சிக்கலில் சீமான்.. அருந்ததியர்கள் பற்றிய பேச்சால் வெடித்த சர்ச்சை.. ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியல்

அருந்ததியர்கள் குறித்து அவதூறாக சீமான் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சீமானை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: அருந்ததியர்கள் குறித்து அவதூறாக சீமான் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சீமானை கைது செய்ய வேண்டும் என்று தலித் அமைப்பினர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். இதற்காக ஈரோட்டில் பொதுமக்கள் சிலர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்கள் மறியலால் ஈரோட்டில் பரபரப்பு ஏற்பட்டது.

அருந்ததியர்கள் ஆந்திராவில் இருந்து தூய்மைப்பணிக்காக அழைத்து வரப்பட்டவர்கள் என சீமான் பேசியதாக வீடியோ வெளியானது. அருந்ததியர்கள் தெலுங்கு வந்தேறிகள் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாகவும் வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சீமானுக்கு எதிராக தலித் கூட்டமைப்பினர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். நேற்று சீமான் மீது ஈரோடு மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தனர். அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று புகாரில் தலித் அமைப்பினர் வலியுறுத்தினர். இந்நிலையில் இன்று சீமானை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்ச்சை பேச்சு

சர்ச்சை பேச்சு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா என்பவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இவருக்கு வாக்கு சேகரிக்க நாம் தமிழர் கட்சியினர் ஈரோட்டில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். வியாழக்கிழமை சீமான் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "விஜயநகர பேரரசு நிறுவிய பிறகு உங்கள் மன்னர்களுக்கு செய்ததை போல் எங்களுக்கு பட்டாடை செய்து கொடுங்கள் என்று கேட்டார்கள். வேறு ஆளை பாருங்கள் என்று அவர்கள் தெரிவித்துவிட்டார்கள். வேறு வழியில்லாமல் குஜராத்தில் இருந்து சவுராஷ்டிராக்களை இந்த விஜயநகர மன்னர்கள் இறக்கினார்கள்.

ஆந்திராவில்

ஆந்திராவில்

கடைசியாக இந்த நிலத்தில் என் ஆதி தமிழ் குடிகள் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தார்கள். அதைப்போல எங்கள் ஆட்சியிலும் நீங்கள் தூய்மைப் பணி செய்ய வேண்டும் என்று சொன்னபோது, போடா வேற ஆளை பாரு! என்றார்கள். வேறு வழியில்லாமல் ஆதிக்குடிகளை கொண்டு வந்து இறக்கினார்கள். அவர்கள்தான் இங்கு இருக்கும் அருந்ததியர்கள். தன் மானம் மிக்கவர்கள் தமிழர்கள். ஜாதியை சொல்லி வாக்கை குறைத்துவிட முடியாது. இந்த தமிழ்நாடு நூலிழையில் தவறு பண்ணிருச்சு. அண்ணாவிற்கு பிறகு நெடுஞ்செழியனிடம் போயிருந்தால் தமிழ்நாடு உருப்பட்டிருக்கும். நாமும் உருப்பட்டிருப்போம். நாங்கெல்லாம் கட்சி ஆரம்பிச்சிருக்க மாட்டோம். கடைசி வரை ஒரே மனைவியுடன் வாழ்ந்த தலைவன் நெடுஞ்செழியன் தான்" இவ்வாறு சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

எஸ்பியிடம் புகார்

எஸ்பியிடம் புகார்

இதனிடையே சர்ச்சைக்குரிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசியதாகவும், பூர்வகுடி தமிழர்களாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களை அவரது பேச்சு இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும் குற்றம்சாட்டி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், அருந்ததியினர் கூட்டமைப்பு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தலித் அமைப்பினர் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து புகார் மனு அளித்திருக்கிறார்கள்

வன்கொடுமை சட்டம்

வன்கொடுமை சட்டம்

அவர்கள் தங்கள் மனுவில், தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அவருக்கு தடை விதிப்பதுடன் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யவும் வலியுறுத்தினர். இதே போல் சீமான் மீது எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர், இதனிடையே சீமான் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்து பிரச்சாரத்திற்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாகவும் தலித் அமைப்பினர் எச்சரித்தார்கள். இந்நிலையில் அருந்ததியர்கள் பகுதியில் நேற்று பிரச்சாரத்திற்கு போன நாம் தமிழர் கட்சியினரை சிலர் விரட்டி அடித்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

சீமானுக்கு சிக்கல்

சீமானுக்கு சிக்கல்

இந்நிலையில் அருந்ததியர்கள் குறித்து அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை கைது செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சீமானின் பேச்சை கண்டித்து கோஷம் எழுப்பிய அவர்கள், போலீசார் சீமானை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்துள்ளனர். முன்னதாக நேற்று நாம் தமிழர் கட்சியினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதலும் ஏற்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவருக்கு மண்டை உடைந்தது. சீமான் பேச்சும் அதற்கான எதிர்வினைகளும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+