நீ சரியான ஆம்பளையா இருந்தா.. வார்த்தையை விட்ட எடப்பாடி.. இப்படிலாம் பேசலாமா? இயக்குனர் நவீன் விளாசல்!
நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. என்று எடப்பாடி பேசியது சர்ச்சையாகி உள்ளது.
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்து வரும் எடப்பாடி பழனிசாமி தனது டோனை அப்படியே மாற்றி இருக்கிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. வரும் 27ம் தேதி இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இவருக்காக எடப்பாடி பழனிசாமி தற்போது தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். நேற்று இங்கே பிரச்சாரம் செய்த இவர் இன்று இரண்டாவது நாளாக மீண்டும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

பிரச்சாரம்
நேற்று பிரச்சாரத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, 21 மாதமாக மக்களை அமைச்சர்கள் சந்திக்கவே இல்லை. ஆனால் இப்போது தேர்தல் என்றதும் மக்களை சந்திக்கிறார்கள். நான் இப்போது மக்களை சந்திப்பது போல முதல்வருக்கு மக்களை சந்திக்க நேரம் இருக்கிறதா? அவர் ஏன் வெளியே வருவதே இல்லை. தேர்தலுக்கு முன் வந்தாரே? வெற்றிபெற்ற பின் ஏன் அவர் மக்களை சந்திப்பதே இல்லை. 21 மாதமாக வெளியே வராத அமைச்சர்கள் இப்போது டீ போடுவது, வடை சுடுவது என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.

ஆம்பளையா இருந்தா
நீ சரியான ஆம்பளையா இருந்தா.. மீசை வச்ச ஆம்பளையா இருந்தா.. வேட்டி கட்டின ஆம்பளையா இருந்தா.. நேரா வெளியே வந்து மக்களை சந்தி. உங்களுக்கு திராணி இல்லை. தெம்பு இல்லை. அதிமுகவை சந்திக்கும் திறமை இல்லை. சூடு, சொரணை, வெட்கம், மானம் இருந்தால் வெளியே வந்து வாக்காளரை சந்தி. அதிமுகவை எதிர்க்கும் சக்தி உனக்கு கிடையாது.

கூட்டணி
உங்கள் கூட்டணி கட்சி வேட்பாளருக்காக நீ அமைச்சர்களை எல்லாம் களமிறக்கி இருக்கிறீர்கள். அமைச்சர்களை எல்லாம் சாலைக்கு கொண்டு வந்துள்ளீர்கள். ஏழைக்கு நீ காசு கொடுத்து கூட்டி வந்து ஈரோட்டில் தங்க வைத்து இருக்கிறாய். அவர்களை வைத்து வாக்கு போட சொல்கிறாய். அதிமுகவை எதிர்க்கும் திறன் உங்களுக்கு இல்லை.

ஈரோடு கிழக்கு தொகுதி
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு திமுக செய்தது என்ன? அவர்கள் செய்த நலத்திட்டங்கள் என்ன ? சொல்லுங்கள் பார்க்கலாம்? ஒரு அமைச்சராவது இங்கே அவர்கள் கொண்டு வந்த திட்டத்தை சொல்ல முடியுமா? மக்கள் அதிமுக பக்கம் இருக்கிறார்கள். மக்களுக்கு கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை சொல்லிவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்த திமுக என்ன செய்தது வீட்டு வரியை, கடை வரியை உயர்த்தியது. மின்சார கட்டணத்தை உயர்த்தியது. தாங்கள் தேர்தலில் பெற்ற வெற்றிக்கு திமுக கொடுத்த பரிசு இதுதான் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இயக்குனர் நவீன்
அவரின் இந்த பேச்சு விமர்சனங்களை சந்தித்துள்ள நிலையில் இது தொடர்பாக இயக்குனர் நவீன் போஸ்ட் செய்துள்ளார். அவர் தனது போஸ்டில் ஆம்பளயா இருக்கறதுக்கும் வீரத்துக்கும் என்ன தொடர்பு. உங்கள் தலைவர் இரும்புப்பெண் ஜெயலலிதா அம்மையார் ஆம்பளயா? நீங்கள் தவழ்ந்து சென்று கால்பிடித்த சசிகலா ஆம்பளயா? இன்னும் எத்தனை காலம் இந்த stereotype வசனம் பேசுவீங்க? இது பெண்களை இழிவு படுத்தும் செயல், என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications