ஈரோடு கிழக்கில் வெற்றி.. எம்எல்ஏவாக பதவியேற்றார் திமுகவின் விசி சந்திரகுமார்
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் விசி சந்திரகுமார் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவால் கடந்த ஆண்டு டிசம்பர் 14-ந் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து காலியாக இருந்த ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வி.சி.சந்திரகுமார்
வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி உள்பட 46 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று 91 ஆயிரத்து 558 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றார். நோட்டா-6,109- வாக்குகளுடன் மூன்றாம் இடம் பிடித்தது. இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற விசி சந்திரகுமார் இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பதவி ஏற்பு நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், கூட்டணி கட்சி தலைவர்களான காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முத்தரசன், சண்முகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பதவியேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த விசி சந்திரகுமார் எம்.எல்.ஏ கூறியதவது:- ஈரோடு கிழக்கில் பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு காரணம் முதல்வர் மு.க ஸ்டாலின் என உறுதியாக கூற முடியும். திராவிட மாடல் அரசின் திட்டங்களின் பலன்களை மக்கள் அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள். மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்த மக்களுக்கு நன்றி. எதிரிகள் ஒன்று சேர்ந்து வந்தாலும் தனியாக வந்தாலும் திமுக தயாராக உள்ளது
ஏற்கனவே ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர்கள் விட்டு சென்ற பணியை தொடர உள்ளேன். இந்த ஒருவருடத்தில் விட்டு சென்ற பணிகளை செய்வேன். பெரியாரை விமர்சித்தவர்களை மோசமான அரசியல்வாதியாக பார்க்கிறேன். இறந்தவர் குறித்து இப்படி பேசுவது சரியில்லை.
தவறுகளை சுட்டிக்காட்டலாம், அதை தவிர்த்துவிட்டு இறந்தவர்கள் குறித்து இப்படி கேவலமாக பேசுவது மனித பிறவியாக பார்க்க முடியாது. வெற்றிக்கனியாக எலுமிச்சம் கொடுத்தார்கள். குறை சொல்ல காரணம் இல்லாததால் எலுமிச்சை பழம் கையில் வைத்திருந்த படத்தை வைத்து அவதூறு பரப்புகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications