இப்பவும் ஜெயிச்சது நாங்க தானே.. "சைலண்டா பிடிச்சோம்ல".. எப்படி? கேபி முனுசாமி சொல்லும் பாயின்ட்!
இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த வேலையும் இல்லை எனக் கூறியுள்ளார் அதிமுக மாஜி அமைச்சர் கேபி முனுசாமி.
ஈரோடு : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தோல்வி என்றாலும் அரசியல் ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். அதிமுக எந்த சலசலப்பும் இன்றி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என மீண்டும் நிரூபித்துள்ளோம் எனக் கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மிகப்பெரிய வித்தியாசத்தில் அதிமுக தோல்வியடைந்துள்ள சூழலில், ஓபிஎஸ் தரப்பினர், சசிகலா என பலரும் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும், ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஒற்றுமையாக இல்லாததே தோல்விக்குக் காரணம் என விமர்சித்தார். ஆனாலும் இதுவே அரசியல் ரீதியாக எங்களுக்கு வெற்றிதான் என்கிறது ஈபிஎஸ் அணி.

ஈரோடு முடிவின் தாக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இருவருக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 66,575. கடந்த முறை 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி வாய்ப்பை இழந்த நிலையில் இந்த முறை திமுக வேட்பாளர் பெற்ற வாக்குகளில் பாதியைக் கூட பெறமுடியாமல் தோல்வியடைந்துள்ளார் அதிமுக வேட்பாளர். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் அணியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

கடும் விமர்சனங்கள்
ஈரோட்டில் அதிமுக படுதோல்வி அடையக் காரணம் எடப்பாடி பழனிசாமியும் அவர்களை சேர்ந்தவர்களும் தான், அவர்களின் ஆணவப்போக்கு காரணமாகவே அதிமுக டெபாசிட் பெறவே போராடவேண்டிய நிலை வந்தது என ஓபிஎஸ் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் வேதனை தெரிவித்தார். ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக இந்த இடைத்தேர்தலை சந்தித்து இருந்தால் அதிமுக வெற்றி பெற்று இருக்கும் என சசிகலா விமர்சித்தார்.

சீண்டிய அண்ணாமலை
இடைத்தேர்தல் தோல்வி குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், அதிமுக ஒன்று சேராததே தேர்தல் தோல்விக்கு காரணம். தேர்தலில் யார் நிற்க வேண்டும், யாரை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என தேர்தலுக்கு முன்பே அதிமுகவில் பிரச்சனை எழுந்தது. இரட்டை இலை சின்னத்தில் நிற்க வேண்டுமா அல்லது சுயேச்சை சின்னத்தில் நிற்க வேண்டுமா என்ற குழப்பமும் இருந்தது. இடைத்தேர்தலில் வலிமையுடன் போட்டியிட வேண்டும் என அப்போதே கூறினோம். ஒரே சின்னத்தில் ஒரு கட்சியை சேர்ந்த வேட்பாளர் நிற்க வேண்டும் என்பதை பாஜக முன்பே கூறியது. ஆனால் இதை சொன்னதற்காக எங்கள் மீது சிலர் கோபப்பட்டனர். ஆளும்கட்சியை எதிர்க்க எவ்வளவு பலம் தேவை என்பதை இடைத்தேர்தல் உணர்த்துகிறது எனத் தெரிவித்தார்.

கேபி முனுசாமி
இந்நிலையில், கிருஷ்ணகிரியில் அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி. இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு தோல்வி என்றாலும் அரசியல் ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆளுங்கட்சியினர் 20க்கும் மேற்பட்ட அமைச்சர்களை வைத்து ஈரோடு தொகுதியில் தேர்தல் பரப்புரை செய்து வெற்றி பெற்றார்கள். ஆனால் அதிமுக எந்த சலசலப்பும் இன்றி போட்டியிட்டு இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. எனவே தமிழ்நாட்டின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என மீண்டும் நிரூபித்துள்ளோம்.

அரசியல் ரீதியாக வெற்றி
அந்த வகையில் அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக இந்த தேர்தல் வெற்றி தான். இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த வேலையும் இல்லை. மேலும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிளவால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. தமிழ்நாட்டின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என்று மீண்டும் நிரூபித்துள்ளோம். அடுத்த தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

அரசியல் ரீதியாக வெற்றி
அந்த வகையில் அதிமுகவுக்கு அரசியல் ரீதியாக இந்த தேர்தல் வெற்றி தான். இந்த தேர்தலில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எந்த வேலையும் இல்லை. மேலும் ஈபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஏற்பட்ட பிளவால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுவது அவருடைய தனிப்பட்ட கருத்து. தமிழ்நாட்டின் வலுவான எதிர்க்கட்சி அதிமுக தான் என்று மீண்டும் நிரூபித்துள்ளோம். அடுத்த தேர்தலில் எங்கள் தலைமையில் தான் கூட்டணி கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவார்கள்.

திமுகவும் தான் டெபாசி இழந்தது
கடந்த 2017ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக போட்டியிட்டு டெபாசிட் இழந்தது. ஆனால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாங்கள் இரண்டாவது இடம்பிடித்துள்ளோம். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் வெற்றி ஒருபோதும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்காது. இது ஒரு தொகுதியில் நடக்கக்கூடிய தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் என்பது நாடு முழுவதும் நடைபெறும். ஆகவே, இந்த தேர்தலின் வெற்றி ஒருபோதும் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
-
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
தவெக பக்கம் ஓடும் அதிமுக நிர்வாகிகள்.. 6 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க எடப்பாடி பழனிசாமி முடிவு? -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைகிறாரா செல்லூர் ராஜு? பேச்சே கிடையாது.. விரலிலேயே சிக்னல்! -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி -
எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக்.. விஜயபாஸ்கரை தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய ஆர்.வி.உதயகுமார் -
"மதிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா" அதிமுகவில் இருந்து விலகுவதை சூசகமாக சொன்ன விஜயபாஸ்கர்? -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன?











Click it and Unblock the Notifications