தேர்தல் வந்தால் மக்கள் நியாபகம் வரும்.. 22 மாதத்தில் திமுக என்ன செய்தது? எடப்பாடி பழனிசாமி கேள்வி!

22 மாதங்களாக திமுக எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: தமிழ்நாட்டில் ஆட்சியமைத்து 22 மாதங்களாகியும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். தேர்தல் வந்தால் தான் திமுகவுக்கு மக்கள் நியாபகம் வரும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து வாக்குறுதி என்னவானது என்று கேள்வி எழுப்பினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடைசி நாள் பிரச்சாரத்தில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதேபோல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவை ஆதரித்து சீமான் பேரணியாக சென்றும், பொதுக் கூட்டம் நடத்தியும் வாக்கு சேகரித்தார். அதேபோல் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதிமுக ஆட்சி

அதிமுக ஆட்சி

இந்த பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், அதிமுக ஆட்சியில் ஈரோடு மாவட்டத்திற்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. குடிநீர், சாலை வசதிகள், மருத்துவம் என பல்வேறு திட்டங்கள் ஈரோடு மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவமனைகளுக்கு புதிய கருவிகள், வணிக வளாகம், தடையில்லா மின்சாரம், பேருந்து நிலைய விரிவாக்கம், மார்க்கெட் என 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் பல் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக ஆட்சி

திமுக ஆட்சி

ஆனால் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியமைத்து 22 மாதங்கள் கடந்துவிட்டது. இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ஒரு திட்டம் கூட செய்யவில்லை. அதுதான் திராவிட மாடல் ஆட்சி. நாங்கள் 10 ஆண்டுகளில் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியதால், நெஞ்சை நிமிர்த்தி வாக்கு கேட்கிறோம். ஈரோடு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டுமனை பட்டா கொடுத்துள்ளோம் என்கிறார். அதிமுக ஆட்சியில் 24 லட்சம் பட்டா கொடுத்துள்ளோம். முதியோர் உதவித் தொகையும் கொடுத்திருக்கிறோம். அதனை திமுக ஆட்சியில் பலருக்கும் நிறுத்தி இருக்கிறார்கள்.

நீட் தேர்வு ரத்து எங்கே?

நீட் தேர்வு ரத்து எங்கே?

முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. அதனை தடுத்து நிறுத்தியது அதிமுக. உதயநிதி ஸ்டாலின் வாக்குறுதியை நம்பி மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராமல் இருந்தார்கள். இதனால் 12 மாணவர்களின் உயிர் போய்விட்டது. அனிதா உயிரிழந்த போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எவ்வளவு விமர்சித்தார்கள். இப்போது அனைவரும் அமைதி காக்கிறார்கள். வீதியாக வீதியாக பிரச்சாரம் செய்யும் மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு ரத்து எப்போது என்று சொல்லவே இல்லை.

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் எங்கே?

குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் எங்கே?

மக்களை ஏமாற்றி பொய் பேசியவர்களுக்கு இந்த இடைத்தேர்தலில் மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும். தோல்வி என்ற தண்டனையை மக்கள் அளிக்க வேண்டும். அதேபோல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று வாக்குறுதி அளித்தார்கள். மார்ச் மாதம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் இன்று அறிவிக்கிறார். கணக்கெடுப்பு நடப்பதாக உதயநிதி ஸ்டாலின் சொல்லுகிறார். அத்தனை பொய். ஆட்சிக்கு வந்து 22 மாதங்களாகிவிட்டது. இருப்பினும் எந்த திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை. தேர்தல் வந்தால் தான் திமுகவுக்கு மக்கள் நியாபகம் வரும் என்று தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+