நிறுத்திக்கொள்ளுங்கள்.. அல்லது முழு விவரங்களை வெளியே சொல்வோம்.. பிரேமலதாவை எச்சரிக்கும் சந்திரகுமார்
Recommended Video

ஈரோடு: பிரேமலதா பொய் சொல்வதை நிறுத்தாவிட்டால் உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தமிழக மக்களிடம் எடுத்துச் சொல்வோம் என்று தேமுதிகவை சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சந்திரகுமார் கூறியுள்ளார்.
தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது, திமுக பொருளாளர் துரைமுருகன் விழா மேடைகளிலேயே தூங்குபவர் என்ற கேள்விப்பட்டுள்ளேன். வயதாகிவிட்டதால் நிதானம் தவறி பேசி வருகிறார் என்றெல்லாம் மிக மோசமாக விமர்சனம் செய்தார்.
இந்த நிலையில், திமுக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளரும், தேமுதிகவின் முன்னாள் எம்எல்ஏவுமான, சந்திரகுமார், பிரேமலதாவை சாடியுள்ளார்.

அரசியல் மறுவாழ்வு
இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது: பிரேமலதா பேச்சு மோசமானதாக உள்ளது. தேமுதிக தற்போது அரசியல் மறுவாழ்விற்காக மாறிமாறி அலைந்து கொண்டு இருக்கிறது. பிரேமலதா கட்சி விஷயங்களில் எப்போது தலையிட ஆரம்பித்தாரோ அப்போது இருந்தே தேமுதிகவை பணம் கொழிக்கும் கட்சியாக மாற்றி வருகிறார்.

அவதூறுகள்
ஒரே நேரத்தில் அதிமுக மற்றும் திமுக கட்சிகளிடமும் கூட்டணி பேரம் பேசிய செயலை இதுவரை தமிழகத்தில் யாரும் செய்யவில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பற்றி, பிரேமலதா தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்.

பொய்யை நிறுத்துங்கள்
மருத்துவமனையில், கருணாநிதி உடல் நலம் சரியில்லாமல் இருந்த போது அவரை விஜயகாந்த் சந்திக்க அனுமதி கேட்டதாகவும், மு.க.ஸ்டாலின் மறுத்துவிட்டதாகவும், பிரேமலதா கூறி வருகிறார். இது சுத்த பொய்யாகும். பொய் சொல்வதை அவர் உடனே, நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் உங்களைப் பற்றிய முழு விவரங்களையும் தமிழக மக்களிடம் எடுத்துக்கூற வேண்டி இருக்கும்.

மக்கள் விரும்பும் தலைவர்
வரும் லோக்சபா தேர்தலில், அதிமுக கூட்டணி, மிக பெரிய தோல்வியை சந்திக்கும். இது மக்களால் ஏற்றுக் கொள்ள முடியாத கூட்டணியாக உள்ளது. மு.க.ஸ்டாலின்தான், மக்கள் விரும்பும் தலைவராக உள்ளார். இவ்வாறு சந்திரகுமார் தெரிவித்தார்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications