"நீட் தேர்வு" நாங்கள் நாடகம் ஆடவில்லை..எடப்பாடி செய்தது என்ன? லிஸ்ட்போட்டு விமர்சித்த கேஎஸ் அழகிரி
ஈரோடு: நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி மாதிரி நாங்கள் நாடகம் ஆடவில்லை. கடுமையாக எதிர்த்து இருக்கிறோம். மத்திய அரசுக்கு நாங்கள் எங்களுடைய அழுத்தங்களை கொடுத்து இருக்கிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி கூறியுள்ளார்.
ஈரோட்டில் அரசியல் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ் அழகிரி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகே எஸ் இளங்கோவனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஈரோட்டில் கடந்த முறை இரட்டை இலை சின்னம் தான் தோல்வி அடைந்தது. போன முறை அவர்கள் வேறு சின்னத்தில் நிற்கவில்லை.

எடப்பாடி மாதிரி நாடகம் ஆடவில்லை
அதே இரட்டை இலை சின்னத்தில்தான் நின்றார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் எடப்பாடி மாதிரி நாங்கள் நாடகம் ஆடவில்லை. கடுமையாக எதிர்த்து இருக்கிறோம். மத்திய அரசுக்கு நாங்கள் எங்களுடைய அழுத்தங்களை கொடுத்து இருக்கிறோம். எடப்பாடி என்ன செய்தார். சட்டமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். உள்துறைக்கு அனுப்பினார். இரண்டே நாளில் உள்துறை திருப்பி அனுப்பிவிட்டது. ஆனால் இரண்டு ஆண்டு காலம் சட்டமன்றத்திற்கு கூட அந்த உண்மையை அவர் சொல்லவில்லை. மறைத்து விட்டார்.

நாங்கள் அப்படி இல்லை
சட்டமன்றத்திற்கு மறைக்கும் குற்றத்தை எடப்பாடி செய்தார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. தீர்மானம் நிறைவேற்றினோம். குடியரசு தலைவரை சந்தித்து இருக்கிறோம். பிரதமரை அமரவைத்து பொதுக்கூட்டத்தில் முதல்வர், இதெல்லாம் எங்கள் கோரிக்கை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதற்கு கூட பாஜக கோபித்துக்கொண்டது. உரிமைக்காக குரல் கொடுத்து இருக்கிறோம். எங்கள் குரல் எடுபடும். மக்கள் மன்றத்திலும் எடுபடும். நிச்சயமாக மோடி அதற்கு தலைவணங்குவார்.

ஒரே நாளில் யாராலும் செய்ய முடியாது
விவசாய சட்டங்களுக்கு எதிராக நாடே போராடியது. அப்போது அதை திரும்ப பெற மாட்டேன் என்று சொன்னவர் சத்தம் போடாமல் ஒருநாள் திரும்ப பெற்றார். அதேபோலத்தான் இதுவும் நடைபெறும். அரசு ஊழியர்களின் கோரிக்கையை அரசாங்கம் பரிவோடு பார்க்கிறது. எல்லாவற்றையும் ஒரே நாளில் யாராலும் செய்ய முடியாது. ஐந்து ஆண்டுகளில் செய்ய வேண்டியதை ஒரே நாளில் யாராலும் செய்ய முடியாது. பொருளாதார நிலை மேம்பட மேம்பட ஒவ்வொன்றாக மெல்ல மெல்ல நடைபெறும்.

சிறு கல்லை கூட தூக்கி போடவில்லை
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநர் பிரதமர் என்ன செய்கிறார்கள். இந்த சமூகம் எவ்வளவு சீரழிகிறது. அதற்காக ஒரு மாநில அரசு போராடுகிற போது அதை கையெழுத்திட்டு சட்டமாக்கினால் என்ன? மத்திய நிதி அமைச்சகம் செயல் இழந்த ஒரு நிதி அமைச்சகம். அவர்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு சிறு கல்லை கூட தூக்கி போடவில்லை. இந்தியாவுடைய தேசிய வருமானம் குறைந்துள்ளது. அவர்கள் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் எல்லாம் தோல்வி அடைந்து இருக்கின்றன.

பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது
தங்களுடைய நண்பர்களுக்கு பணியாற்ற வேண்டும் என்று இந்த அரசாங்கம் கருதுவதுதான் இதற்கு காரணம். சில முதலாளிகளுக்கு 10 லட்சம் கோடி வங்கிக் கடனை தள்ளுபடி செய்து இருக்கிறார்கள். இதற்கு பிரதமரும் பதில் சொல்லவில்லை. நிதி அமைச்சரும் பதில் சொல்லவில்லை. இதில் என்ன தர்மம் இருக்கிறது. எனவே அவர்களால் இந்த நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications