சைதாப்பேட்டை தேர்தல் ஞாபகம் இருக்கா? விதிமீறல் பற்றி பேச அதிமுகவுக்கு அருகதை இல்லை..மா.சுப்பிரமணியன்
தேர்தல் விதிமீறல்கள் பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பேசினார்.
ஈரோடு: ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் மா சுப்பிரமணியன் தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது தேர்தல் விதிமீறல்கள் பற்றி பேசுவதற்கு அதிமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை என்று பேசினார். மேலும் சைதாப்பேட்டை தேர்தலின் போது அதிமுக அமைச்சர்கள் என்ன செய்தார்கள் என்று மக்களுக்கு தெரியும் என்றும் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஈரோட்டில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வாக்கு சேகரிப்பில் மா சுப்பிரமணியன்
அந்த வகையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தீவிர பிரசாரம் செய்தார். ஈரோடு கமலா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு கை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் தி.மு.க. அரசின் சாதனை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினார். தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வரலாற்று வெற்றி பெறுவார்
ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஒவ்வொரு வீதியாக சென்று வாக்காளர்களை நேரடியாக சந்தித்து முதல்வரின் சாதனைகளை எடுத்து கூறி வாக்குகள் சேகரித்து வருகிறோம். முதல்வரை மக்கள் நன்கு உணர்திருக்கிறார்கள். அதனால் இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைப்பார்.

அதிமுகவுக்கு அருகதை கிடையாது
ஈரோடு கிழக்கு தொகுதியில் எந்தவொரு தேர்தல் விதிமுறைகளும் மீறப்படவில்லை. தொடர்ந்து தேர்தல் ஆணையம் கவனித்துக்கொண்டே தான் இருக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக யார் புகார் அளிக்கிறாங்க என்று பார்க்க வேண்டும். சைதாப்பேட்டை தேர்தலின் போது அதிமுக அமைச்சர்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று ஓட்டு போட்டதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். அந்த நேரத்தில் தமிழகம் பீகாராக மாறியது என செய்திகள் வெளியாகியிருந்தது. இதனால் தேர்தல் விதிமீறல் பற்றி பேச அதிமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது.

2 பெரிய பஸ் நிலையங்கள்
ஈரோடு வஉசி பூங்காவில் சிறுவர்களுக்கான விளையாட்டு திடல், விளையாட்டு மைதானம், நடைபயிற்சி மையம், குடிநீர்த்தேக்க தொட்டி இப்படி பல்வேறு வசதிகள் இருக்கிறது. இதற்கெல்லாம் அடித்தளம் போட்டு கொடுத்தவர் தந்தை பெரியார். அவர் நகர்மன்றத் தலைவராக இருந்தபோது தான் 5 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது ஈரோட்டை மாநகராட்சியாக அறிவித்தார். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ஈரோடு மாநகராட்சி பகுதியில் 2 இடங்களில் பெரிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

தேர்தல் முடிந்ததும்..
இதேபோல் பல்வேறு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக ரூபாய் 480 கோடியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல் தமிழகத்திலேயே முதன்மை மாநகராட்சியாக ஈரோரை தரம் உயர்த்துவதற்காக தேர்தல் முடிந்ததும் ரூபாய் 500 கோடி நிதியை முதல்வர் மு.க ஸ்டாலின் ஒதுக்க இருக்கிறார். இவ்வாறு அவர் பேசினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications