தேர்தல் பணியை திமுக சிறப்பாக பண்ணிருக்கு.. ஆனால்!.. செல்லூர் ராஜூ என்ன சொல்லியிருக்காருன்னு பாருங்க

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் பரிசு மழை கொட்டுது... கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது என்று விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தல் பணியை சிறப்பாக திமுக செய்து இருக்கிறது. ஆனால் முடிவு ஏமாற்றத்தைத்தான் அவர்களுக்கு கொடுக்கும் என்று விமர்சித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வரும் திங்கள் கிழமை (பிப்.27) சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில், பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது. இதனால், இறுதி கட்ட அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக ஆளும் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்காக திமுக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

திமுகவுக்கு வெற்றி கிடைக்காது

திமுகவுக்கு வெற்றி கிடைக்காது

திமுகவின் மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் முகாமிட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல், அதிமுக வேட்பாளர் கே.எஸ் தென்னரசுவிற்கு ஆதரவாக அக்கட்சியின் மூத்த தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தேர்தல் பணியை திமுக சிறப்பாக செய்து இருக்கிறது. ஆனால், அவர்களுக்கு வெற்றி கிடைக்காது என விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செல்லூர் ராஜூ கூறியதாவது:-

போட்டி போட்டு கொடுக்கிறார்கள்

போட்டி போட்டு கொடுக்கிறார்கள்

தேர்தல் ஆணையம் கண்ணை மூடிக்கொண்டு விட்டது என்றுதான் தெரிகிறது. நேற்று கூட கொலுசு கொடுத்தார்கள். விளக்கு கொடுத்து இருக்காங்க... குக்கர் கொடுத்து இருக்காங்க...பரிசு மழை கொட்டுது... கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது. கூரையை பிய்த்துக்கொண்டு கொட்டும் என்பார்கள் அல்லவா.. இடைத்தேர்தல் என்றாலே பரிசு மழை கொட்டுகிறது. ஆளும் திமுகவின் ஒவ்வொரு அமைச்சர்களும் போட்டிக்கொண்டு கொடுக்கிறார்கள்.

எப்போதும் கதவை திறந்தே வைத்திருப்போம்

எப்போதும் கதவை திறந்தே வைத்திருப்போம்

இன்னும் மூன்று நாள் இருக்கிறது. மூன்று நாளில் என்ன என்ன பரிசு வரும் என்று மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள். ஈரோடு தொகுதி மக்கள் யாரும் தூங்குவது இல்லையாம்.. எப்போதும் கதவை திறந்தே வைத்திருப்போம். எப்போ கொடுக்க வேண்டும் என்றாலும் கொண்டு வந்து கொடுங்க என்று பூத் கமிட்டியில் உள்ள திமுக நிர்வாகிகளிடம் சொல்லும் அளவுக்கு மக்களும் திமுகவும் ரொம்ப பரிட்சயம் ஆகிட்டாங்க..அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். இதனால், எதுவும் பயன்கிடைக்குமா.. நிச்சயம் கிடைக்காது. வெற்றி கிடைக்குமா? என்றால் நிச்சயம் கிடைக்காது.

பவர் கட் வந்து விட்டது

பவர் கட் வந்து விட்டது

ஆப்ரேஷன் சக்சஸ் பேஷண்ட் டைடு என்று சொல்வார்கள் அல்லவா.. அதுபோலத்தான் அமையும். தேர்தல் பணியை சிறப்பாக திமுக செய்து இருக்கிறது. ஆனால் முடிவு ஏமாற்றத்தைத்தான் அவர்களுக்கு கொடுக்கும் என்று நாங்கள் கருதுகிறோம். மக்கள் மன்றம் நிச்சயமாக விழித்துக்கொள்ளும். இந்த தேர்தல் மிக மிக முக்கியமானது. தமிழக மக்களின் ஒட்டு மொத்த எண்ணங்களை மக்கள் பிரதிபலிக்க இருக்கிறார்கள். விலைவாசி உயர்வு, கோடைக்காலம் வருவதற்கு முன்பாகவே பவர் கட் வந்து விட்டது. மின் கட்டணத்தை உயர்த்தி விட்டார்கள். இதையெல்லாம் மக்கள் வெறுக்கிறார்கள்.

 27 ஆம் தேதிக்குப் பிறகு

27 ஆம் தேதிக்குப் பிறகு

விலைவாசி ஏறிவிட்டது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்தி விட்டார்கள். இத்தனையும் செய்து விட்டு இன்று கொண்டு வந்து பரிசுமழை கொடுக்கிறார்கள். இந்த அமைச்சர்களை எல்லாம் 27 ஆம் தேதிக்குப் பிறகு பார்க்க முடியுமா? கோட்டை பக்கம் போனால் பார்ப்பார்களா..என்பது எல்லாம் மக்களுக்கு தெரிகிறது. இங்க இருக்கிற லோக்கல் திமுக கவுன்சிலர்களைக் கூட பார்க்க முடிவது இல்லை. அமைச்சர்கள் எல்லாரும் இப்போது வருகிறார்கள். 27 ஆம் தேதிக்குப் பிறகு இவர்களை எல்லாம் பார்க்க முடியாது என்பதை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள் என்பதுதான் நிதர்சனமான உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+