அபிராமி.. அபிராமி.. கடைசியில் தெரிந்த உண்மை.. காட்டிக்கொடுத்த வீடியோ.. இப்ப அந்த நாத்தனாரை காணோமாமே
வரதட்சணை கொடுமையால் இளம்பெண் வீடியோ வெளியிட்டு தற்கொலையும் செய்து கொண்டார்
ஈரோடு: திருமணமானது முதலே பல்வேறு சித்ரவதைகளை மாமியார் வீட்டில் அனுபவித்து வந்துள்ளார் இளம்பெண் அபிராமி.. இறுதியில அவர் எடுத்த முடிவினால், 2 பேர் தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் நாகம்மாள்.. 62 வயதாகிறது.. இவருடைய மகன் ராகவேந்திரன்சாமி..
திருப்பூரில் உள்ள ஒரு கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்... இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த அபிராமிக்கும் கடந்த வருடம் திருமணம் நடந்தது.

அபிராமி அபிராமி
அபிராமிக்கு 31 வயதாகிறது.. ஈரோட்டில் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் அபிராமி வேலை பார்த்து வந்தார்... இதனிடையே, அபிராமிக்கும் அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறுகள் வெடிக்க துவங்கின.. இதனால், கோபித்துக் கொண்ட அபிரோ, ஈரோட்டில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டுக்கே சென்று விட்டார்... இந்நிலையில், சம்பவத்தன்று, ராகவேந்திரன்சாமி வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.. அபிராமியும், தன்னுடைய அம்மாவிடம் வேலைக்கு போவதாக சொல்லிவிட்டு, வீட்டை விட்டு வெளியே வந்தார்... ஆனால், வேலைக்கு போகாமல், பள்ளிபாளையத்தில் உள்ள கணவர் வீட்டுக்கு வந்தார்..

மாமியார்
வீட்டில், மாமியார் நாகம்மாள் மட்டும் இருந்தார்., அபிராமி நேராக தன்னுடைய ரூமுக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்டதாக தெரிகிறது... நீண்டநேரம் ஆகியும் அபிராமி ரூமில் இருந்து வெளியே வரவில்லை.. இதனால் சந்தேகம் அடைந்த நாகம்மாள், தன்னுடைய கணவர் சுந்தருக்கு போனை போட்டு வரவழைத்தார்.. அந்த அறைக்கதவை உடைத்து கொண்டு போனால், அபிராமி சேலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.. உடனடியாக பள்ளிபாளையம் போலீசார் விரைந்து வந்து, அபிராமி உடலை மீட்டு போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேத ரூம்
அவரது சடலத்தை போஸ்ட்மார்ட்டம் செய்யக்கூடாது என்று பிரேத அறையில் புகுந்து அபிராமி குடும்பத்தினர் ரகளையில் ஈடுபட்டனர். ராகவேந்தர் குடும்பத்தினர் கொடுத்த மன உளைச்சலின் காரணமாகவே அபிராமி தற்கொலை செய்து கொண்டதாகவும், அவரது உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாகவும் அபிராமியின் குடும்பத்தினர் உட்பட உறவினர்கள் மொத்த பேரும் திரண்டு, ஈரோடு செல்லும் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.. இதையடுத்து அதிகாரிகள் விரைந்து வந்து, நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு நம்பிக்கை தந்தனர்..

வீடியோ
மேலும், அபிராமி தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர். திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி சம்பவ இடம் வந்து பார்வையிட்டார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் மட்டுமே ஆவதால் உதவி கலெக்டர் விசாரணையும் ஆரம்பமானது. அனைத்து தரப்பிலும் விசாரணைகள் துவங்கிய நிலையில், அபிராமியின் ஒரு வீடியோ போலீசாருக்கு சிக்கியது.. தற்கொலை செய்து கொள்வதற்கு, அந்த வீடியோவை அவர் பதிவு செய்துள்ளார்..

நாத்தனார் தீபா
அதில், தன்னுடைய இறப்பிற்கு மாமியார், கணவரின் சகோதரி தான் காரணம் என்று தெள்ளத்தெளிவாக சொல்லி அந்த வீடியோவை பதிவு செய்துவிட்டு, தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.. மேலும், திருமணமான சில தினங்கள் முதலே, மாமியாரும், தீபாவும் அபிராமிக்கு மன உளைச்சல் ஏற்படுத்தி வந்த நிலையில், கூடுதல் வரதட்சணையும் கேட்டு வந்ததும் உறுதியானது. இறுதியில், அபிராமியின் செல்போனில் இருந்த தகவல்களை வைத்து, அவருடைய மாமனார் சுந்தர் மற்றும் மாமியார் நாகம்மாள் ஆகிய 2 பேர் மீதும் போலீசாா் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.. மேலும் போலீசார் விசாரணை செய்து தலைமறைவான நாத்தனார் தீபாவை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications