Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈரோடு கிழக்கில் ஈவிகேஸ் இளங்கோவன் அபார வெற்றி.. 34 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பேரவை செல்கிறார்!

முதல் சுற்றில் இருந்தே தொடர்ந்து முன்னிலை வகித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகளும் வெற்றி பெற்றுள்ளனர். 66,575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காங்கிர்ஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் வழங்கினார் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார்.

அபார வெற்றி

அபார வெற்றி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் மட்டுமே பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10,827 வாக்குகளும், தேமுதிகவின் ஆனந்த் 1,432 வாக்குகளும் பெற்றனர்.

தேமுதிக, நாம் தமிழர் உள்ளிட்ட 75 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவையடுத்து, அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கடந்த 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், 1 லட்சத்து 70 ஆயிரத்து 192 வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு 74.79 சதவீதம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை

ஆரம்பத்தில் இருந்தே முன்னிலை

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 398 தபால் வாக்குகளில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 250 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 104 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் ஒரு வாக்கும் பெற்றனர். அதேபோல, சமாஜ்வாதி வேட்பாளர் மற்றும் சுயேச்சைகள் 7 வாக்குகளைப் பெற்றனர். நோட்டாவுக்கு ஒரு வாக்கு கிடைத்தது. 25 வாக்குகள் செல்லாத வாக்குகளாக அறிவிக்கப்பட்டன.

வாக்குகள் - முழு விவரம்

வாக்குகள் - முழு விவரம்

அதைத்தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை தொடங்கியது. 16 மேஜைகள் அமைக்கப்பட்டு 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முதல் சுற்றில் தொடங்கி, இறுதிச் சுற்றான 15வது சுற்று வரை ஈவிகேஎஸ் இளங்கோவன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார். 15-வது சுற்றின் நிறைவில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 43,923 வாக்குகள் பெற்றார். 66,575 வாக்குகள் வித்தியாத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

சான்றிதழ் பெற்ற இளங்கோவன்

சான்றிதழ் பெற்ற இளங்கோவன்

இதையடுத்து, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார், இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் வழங்கினார். கடந்த 2021 பொதுத் தேர்தலில் இந்த தொகுதியில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்ற நிலையில், தற்போது 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று, 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

மீண்டும் சட்டப்பேரவைக்கு

மீண்டும் சட்டப்பேரவைக்கு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தொகுதியில், 1984-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற ஈவிகேஎஸ்இளங்கோவன், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்முறையாக நுழைந்தார். பின்னர், 2004ல் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் எம்.பியாக வென்றார். மத்திய அமைச்சர், காங்கிரஸ் மாநிலத் தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்த ஈவிகேஎஸ்.இளங்கோவன், 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்குச் செல்கிறார்.

கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து

கூட்டணி கட்சி தலைவர்கள் வாழ்த்து

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். அதேபோல, கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+