பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தப்பி தவறி கூட இந்த தவறை செஞ்சுடாதீங்க.. சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
ஈரோடு: பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பகிர்வதை தவிர்க்க வேண்டும் என்று ஈரோடு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தகவல் தொழில்நுட்பம் இன்றைய சூழலில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் அதே அளவுக் ஹேக்கர்களும் வளர்ந்துவிட்டார்கள். நாம் பேஸ்புக் உள்ளிட்ட சமுக வலைதளங்களில் பதிவிடும் நம்முடைய செல்போன் நம்பர், பிறந்த தேதி, நம்முடைய புகைப்படம். நம் குழந்தைகளின் பிறந்த நாள், மனைவியின் பிறந்த நாள், பெற்றோரின் பெயர் உள்பட பல்வேறு விஷயங்களை வைத்தே நம்முடைய வரலாறை எடுத்து நம்முடைய கணக்கிலிருந்து பணம் பறிக்கும் சம்பவங்கள் நடக்கிறது. கூகுள் பே ஐடிக்களை சொன்னால் கூட அதை வைத்து மோசடி செய்ய முடியும் என்கிற அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.. பல்வேறு வகையில் ஆன்லைன் மோசடிகள் நடந்து வருகின்றன

பெரிய தொழில் அதிபர்கள், கடைகள் வைத்திருப்போர், வணிக நிறுவனங்களில் பெரிய வேலையில் இருப்போர், பெரும் பணக்காரர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபகிறார்கள் ஹேக்கர்கள் மறறும் மோசடியாளர்கள். குறிப்பாக பெண்களை குறிவைத்து மோசடி செய்வது அதிகமாகி உள்ளது. பெண்கள் தங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அதிக அளவு பதிவிடுகிறார்கள்.
ஆனால் அவர்களின் புகைப்படங்களை எடுத்து மார்ப்பிங் செய்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்போவதாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடியாளர்களும் இருக்கிறார்கள். எனவே பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஈரோடு சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஈரோடு சைபர் கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: "ஆன்லைன் வர்த்தகம், வேலை வாய்ப்பு, லோன் தருவது, கிரெடிட் கார்டு லிமிட் அதிகரித்து தருவது, தவறான பார்சல் அனுப்பி இருப்பது, பான் கார்டு, ஆதார் கார்டை வங்கி கணக்கில் சேர்ப்பது, வங்கி ஏ.டி.எம். கார்டை புதுப்பித்தல், மலிவு விலையில் பொருட்கள், ஆன்லைனில் விற்பனை போன்ற எந்த வகையான சைபர் கிரைம் குற்றங்களிலும் பணத்தை இழக்க வேண்டாம்.
மேலும் சமூக வலைத்தளங்களில் கிவ் -அப் போன்று வரும் லிங்கை கிளிக் செய்து பயணர் அடையாள பெயர் (யூசர் ஐடி) மற்றும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல் (ஓ.டி.பி.) எண் பகிர்வது, சமூக வலைத்தளங்களில் தன் புகைப்படங்களை அனைவரும் பார்க்கும்படி பொதுவாக பகிர்வதை தவிர்க்க வேண்டும். ஆன்லைன் மோசடியில் பணம் இழப்பு ஏற்பட்டவுடன் அல்லது 24 மணி நேரத்திற்குள் சைபர் கிரைம் உதவி எண் 1930-க்கு புகார் அளிக்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications