சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: நாளை கடைசி நாள்.. மனு தாக்கலுக்கு ரெடியாகும் திமுக, நாதக!
ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக, நாதக வேட்பாளர்கள் நாளை (வெள்ளிக்கிழமை) வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாள் என்பதால், இரு கட்சியினரும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
காங்கிரஸ் கட்சியைத் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். திமுக சார்பில் வேட்பாளராக வி.சி.சந்திரகுமாரும், நாதக சார்பில் மா.கி.சீதாலட்சுமியும் களம் காண்கின்றனர்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக என முக்கிய எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருசேர புறக்கணித்துவிட்ட நிலையில், திமுகவை எதிர்த்து நேருக்கு நேர் களமிறங்குகிறது நாம் தமிழர் கட்சி. இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் திமுக நிர்வாகிகள், நாதக நிர்வாகிகள் தொண்டர்களுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி தொடங்கிய நிலையில் இடையே பொங்கல் விடுமுறை காரணமாக வேட்பு மனு தாக்கல் செய்ய முடியவில்லை. இதுவரை 9 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவடைய உள்ளது.
நாளை பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான நாளை திமுக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யவுள்ளனர். நாளை மறுநாள் (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற வருகிற 20 ஆம்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் மற்றும் பரிசு பொருட்கள் எடுத்து செல்வதை தடுக்க 3 பறக்கும் படை குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications