10,000 ஓட்டா? இந்த தேர்தலிலா? இப்ப.. இப்பவா?சீமான் கட்சி வாக்கு குறித்து ஷாக் ஆன ஈவிகேஎஸ் இளங்கோவன்!

ஈரோடு கிழக்கு தொகுதியில் நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்குகள் குறித்து அதிர்ச்சியை வெளியிட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி 10,000 ஓட்டுகள் வாங்கியது குறித்து தமது அதிர்ச்சியை வெளிப்படுத்தினார் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீரென காலமானார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

Congress EVKS Elangovan shock over Naam Tamilars Vote

ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,156 வாக்குகளுடன் அபார வெற்றியைப் பெற்றார். அதிமுகவின் தென்னரசு
43,923 வாக்குகளைப் பெற்றார். 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றியை அறுவடை செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஆவேசமான பேச்சுகள், அடிதடி, மண்டை உடைப்பு உள்ளிட்டவைகளால் கவனம் பெற்றது சீமானின் நாம் தமிழர் கட்சி. அதுவும் அருந்ததியர் வந்தேறி தெலுங்கர் என சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகிப் போனது. ஈரோடு கிழக்கு தொகுதியில் பல பகுதிகளில் சீமான் கட்சியினர் வாக்கு சேகரிக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். சீமான் கட்சியினர் மண்டைகள் உடைக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் இளைஞர்களிடையே சீமானின் நாம் தமிழர் கட்சி கணிசமான செல்வாக்கு பெற்றிருப்பதாகவும் சில கருத்து கணிப்புகள் கூறியிருந்தன. இதனால் சீமான் கட்சி பெறும் வாக்குகள் பேசுபொருளானது. இதே ஈரோடு தொகுதியில் கடந்த தேர்தலில் சுமார் 11,000 வாக்குகளை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி பெற்றிருந்தார்.

இதனால் நேற்று காலை வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது முதலே சீமான் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதனின் வாக்குகள் கவனிக்கப்பட்டன. ஆனால் அத்தகைய எதிர்பார்ப்புகள் அனைத்தும் தவிடுபொடியானது. கடுமையான போராட்டங்களின் முடிவில் 10,827 வாக்குகளைப் பெற்றார் சீமான் கட்சி வேட்பாளர் மேனகா. மேலும் டெபாசிட்டையும் மேனகா பறிகொடுத்தார். இந்த வாக்கு எண்ணிக்கை, டெபாசிட் இழப்பு சமூக வலைதளங்களில் மிக மிக கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது.

15 சுற்றுகள் வாக்குகள் எண்ணப்பட்டு நேற்று இரவு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அப்போது செய்தியாளர்களை சந்தித்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். இச்சந்திப்பின் போது நாம் தமிழர் கட்சி குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது அதற்கு, நாம் தமிழரே இல்லீங்க.. ஆதித்தனார் அந்த காலத்துல ஆரம்பிச்ச கட்சி நாம் தமிழர். இப்ப அந்த கட்சி இருக்கா? இல்லையான்னு எனக்கு தெரியலை. இல்லாத கட்சியை சொல்லி.. என கூறிக் கொண்டிருந்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அப்போது செய்தியாளர் ஒருவர் குறுக்கிட்டு 10,000 ஓட்டு வாங்கியிருக்காங்களே என்றார். உடனே, அது போன தேர்தல்.. இப்ப 6,000 தானே வாங்கி இருக்காங்க என்றார் ஈவிகேஎஸ். மீண்டும் இந்த தேர்தலில் 10,800 வாக்குகள் வாங்கியிருக்கிறது நாம் தமிழர் என இன்னொரு செய்தியாளர் சுட்டிக்காட்டினார். உடனே, 10,800 ஓட்டா இந்த தேர்தலில் வாங்கி இருக்காங்க? இந்த தேர்தலில்? இப்ப? இப்பவா இப்பவா? என அதிர்ச்சியுடன் கேள்வி எழுப்பினார். அவரது ஆதரவாளர்களும் ஆம் என பதிலளித்தனர்.

இதன் பின்னர், சரி எதாக இருந்தாலும் எனக்கு தெரிஞ்ச நாம் தமிழர் எல்லாம் தினத்தந்தி அதிபராக இருந்த சிபா ஆதித்தனார் கட்சிதான் நாம் தமிழர் கட்சி. இப்பதான் அப்படி ஒரு கட்சி இருக்குதுன்னு எல்லோரும் சொல்றீங்க என பேட்டியை நிறைவு செய்தார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+