்டணி சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிட்டு உள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் மிகவும் ஆர்வமாக வாக்களித்தனர்.

தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் 75 சதவிகிதம் வாக்குகள் பதிவானது. இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் உச்சத்தை தொட்டு உள்ளன. ஈரோடு கிழக்கில் தேர்தலுக்காக திமுக தீவிரமாக களப்பணிகளை செய்தது. 60 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை எடுக்க வேண்டும் என்ற திட்டத்தோடு இந்த தேர்தலுக்காக திமுக பணிகளை செய்தது. முக்கியமாக கடைசி கட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் ஸ்டாலின் ஆகியோரும் களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்தனர். இதனால் நடுவில் கொஞ்சம் சுணங்கிய திமுக பிரச்சாரம் இறுதிக்கட்டத்தில் உச்சம் தொட்டது.

திமுக பிரச்சாரம்
ஈரோடு கிழக்கில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 11 அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகளை தேர்தல் பணிக்காக இங்கே திமுக களமிறக்கியது. இதில் ஒவ்வொருவருக்கும் 3-4 வார்டு ஒதுக்கப்பட்டு இருந்தது. இங்கே சுமார் 35 வார்டுகள் உள்ளன. இதில் செந்தில் பாலாஜிக்கு வெள்ளாள கவுண்டர்கள் இருக்கும் வார்டுகள் கொடுக்கப்பட்டு இருந்தன. தேர்தல் நேரத்தில் செய்யப்பட்ட பணிகள், ஆளும் கட்சி இறக்கும் பவர், செந்தில் பாலாஜி, முத்துச்சாமி போன்றவர்கள் இறங்கி வேலை செய்யும் போது வாக்கு 60 சதவிகிதம் வரை எடுக்க வாய்ப்பு உள்ளது என்று திமுக திட்டமிட்டுள்ளது. இதில் எங்கேயும் சறுக்கிவிட கூடாது என்று தலைமை உத்தரவிட்டு இருந்தது. ஆளுக்கு 4 வார்டுகளில் வேலை செய்யுங்கள், வாக்கு சதவிகிதம் 60க்கும் மேல் வர வேண்டும் என்று திமுக மேலிடம் தேர்தல் பணியாளர்களுக்கு டார்கெட் விதித்து இருந்தது.

ரிப்போர்ட்
இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ், உள்ளிட்ட 7-8 அமைச்சர்களை தவிர மற்ற சிலர் சரியாக பணிகளை செய்யவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக 3 அமைச்சர்கள் தேர்தல் பணிகளை சரியாக கவனிக்காமல் இருந்துள்ளனர். இவர்கள் அடிக்கடி தொகுதியை விட்டு வெளியேறி உள்ளனர். மற்ற அமைச்சர்கள் பெரும்பாலும் தொகுதியில் இருந்து வார்டு பணிகளை கவனித்த போது இந்த அமைச்சர்கள் மட்டும் அடிக்கடி வார்டுக்கு போகாமல் டிமிக்கி கொடுத்ததாக கூறப்படுகிறது. இவர்களை பற்றித்தான் ரிப்போர்ட் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

வேலை
அதாவது சரியாக பணிகளை செய்யாத அமைச்சர்களை பற்றிய ரிப்போர்ட் முதல்வருக்கு சென்று இருக்கிறதாம். ஆனால் இதில் இப்போதைக்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்று கூறப்படுகிறது. ஈரோடு கிழக்கில் தீர்ப்பு வந்த பின் வார்டு வாரியாக எடுக்கப்பட்ட வாக்குகளை திமுக கணக்கிடும். இந்த வார்டு ரீதியான வாக்குகளை வைத்து எந்த அமைச்சருக்கு கீழ் இருக்கும் வார்டுகளில் வாக்குகள் குறைவாக பதிவாகி உள்ளது என்று கண்டுபிடிக்கப்படும். அதை வைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளுக்கு ரேங்க் கொடுத்து சரியாக செயல்படாத அமைச்சர்கள் மீது சிறிய அளவிலான ஆக்சன் எடுக்கப்படலாம் என்கிறார்கள். 2024 லோக்சபா தேர்தலின் போது அமைச்சர்கள் சொதப்ப கூடாது என்பதற்காக இப்போதே இவர்கள் மீது ஆக்சன் எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications