நிர்மலா சீதாராமனுக்கு அடக்கம் வேணும்.. கல் மாதிரி உட்கார்ந்திருக்காரே? வாய்விட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன்
ஈரோடு : பெண் அமைச்சராக உள்ள நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்து தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய சர்ச்சையாக உருவெடுக்க துவங்கியிருக்கிறது.
ஈரோட்டில் இன்று பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது சிலைக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்...

ஈவிகேஎஸ் : பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.. முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டு பயணத்துக்கு மகிழ்ச்சியும், பாராட்டும் தெரிவித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், பாஜக குறித்த கேள்விகளுக்கு கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
இளங்கோவன் பேசும்போது, "டாஸ்மாக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். கள்ளுக்கடைகளை திறப்பதால் உடல்நிலையை பாதிக்காது. இது பனை விவசாயிகளுக்கும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். மதுவிலக்கில் பூர்ண நம்பிக்கை எனக்க உள்ளது. கள்ளுக்கடையை திறந்தால் மக்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள்... ஆனால், இதெல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்துக்கள்தான்.
கட்சி கொள்கை: கட்சியின் கொள்கையை தெரிவிக்காதவர்கள் எல்லாம், ஆட்சியை பிடிப்போம் என்று சொல்பவர்கள் மத்தியில், பல வருடங்களாக அரசியல் செய்து தமிழகம் முழுவதும் மக்களிடையே வாக்கு வைத்துள்ள திருமாவளவன் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று பேசியது தவறில்லை. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் அனைத்து கட்சிக்கும் இருப்பது நியாயமான விஷயமே.
ஆட்சியில் பங்கு என்பது கையில் பவர் வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சியும் உள்ளன. அதனால், திருமாவளவன் தெரிவித்தது தவறில்லை. ஆனால் 2026-ல் ஆட்சியில் அதிகாரத்தில் பங்கு சாத்தியமாகாது. வரும் தேர்தலில் மத வெறியர்களுக்கு மிகப்பெரிய தோல்வியை தரவேண்டும் என திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் முதல் கடமையயாக உள்ளது" என்றார் இளங்கோவன்.
எச்.ராஜா: தொடர்ந்து அவர் பேசும்போது, "ராகுல்காந்தி குறித்து எச். ராஜா விமர்சனம் செய்துள்ளர்.. எச்.ராஜா ஓய்வு பெற வேண்டிய ஆளு. அண்ணாமலை வெளிநாடு போனதால் அவருக்கு இப்போது சான்ஸ் கிடைத்திருக்கிறது.. அவர் கவுன்சிலர் தேர்தலில்கூட வெற்றி பெற முடியாதவர்... காலாவதியான ராஜா... காலாவதியான ராணியுடன் இருக்க வேண்டியவர்... அவர் பொது இடத்தில ராகுல் பற்றி சொல்வது தேவையற்ற விஷயம்.
பெண் அமைச்சராக இருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு அடக்கமும் பணிவும் வேண்டும்... ஆனால் இது எதுவுமே அவரிடம் இல்லை. அன்னப்பூர்ணா உரிமையாளர் ஜிஎஸ்டி யை முறைப்படுத்துங்கள் என சொன்னதற்கு, ஆளை வைத்து மிரட்டியும், போன் மூலம் மிரட்டியும், மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்.
மன்னிப்பு: மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.. அப்படியே கல் போல உட்கார்ந்துள்ளார்.. மனிதனை மதிக்கும் மனித தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை... இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களும், வியாபாரிகளும் பாஜகவிற்கு எதிர்ப்பாக செல்கிறார்கள். வரும் காலங்களில் இது பெரிதாக வெடிக்கும்" என்று கடுமையாக சாடியிருக்கிறார் இளங்கோவன்.
ஈவிகேஎஸ்ஸின் இந்த பேச்சுக்குதான் சலசலப்பு இப்போது கிளம்பி உள்ளது.. "மூத்த தலைவராக இருந்து கொண்டு, ஒரு நிதியமைச்சரை இப்படித்தான் பேசுவதா? சர்ச்சைக்கு பெயர் போன இளங்கோவன், இதுவரை யாருக்குமே மரியாதை தந்து பேசியதில்லை..
பெண்ணுரிமை: பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் வழியில் வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், மத்திய அமைச்சரான நிர்மலா சீத்தாராமனை, பெண் அமைச்சர் என்ற தொனியில் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.. அதுவும் பெரியார் பிறந்த நாளிலேயே, பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது ஏற்க முடியாதது" என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ எடுத்து வெளியே காட்டியது கேவலமான விஷயம்.
மன்னிப்பு கேட்கும்போது நிர்மலா சீதாராமன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.. அப்படியே கல் போல உட்கார்ந்துள்ளார்.. மனிதனை மதிக்கும் மனித தன்மை நிர்மலா சீதாராமனிடம் இல்லை... இந்தியா முழுவதும் அரசியல் தலைவர்களும், வியாபாரிகளும் பாஜகவிற்கு எதிர்ப்பாக செல்கிறார்கள். வரும் காலங்களில் இது பெரிதாக வெடிக்கும்" என்று கடுமையாக சாடியிருக்கிறார் இளங்கோவன்.
சர்ச்சைகள்: ஈவிகேஎஸ்ஸின் இந்த பேச்சுக்குதான் சலசலப்பு இப்போது கிளம்பி உள்ளது.. "மூத்த தலைவராக இருந்து கொண்டு, ஒரு நிதியமைச்சரை இப்படித்தான் பேசுவதா? சர்ச்சைக்கு பெயர் போன இளங்கோவன், இதுவரை யாருக்குமே மரியாதை தந்து பேசியதில்லை..
பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் வழியில் வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், மத்திய அமைச்சரான நிர்மலா சீத்தாராமனை, பெண் அமைச்சர் என்ற தொனியில் இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.. அதுவும் பெரியார் பிறந்த நாளிலேயே, பெண்களை அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது ஏற்க முடியாதது" என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications